மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் விழா 2024 தொடர்பான முன் நிகழ்வுகளை, மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ஆகியவை ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து, 2024 டிசம்பர் 01 அன்று நடத்தவுள்ளன. கலாச்சார ரீதியாக வளமான இந்த இசை நிகழ்ச்சிகள் ஆந்திரா முழுவதும் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்படும். இது இசை, பாரம்பரியம், பக்தியை ஒன்றிணைத்து பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும். கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம், தெலுங்கு கலாச்சாரத்தின் வளமான மரபுகளைக் கொண்டாடுகிறது. இது புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், இளைய தலைமுறையினருக்கு இந்த புகழ்பெற்ற பாரம்பரியங்களைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது அதன் இரண்டாவது பதிப்பில், இந்த ஆண்டின் கிருஷ்ணவேணி சங்கீத நீரரஜனம் மைசூரு சங்கீத சுகந்தாவின் வெற்றியைத் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்திய இசையின் ஆழமான பாரம்பரியத்தை எதிரொலிக்கும் சில சிறந்த பாரம்பரிய இசைக்கலைஞர்களின் கலைத்திறனைக் காண இந்த நிகழ்வுகள் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை இது வழங்கும். ஒவ்வொரு கச்சேரியும் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் முக்கிய கோயில்கள், பாரம்பரிய தளங்களின் ஆன்மீக சூழலில் பார்வையாளர்களை இது கவரும். முன்நிகழ்வுகளின் அட்டவணை ஸ்ரீகாகுளம்: இடம்: ஸ்ரீ சூரியநாராயண சுவாமி வாரி தேவஸ்தானம், அரசவல்லி, ஸ்ரீகாகுளம் நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: மண்டா சுதா ராணி ராஜமகேந்திரவ் (ராஜமுந்திரி): இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னம் கலா கேந்திரம், சேஷய்யா மேட்டா, ராஜமகேந்திரவ் நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: துளசி விஸ்வநாத் மங்களகிரி: இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மெயின் ஆர்.டி, மங்களகிரி, குண்டூர் (மாவட்டம்), ஆந்திரா. நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை தீம்: நரசிம்ம சுவாமி பற்றிய கிருதிகள் கலைஞர்கள்: எம்.நாராயணசர்மா, எம்.யமுனா ராமன் அஹோபிலம்: இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், அஹோபிலம் – 518545, நந்தியால் (மாவட்டம்) நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: தீபிகா வரதராஜன் திருப்பதி: இடம்: ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம், மகளிர் பல்கலைக்கழகம், திருப்பதி நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: பாலகிருஷ்ண பிரசாத் காரு கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் விழா பற்றி: பாரம்பரியத்தையைத் அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களையும் ஊக்குவிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை நோக்கிய முயற்சியாக, கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனத்தின் இசை விழாவானது, பாரம்பரிய இசையின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதையும், ஹரிகதை, நாமசங்கீர்த்தனா ஆகிய மரபுகளில் கவனம் செலுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் 2024 இசை விழா என்பது 2024 டிசம்பர் 6 முதல் 8 வரை மூன்று நாள் நிகழ்வாகும். இந்த 3 நாள் நிகழ்வு விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இது கர்நாடக இசைக்கு ஆந்திராவின் பங்களிப்பையும் மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது. திருவிழாவின் இந்த இரண்டாவது பதிப்பு இப்பகுதியின் பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள், ஜவுளிகளை மேலும் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இது ஆந்திராவை ஒரு முக்கிய கலாச்சார இடமாக நிலை நிறுத்துகிறது.
Read More »மத்திய அறங்காவலர் வாரியத்தின் (CBT), 236 – வது கூட்டம் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது
மத்திய அறங்காவலர் வாரியத்தின் 236-வது கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சரும், மத்திய அறங்காவலர் வாரியத்தின், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் துணைத் தலைவருமான செல்வி ஷோபா கரண்ட்லஜே, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளரும், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் மத்திய தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவருமான திருமதி சுமிதா தவ்ரா, மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் மற்றும் உறுப்பினர் செயலர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய அறங்காவலர் வாரியத்தின் கடைசி கூட்டத்திற்குப் பிறகு தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தானியங்கி முறையில் உரிமைத் தொகை மீதான கோரிக்கைகளுக்கு சேமநல நிதியில் சேமிக்கப்பட்டுள்ள தொகைகளை வழங்கும் வசதியைப் பெறுவதற்கான உச்சவரம்புத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இது வீட்டுவசதி, திருமணம், கல்வி போன்ற செலவுகளுக்கான முன்பணத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.15 கோடி ரூபாய் அளவிலான உரிமை கோரல் மனுக்களுக்கு தானியங்கி முறையில் தீர்வு செய்யப்பட்டுள்ளன. 2024 – ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உரிமை கோரல் மனுக்களின் நிராகரிப்பு விகிதம் 14% ஆக குறைந்துள்ளதற்கு வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது. 2023-24 – ம் நிதியாண்டில், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு 1.82 லட்சம் கோடி ரூபாய்க்கான 4.45 கோடி உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.57 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் 3.83 கோடி ரூபாய்க்கான உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளன. CITES 2.01 திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் [EPFO] வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2.01 புதிய இயக்க முறைமை பயன்படுத்தப்படுகிறது, இது இழப்பீட்டுச் செயல்முறையை எளிதாக்கும். புதிய மென்பொருள் தொகுப்பு பொதுவான கணக்கு எண் (யுஏஎன்) அடிப்படையிலான கணக்கியலை சாத்தியமாக்கும், இதன் விளைவாக ஒரு உறுப்பினர், ஒரு கணக்கு முறை உருவாகும், இதன் மூலம் இழப்பீடு தீர்ப்பதில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும். சீர்திருத்தம் குறித்த ஆலோசனைகளுக்குப் பின்னர் மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டத்தில் பல முன்னோடி முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் வாரியம் எடுத்த முக்கிய முடிவுகள் வருமாறு: உறுப்பினர்களின் நலனுக்கான முடிவுகள்: • தொழிலாளர் சேமநல நிதிச் சட்டம் 1952 – ன் பிரிவு 60 (2) (பி) – ன் குறிப்பிடத்தக்க திருத்தத்திற்கு மத்திய அறங்காவலர் வாரியம் ஒப்புதல் அளித்தது. தற்போதுள்ள விதிகளின்படி, மாதத்தின் 24- ம் தேதி வரை தீர்க்கப்பட்ட உரிமைகோரலுக்கு, முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி செலுத்தப்படும். இனி செட்டில்மென்ட் தேதி வரை உறுப்பினருக்கு வட்டி வழங்கப்படும். இதன் மூலம் உறுப்பினர்களுக்கு நிதிப் பயன் கிடைப்பதுடன், குறைகளும் குறையும். தற்போது வரை, உறுப்பினர்களுக்கு வட்டி இழப்பைத் தவிர்ப்பதற்காக மாதந்தோறும் 25 ஆம் தேதி முதல் இறுதி வரை வட்டி தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை. இந்த முடிவுக்குப் பிறகு, இந்த கோரிக்கைகள் முழு மாதத்திற்கும் செயலாக்கப்படும், இது நிலுவையில் உள்ள உரிமை கோரல் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். சரியான நேரத்தில் தீர்வு, வளங்களின் சிறந்த பயன்பாடு ஆகியவற்றிற்கு இது வழிவகுக்கும். திறமையான, வெளிப்படையான மற்றும் உறுப்பினரை மையமாகக் கொண்ட சேவை வழங்கலுக்கான தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் [EPFO] உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
Read More »உலக எய்ட்ஸ் தினம் -இந்தூரில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமை வகிக்கிறார்
உலக எய்ட்ஸ் தினம் 2024-ஐ முன்னிட்டு, 2024 டிசம்பர் 01 அன்று மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, மத்தியப் பிரதேச மாநிலம் இந்நூலில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 1 அன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு வகையில் ஹெச்ஐவி, எய்ட்ஸுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஹெச்ஐவி / எய்ட்ஸ் மீதான ஐநா திட்டத்தின் கருப்பொருளான ‘உரிமைகளை எடுத்துக்கொள்’ என்ற கருப்பொருளுடன் இந்த உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹெச்ஐவி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவது, அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைகள், விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரம் – குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினத்தை கடைபிடித்து வருகிறது. சமூகம், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஹெச்ஐவி / எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவரும் உலகளாவிய இலக்கை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Read More »ভূৱনেশ্বৰত ৩০ নৱেম্বৰৰ পৰা ১ ডিচেম্বৰলৈ অনুষ্ঠিতব্য আৰক্ষী সঞ্চালক প্ৰধান/মহাপৰিদৰ্শকৰ সৰ্বভাৰতীয় সন্মিলনত অংশগ্ৰহণ কৰিব প্ৰধানমন্ত্ৰীয়ে
ওড়িশাৰ ভূৱনেশ্বৰৰ ‘লোকসেৱা ভৱন’ৰ ‘ৰাজ্যিক সন্মিলন কেন্দ্ৰ’ত ৩০ নৱেম্বৰৰ পৰা ১ ডিচেম্বৰ, ২০২৪লৈ অনুষ্ঠিত হ’বলগীয়া ‘আৰক্ষী সঞ্চালক প্ৰধান/মহাপৰিদৰ্শকৰ সৰ্বভাৰতীয় সন্মিলন’ত প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে অংশগ্ৰহণ কৰিব। ২৯ নৱেম্বৰৰ পৰা ১ ডিচেম্বৰ, ২০২৪ লৈ অনুষ্ঠিত হ’বলগীয়া তিনিদিনীয়া সন্মিলনখনত সন্ত্ৰাসবাদ বিৰোধী, বাওঁপন্থী উগ্ৰবাদ, উপকূলীয় সুৰক্ষা, নতুন অপৰাধ আইন, নিচাজাতীয় সামগ্ৰীৰ প্ৰতিৰোধকে ধৰি ৰাষ্ট্ৰীয় …
Read More »કેન્દ્રીય ટેક્સટાઈલ મંત્રી ગિરિરાજસિંહના અધ્યક્ષસ્થાને સુરતમાં ‘ભારત ટેક્સ-2025’ અંતર્ગત રોડ શો યોજાયો
પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીનાં 5એફનાં વિઝનથી પ્રેરિત અને ફેબ્રુઆરીમાં નવી દિલ્હી અને નોઈડામાં આયોજિત થનારા દેશના સૌથી મોટા ગ્લોબલ ટેક્સ્ટાઈલ એક્સ્પો ‘ભારત ટેક્સ-2025’ માટે કેન્દ્રીય ટેક્સટાઈલ મંત્રીશ્રી ગિરિરાજસિંહના અધ્યક્ષસ્થાને સુરત ખાતે રોડ શો યોજાયો હતો. આ પ્રસંગે કેન્દ્રીય જલશક્તિ મંત્રી શ્રી સી.આર. પાટીલ અને ટેક્સ્ટાઈલ મંત્રાલયના વરિષ્ઠ અધિકારીઓ પણ ઉપસ્થિત રહ્યા હતા. ટેક્સટાઇલ …
Read More »ડિજિટલ ઈન્ડિયા સ્ટેટ કન્સલ્ટેશન વર્કશોપ લખનઉ, ઉત્તર પ્રદેશમાં આયોજિત; NeGDએ ડિજિટલ ઈન્ડિયા પ્રોગ્રામ હેઠળ મુખ્ય પહેલોની જાણકારી આપી
રાષ્ટ્રીય ઈ-ગવર્નન્સ ડિવિઝન (NeGD), ઈલેક્ટ્રોનિક્સ અને ઈન્ફોર્મેશન ટેક્નોલોજી મંત્રાલય (MeitY) દ્વારા ઉત્તર પ્રદેશ સરકાર અને ઉત્તર પ્રદેશ ડેવલપમેન્ટ સિસ્ટમ્સ કોર્પોરેશન લિમિટેડ (UPDESCO)ના સહયોગથી 25 નવેમ્બર, 2024ના રોજ લખનઉમાં ડિજિટલ ઈન્ડિયા સ્ટેટ કન્સલ્ટેશન વર્કશોપનું આયોજન કરવામાં આવ્યું હતું. ઉત્તર પ્રદેશ સરકારના અધિકારીઓએ વર્કશોપમાં ભાગ લીધો હતો જેનું ઉદ્ઘાટન ઉત્તર પ્રદેશ સરકારના …
Read More »ନଭେମ୍ବର ୩୦ରୁ ଡିସେମ୍ବର ପହିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭୁବନେଶ୍ୱରରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ପୁଲିସ ମହାନିର୍ଦ୍ଦେଶକ/ମହାନିରୀକ୍ଷକଙ୍କ ସର୍ବଭାରତୀୟ ସମ୍ମିଳନୀରେ ଯୋଗଦେବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ
ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ଭୁବନେଶ୍ୱରସ୍ଥିତ ଲୋକସେବା ଭବନ ସମ୍ମିଳନୀ କକ୍ଷରେ ନଭେମ୍ବର ୩୦ରୁ ୧ ଡିସେମ୍ବର ୨୦୨୪ ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ପୁଲିସ ମହାନିର୍ଦ୍ଦେଶକ/ମହାନିରୀକ୍ଷକମାନଙ୍କ ସର୍ବଭାରତୀୟ ସମ୍ମିଳନୀରେ ଯୋଗଦେବେ । ନଭେମ୍ବର ୨୯ରୁ ଡିସେମ୍ବର ପହିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ଏହି ତିନି ଦିନିଆ ସମ୍ମିଳନୀରେ ଆତଙ୍କବାଦ ମୁକାବିଲା, ବାମପନ୍ଥୀ ଉଗ୍ରବାଦ, ଉପକୂଳ ସୁରକ୍ଷା, ନୂଆ ଅପରାଧ ଆଇନ, ନାର୍କୋଟିକ୍ସ ସମେତ ଜାତୀୟ ନିରାପତ୍ତାର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ …
Read More »पंतप्रधान भुवनेश्वर येथे 30 नोव्हेंबर ते 1 डिसेंबर या कालावधीत होणाऱ्या अखिल भारतीय पोलीस महासंचालक/महानिरीक्षकांच्या परिषदेला पंतप्रधान राहणार उपस्थित
पंतप्रधान नरेंद्र मोदी हे 30 नोव्हेंबर ते 1 डिसेंबर 2024 या कालावधीत ओडिशा येथे आयोजित अखिल भारतीय पोलीस महासंचालक/महानिरीक्षक परिषद 2024 ला उपस्थित राहणार आहेत. भुवनेश्वरमधील लोकसेवा भवनातील राज्य संमेलन केंद्रात या परिषदेचे आयोजन करण्यात आले आहे. सदर परिषद ही दिनांक 29 नोव्हेंबर ते 1 डिसेंबर 2024 अशी तीन दिवस चालणार असून यामध्ये नवीन फौजदारी कायदे, दहशतवादाला प्रतिबंध, …
Read More »இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக 3வது இந்தியா-தான்சானியா கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது
இந்தியா-தான்சானியா கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 3வது கூட்டம் 2024, நவம்பர் 26 அன்று கோவாவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, வளர்ந்து வரும் பயிற்சி கூட்டாண்மை, ராணுவத்துடன் ராணுவம் ஒத்துழைப்பு, கடல் மற்றும் பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பு உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது பற்றி இரு தரப்பினரும் விவாதித்தனர். முந்தைய கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட முடிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கான புதிய பகுதிகளையும் ஆய்வு …
Read More »২৬-২৯ নৱেম্বৰত কাজিৰঙাত আন্তঃৰাষ্ট্ৰীয় টুৰিজিম মাৰ্টৰ আয়োজন পৰ্যটন মন্ত্ৰালয়ৰ
অসমৰ কাজিৰঙাত অহা ২৬-২৯ নৱেম্বৰত দ্বাদশ আন্তঃৰাষ্ট্ৰীয় টুৰিজিম মাৰ্ট (ITM) অনুষ্ঠিত হ’ব। ভাৰত চৰকাৰৰ পৰ্যটন মন্ত্ৰালয়ে ঘৰুৱা আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় উভয় পৰ্যটকৰ বাবে উত্তৰ-পূৰ্বাঞ্চলৰ পৰ্যটনৰ সম্ভাৱনাক আলোকপাতৰ উদ্দেশ্যেৰে বছৰি আন্তঃৰাষ্ট্ৰীয় টুৰিজিম মাৰ্ট অনুষ্ঠিত কৰি আহিছে। এই অনুষ্ঠানে উত্তৰ-পূৰ্বাঞ্চলৰ আঠোখন ৰাজ্য যথা— অসম, অৰুণাচল প্ৰদেশ, মণিপুৰ, মেঘালয়, মিজোৰাম, নাগালেণ্ড, ত্ৰিপুৰা আৰু ছিকিমৰ …
Read More »