இந்திய உணவுக் கழகம் அதன் அலுவலகங்களிலும் கிடங்குகளிலும் தூய்மையை மேம்படுத்துவதற்கும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், பணியிட இட அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் 2024 செப்டம்பர் 16 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0-வை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த நாடு தழுவிய இயக்கத்தில், மண்டல, பிராந்திய, கோட்ட மட்டங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகங்களிலிருந்தும், இந்திய உணவுக் கழக கிடங்குகளிலிருந்தும் விரிவான பங்கேற்பு காணப்பட்டது. சிறப்பு பிரச்சாரம் 4.0-ன் முக்கிய சிறப்பம்சங்கள்: *மொத்தம் 102,253 காகிதக் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. *38,207 மின்-கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு 5,000 மின்-கோப்புகள் மீதான பணிகள் முடிக்கப்பட்டன. பல்வேறு இந்திய உணவுக் கழக இடங்களில் மொத்தம் 858 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன. கழிவிகளை அகற்றுவதன் மூலமும், 19,743 சதுர அடி அலுவலக இடத்தை விடுவித்து ரூ.1,71,722 வருவாய் ஈட்டப்பட்டது. சிறப்பு இயக்கம் 4.0 முடிவடையும் போது, இந்திய உணவுக் கழகமான எஃப்.சி.ஐ, சுத்தமான, பசுமையான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பணியிடச் சூழலை மீண்டும் உறுதிப்படுத்தியது.
Read More »சிறப்பு இயக்கத்தின் 4-வது கட்டத்தில் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் சாதனைகள்
நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் ஆகியவை 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை இயக்கத்தையும், நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான சிறப்பு இயக்கம் 4.0-வையும் நடத்தியது. புதுதில்லியில் உள்ள அதன் அலுவலகங்களில் இந்த இயக்கம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆயத்த கட்டத்தில், தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டன. செயல்பாட்டு கட்டத்தின் போது …
Read More »தூய்மை இந்தியா இயக்கத்தை வலுப்படுத்தும் சிறப்பு இயக்கம் 4.0-ல் அஞ்சல் துறை முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது
அஞ்சல் துறை அதன் நாடு தழுவிய வலைப்பின்னலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், கொடுக்கப்பட்ட அளவுருக்களில் அதன் இலக்குகளையும் எட்டியுள்ளது. சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ், தூய்மை இந்தியாவுக்கான தேசிய இயக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.செப்டம்பர் 15 முதல் 30, 2024 வரை ஆயத்த நடவடிக்கைகளுடன் தொடங்கி, அக்டோபர் 2 முதல் 31 வரை இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது. அப்போது அஞ்சல் துறை அசல் இலக்கான 1 லட்சத்தை தாண்டி, அனைத்து 1.65 லட்சம் நெட்வொர்க் தளங்களையும் உள்ளடக்கியது. இந்தப் பரவலான தூய்மை முன்முயற்சி நாடு முழுவதும் தொலைதூர மற்றும் கிராமப்புற இடங்களைச் சென்றடைவதை உறுதி …
Read More »