பீகார் மதுபானியில், அம்மாநிலத் துணை முதலமைச்சர் திரு. சாம்ராட் சவுத்ரி முன்னிலையில், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஸ்ரீ ராம்பிரீத் மண்டல்; திரு சஞ்சய் குமார் ஜா; டாக்டர் அசோக் குமார் யாதவ்; மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) திரு வினோத் நாராயண் ஜா; ஸ்ரீ சுதான்ஷு சேகர்; மற்றும் ஸ்ரீ கன்ஷ்யாம் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதிச் சேவைகள் துறை (DFS) செயலாளர் திரு. எம். நாகராஜு, நபார்டு வங்கித் தலைவர் திரு கே வி ஷைஜி; சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் திரு எம்.வி.ராவ்,; இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு மனோஜ் மிட்டல்; நிதிச் சேவைகள் துறைத் தலைவர் கூடுதல் செயலாளர் திரு எம்.பி.டாங்கிராலா மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மாவட்ட மேலாண்மை இயக்குநர் திரு சுரிந்தர் ராணா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மதுபானி நகருக்கு வருகை தந்ததற்காக மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்த திரு சாம்ராட் சௌத்ரி, குறிப்பாக அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கான மத்திய நிதியமைச்சரின் மேற்பார்வையில் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கடனுதவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சில மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. பல்வேறு வங்கிகள் மூலம் 50,294 பயனாளிகளுக்கு 1,121 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டது. பல்வேறு ஊரக சாலை திட்டங்களுக்கு நபார்டு மற்றும் சிட்பி வாயிலாக முறையே 155.84 கோடி ரூபாய் மற்றும் 75.52 லட்சம் ரூபாய் அளவிற்கு அனுமதி அளிக்கப்பட்டன. பின்னர், வங்கிகள் மற்றும் நபார்டு வங்கியால் கடனுதவி அளிக்கப்பட்ட தொழில்முனைவோரின் பல்வேறு உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட சுமார் 25 அரங்குகளை திருமதி சீதாராமன் பார்வையிட்டார். மைதிலி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தலா ஐந்து அரசியல் சாசன பிரதிகளை மத்திய நிதியமைச்சர் வழங்கினார். பள்ளிகளில், குறிப்பாக மகளிர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் வங்கிகள், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கியுள்ளன. ஆம்புலன்ஸை வாகனத்தையும் மத்திய நிதியமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Read More »केंद्रीय वित्त आणि कॉर्पोरेट व्यवहार मंत्री निर्मला सीतारामन यांनी आज नवी दिल्ली येथे आशियाई पायाभूत गुंतवणूक बँक (एआयआयबी) संचालक मंडळाची घेतली भेट
केंद्रीय वित्त आणि कॉर्पोरेट व्यवहारमंत्री निर्मला सीतारामन यांनी आज नवी दिल्ली येथे आशियाई पायाभूत गुंतवणूक बँकेच्या (एआयआयबी) संचालकांची बैठक घेतली. या प्रतिनिधिमंडळात भारताच्या दौऱ्यावर आलेल्या बँकेच्या संचालक मंडळामधील 9 वेगवेगळ्या क्षेत्रांमधील 11 अधिकारी, बँक व्यवस्थापनातील वरिष्ठ प्रतिनिधी आणि कर्मचाऱ्यांचा समावेश होता. एआयआयबी आपल्या सदस्य राष्ट्रांमध्ये करत असलेल्या सध्याच्या आणि नियोजित …
Read More »தமிழ்நாடு உள்ளிட்ட தென் மண்டலத்தைச் சேர்ந்த ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் உள்ள 10 மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் மத்திய நிதி – கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரியும் மூத்த அதிகாரிகளும், நபார்டு, சிட்பி ஆகியவற்றின் பிரதிநிதிகளும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 10 மண்டல ஊரக வங்கிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், வணிக செயல்திறன், டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துதல், விவசாயக் கடன், சிறு தொழில்துறை கடன்கள் தொடர்பான நடவடிக்கைகளில் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதில் மண்டல ஊரக வங்கிகளின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, முத்ரா, பிரதமரின் விஸ்வகர்மா போன்ற மத்திய அரசின் பல்வேறு முதன்மைத் திட்டங்களின் கீழ் கடன் வழங்குவதை மண்டல ஊரக வங்கிகள், அவற்றின் ஆதரவு வங்கிகளின் உதவியுடன் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். பால்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தி, அடித்தள அளவிலான வேளாண் கடன் வழங்கலில் மண்டல ஊரக வங்கிகள் தங்கள் பங்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மண்டல ஊரக வங்கிகளின் நிதி செயல்திறன், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் கூறினார். தென் மண்டலத்தில் உள்ள இந்த வங்கிகள் 2024-ம் நிதியாண்டில் ரூ. 3,816 கோடி ஒருங்கிணைந்த லாபத்தை பதிவு செய்துள்ளன என்றும் இது அனைத்து மண்டல ஊரக வங்கிகளின் ஒருங்கிணைந்த லாபத்தில் 50% க்கும் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ‘ஒரு மாநிலம் – ஒரே மண்டல ஊரக வங்கி (RRB)’ என்ற கொள்கையின் அடிப்படையில் மண்டல ஊரக வங்கிகளை இணைப்பதற்கான முன்மொழிவு குறித்து மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது, நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கு வைப்புகளை (CASA) மேம்படுத்துவதன் முக்கியத்துவம் சுட்டிக் காட்டப்பட்டது. அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவைகள் தொடர்பான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, மத்திய அரசின் நிதி உள்ளடக்கத் திட்டங்களின் சாதனைகளுக்கு வங்கிகள் அதிகபட்சமாக பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Read More »ಕೇಂದ್ರ ಹಣಕಾಸು ಮತ್ತು ಕಾರ್ಪೊರೇಟ್ ವ್ಯವಹಾರಗಳ ಸಚಿವರಾದ ಶ್ರೀಮತಿ ನಿರ್ಮಲಾ ಸೀತಾರಾಮನ್ ಅವರು ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿಂದು ಕರ್ನಾಟಕ, ಆಂಧ್ರಪ್ರದೇಶ, ಕೇರಳ, ತಮಿಳುನಾಡು ಮತ್ತು ತೆಲಂಗಾಣ ಹಾಗೂ ಕೇಂದ್ರಾಡಳಿತ ಪ್ರದೇಶ ಪುದುಚೇರಿ ಸೇರಿದಂತೆ ದಕ್ಷಿಣ ವಲಯದ 10 ಪ್ರಾದೇಶಿಕ ಗ್ರಾಮೀಣ ಬ್ಯಾಂಕುಗಳ ಕಾರ್ಯಕ್ಷಮತೆಯ ಪರಿಶೀಲನಾ ಸಭೆಯ ಅಧ್ಯಕ್ಷತೆ ವಹಿಸಿದ್ದರು
ಕೇಂದ್ರ ಹಣಕಾಸು ಮತ್ತು ಕಾರ್ಪೊರೇಟ್ ವ್ಯವಹಾರಗಳ ಸಚಿವರಾದ ಶ್ರೀಮತಿ ನಿರ್ಮಲಾ ಸೀತಾರಾಮನ್ ಅವರು ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿಂದು ಕರ್ನಾಟಕ, ಆಂಧ್ರಪ್ರದೇಶ, ಕೇರಳ, ತಮಿಳುನಾಡು ಮತ್ತು ತೆಲಂಗಾಣ ಮತ್ತು ಕೇಂದ್ರಾಡಳಿತ ಪ್ರದೇಶ ಪುದುಚೇರಿಯನ್ನುನ್ನು ಒಳಗೊಂಡಿರುವ ದಕ್ಷಿಣ ವಲಯದ 10 ಪ್ರಾದೇಶಿಕ ಗ್ರಾಮೀಣ ಬ್ಯಾಂಕುಗಳ ಕಾರ್ಯಕ್ಷಮತೆಯನ್ನು ಪರಿಶೀಲಿಸಲು ಸಭೆ ನಡೆಸಿದರು. ಕೇಂದ್ರ ಹಣಕಾಸು ಖಾತೆ ರಾಜ್ಯ ಸಚಿವ ಶ್ರೀ ಪಂಕಜ್ ಚೌಧರಿ; ಹಣಕಾಸು ಸೇವೆಗಳ ಇಲಾಖೆ ಕಾರ್ಯದರ್ಶಿ ಶ್ರೀ ಎಂ. ನಾಗರಾಜು; ಇಡಿ, ಆರ್ ಬಿ …
Read More »ಭಾರತವು ವಿವಿಧ ಸಂಸ್ಕೃತಿ, ಭಾಷೆ ಹಾಗೂ ಸಂಗೀತದ ಪರಂಪರೆಯನ್ನು ಹೊಂದಿದೆ-ನಿರ್ಮಲಾ ಸೀತಾರಾಮನ್
ಭಾರತದಲ್ಲಿನ ಪ್ರತಿಯೊಂದು ರಾಜ್ಯವು ತನ್ನದೇ ಆದ ವಿಭಿನ್ನ ಸಂಸ್ಕೃತಿ, ಭಾಷೆ ಹಾಗೂ ಸಂಗೀತದ ಪರಂಪರೆಯನ್ನು ಹೊಂದಿದ್ದು, ಪ್ರತಿಯೊಂದು ದೇಶದ ಇತಿಹಾಸದಲ್ಲಿ ಪ್ರಮುಖ ಪಾತ್ರ ವಹಿಸಿವೆ ಹಾಗೂ ಸಂಗೀತ ಕ್ಷೇತ್ರಕ್ಕೆ ಮೈಸೂರಿನ ಕೊಡುಗೆ ಅಪಾರ ಎಂದು ಕೇಂದ್ರ ಹಣಕಾಸು ಮತ್ತು ಕಾರ್ಪೋರೇಟ್ ವ್ಯವಹಾರಗಳ ಸಚಿವರಾದ ನಿರ್ಮಲಾ ಸೀತಾರಾಮನ್ ಅವರು ಹೇಳಿದರು. ಇಂದು ಪ್ರವಾಸೋದ್ಯಮ ಸಚಿವಾಲಯದ ವತಿಯಿಂದ ಕರ್ನಾಟಕ ರಾಜ್ಯ ಮುಕ್ತ ವಿಶ್ವ ವಿದ್ಯಾಲಯದ ಘಟಿಕೋತ್ಸವ ಸಭಾಂಗಣದಲ್ಲಿ “ಮೈಸೂರು ಸಂಗೀತ ಸುಗಂಧ ಉತ್ಸವ” …
Read More »