सोमवार, दिसंबर 23 2024 | 09:44:19 AM
Breaking News
Home / Tag Archives: Mineral production

Tag Archives: Mineral production

சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி 100 மில்லியன் டன்னைத் தாண்டியது

நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2024 நவம்பர் 08, நிலவரப்படி, தனிப்பயன் மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 100 மில்லியன் டன்களை (MT) தாண்டியுள்ளது, இது பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி அடைந்த மற்றும் தற்சார்பு பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த அளவு முந்தைய நிதியாண்டை விட கிட்டத்தட்ட 100 நாட்கள் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது 2024-25-ம் ஆண்டில் 170 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உற்பத்தி இலக்கை அடைவதில் நிலக்கரி அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த சாதனை நிலக்கரித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை நிரூபிக்கிறது. அத்துடன் எரிசக்தி சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நாட்டின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சயைப் பிரதிபலிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சுரங்க நடைமுறைகளை உறுதி செய்யும் அதே வேளையில், வளர்ச்சியை பராமரிப்பதில் நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

Read More »