सोमवार, दिसंबर 23 2024 | 09:41:09 AM
Breaking News
Home / Tag Archives: Language Appreciation Week

Tag Archives: Language Appreciation Week

மொழி கெளரவிப்பு வார விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அசாம் மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, மொழி கெளரவிப்பு வார விழாவின் #BhashaGauravSaptah முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிராந்தியத்தின் வளமான மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அங்கீகாரம் என்ற வகையில், அசாமம் மொழி அண்மையில்  செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைச் சுற்றியுள்ள உற்சாகத்தை அவர் கொண்டாடினார். அசாமின் வளமான மொழி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு வார கால கொண்டாட்டமான மொழி கெளரவிப்பு வாரம் தொடங்குவதாக அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று வெளியிட்ட ட்விட்டர்  செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது: “மொழி கெளரவிப்பு வாரம் #BhashaGauravSaptah ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். அசாம் மொழிக்கு  செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதில் உள்ள மக்களின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது. என் வாழ்த்துகள். இந்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், மக்களுக்கும் அசாம் கலாச்சாரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆழப்படுத்தட்டும். அசாமுக்கு வெளியே உள்ள அசாமிய மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

Read More »