மேதகு தலைவர்களே, வணக்கம்! இன்றைய அமர்வின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது, மேலும் இது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும், 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி திறன் விகிதத்தை இரட்டிப்பாக்கவும் நாம் தீர்மானித்துள்ளோம். பிரேசிலின் தலைமையின் கீழ், இந்த இலக்குகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. …
Read More »ଦୀର୍ଘସ୍ଥାୟୀ ବିକାଶ ଏବଂ ଶକ୍ତି ସଂକ୍ରମଣ ଉପରେ ଜି-୨୦ ଶିଖର ସମ୍ମିଳନୀରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ବକ୍ତବ୍ୟ
ମାନ୍ୟବର ନମସ୍କାର ଆଜି ଅଧିବେଶନର ପ୍ରସଙ୍ଗ ବହୁତ ପ୍ରାସଙ୍ଗିକ, ଆମର ଭାବୀ ପିଢ଼ିର ଭବିଷ୍ୟତ ସହ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଛି । ନୂଆଦିଲ୍ଲୀ ଜି-୨୦ ଶିଖର ସମ୍ମିଳନୀରେ ଏସଡିଜିକୁ ଗତି ଦେବା ପାଇଁ ଆମେ ବାରାଣସୀ କାର୍ଯ୍ୟକାରିତା ଯୋଜନାକୁ ଆଦରିଥିଲୁ । ୨୦୩୦ ପର୍ଯ୍ୟନ୍ତ ଅକ୍ଷୟ ଶକ୍ତିକୁ ତିନି ଗୁଣା ଶକ୍ତି କ୍ଷମତା ହାରକୁ ଦୁଇ ଗୁଣା କରିବାକୁ ସଂକଳ୍ପ ନେଇଥିଲୁ । ବ୍ରାଜିଲ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏହାକୁ ଲାଗୁ କରିବାକୁ …
Read More »જી-20 સત્ર દરમિયાન સ્થાયી વિકાસ અને ઊર્જા પરિવર્તન પર પ્રધાનમંત્રીનું વક્તવ્ય
મહામહિમ, મહાનુભાવો, નમસ્કાર! આજના સત્રનો વિષય ખૂબ જ પ્રાસંગિક છે, અને તે આવનારી પેઢીના ભવિષ્ય સાથે ગાઢ રીતે જોડાયેલો છે. નવી દિલ્હી જી-20 શિખર સંમેલન દરમિયાન અમે એસડીજીની ઉપલબ્ધિને વેગ આપવા વારાણસી કાર્યયોજના અપનાવી હતી. અમે પુનઃપ્રાપ્ય ઊર્જાના ઉત્પાદનને ત્રણ ગણું કરવાનો અને 2030 સુધીમાં ઊર્જા દક્ષતા દરને બમણો કરવાનો સંકલ્પ …
Read More »બિહારના જમુઈમાં જનજાતીય ગૌરવ દિવસ કાર્યક્રમ દરમિયાન પ્રધાનમંત્રીના ભાષણનો મૂળપાઠ
ભારત માતા કી જય! ભારત માતા કી જય! ભારત માતા કી જય! હું ભગવાન બિરસા મુંડા કહીશ – તમે કહો, અમર રહે, અમર રહે. ભગવાન બિરસા મુંડા – અમર રહે, અમર રહે. ભગવાન બિરસા મુંડા – અમર રહે, અમર રહે. ભગવાન બિરસા મુંડા – અમર રહે, અમર રહે. બિહારના રાજ્યપાલ શ્રી રાજેન્દ્ર આર્લેકરજી, બિહારના લોકપ્રિય મુખ્યમંત્રી …
Read More »નવી દિલ્હીમાં પ્રથમ બોડોલેન્ડ મહોત્સવના ઉદ્ઘાટન દરમિયાન પ્રધાનમંત્રીના ભાષણનો મૂળપાઠ
આસામના રાજ્યપાલ શ્રી લક્ષ્મણ પ્રસાદ આચાર્યજી, ટેક્નોલોજીના માધ્યમથી આપણી સાથે જોડાયેલા મુખ્યમંત્રી હિમંતા બિસ્વા સરમાજી, મંચ પર ઉપસ્થિત અન્ય તમામ મહાનુભાવો, ભાઈઓ અને બહેનો! આજે કાર્તિક પૂર્ણિમાનો શુભ અવસર છે. આજે દેવ દિવાળીની ઉજવણી કરવામાં આવી રહી છે. હું દેશભરના લોકોને આ તહેવારની શુભકામનાઓ પાઠવું છું. આજે ગુરુ નાનક દેવજીનું 555મુ પ્રકાશ પર્વ પણ છે. …
Read More »பீகார் மாநிலம் தர்பங்காவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
பாரத் மாதா கீ ஜெ! பாரத் மாதா கீ ஜெ! ஜனக மகாராஜா, அன்னை சீதாவின் புண்ணிய பூமியையும், மகாகவி வித்யாபதியின் பிறப்பிடத்தையும் நான் வணங்குகிறேன். இந்த வளமான, அற்புதமான பூமியில் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்! பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, மதிப்பிற்குரிய பீகார் முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, பீகார் துணை முதலமைச்சர்கள் விஜய் குமார் சின்ஹா, திரு சாம்ராட் சவுத்ரி, தர்பங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் தாக்கூர் அவர்களே, மற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களே, மிதிலாவின் எனதருமை சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்! நண்பர்களே, அண்டை மாநிலமான ஜார்கண்டில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் தொலைநோக்கு பார்வையை நனவாக்க ஜார்க்கண்ட் மக்கள் வாக்களித்து வருகின்றனர். ஜார்க்கண்டில் உள்ள அனைத்து வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களே, அழகான குரலுக்குப் பெயர் பெற்ற மிதிலாவின் மகள் சாரதா சின்ஹா அவர்களுக்கும் நான் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். போஜ்புரி மற்றும் மைதிலி இசைக்கு சாரதா சின்ஹா ஜி செய்த இணையற்ற பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமது பாடல்கள் மூலம் சாத் பண்டிகையின் மகத்துவத்தை உலகம் முழுவதும் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியவை. நண்பர்களே, இன்று, பீகார் உட்பட ஒட்டுமொத்த தேசமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மைல்கற்களை எட்டியுள்ளது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் வசதிகள் இப்போது ஒரு யதார்த்தமாகி வருகின்றன. வளர்ந்த இந்தியாவை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம். இந்த மாற்றங்களைக் காண்பதற்கும், இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் நமது தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள். நண்பர்களே, நாட்டுக்கு சேவை செய்வதற்கும், மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் எங்கள் அரசு எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளது. சேவைக்கான இந்த உறுதிப்பாட்டுடன், ஒரே நிகழ்வில் ரூ. 12,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்த திட்டங்கள் சாலை, ரயில் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை உள்ளடக்கியது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் கனவை நிறைவேற்றுவதில் ஒரு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்பங்கா எய்ம்ஸ் கட்டுமானம் பீகாரின் சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது மிதிலா, கோசி மற்றும் திர்ஹுத் பிராந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், மேற்கு வங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்கும். கூடுதலாக, நேபாளத்தைச் சேர்ந்த நோயாளிகள் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும். இந்த நிறுவனம் ஏராளமான வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக தர்பங்கா, மிதிலா மற்றும் ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, நமது நாட்டின் மிகப்பெரிய மக்கள்தொகையில் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர். அவர்கள் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மருத்துவ சிகிச்சையின் நிதிச்சுமை அவர்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. நம்மில் அநேகர் ஏழ்மையான, சாதாரண பின்னணியிலிருந்து வருகிறோம். ஒரு குடும்ப அங்கத்தினருடைய நோய் முழு வீட்டிற்கும் எவ்வாறு மிகுந்த கஷ்டத்தைக் கொண்டுவரக்கூடும் என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்கிறோம். கடந்த காலத்தில், நிலைமை மோசமாக இருந்தது. மிகக் குறைவான மருத்துவமனைகள், மருத்துவர்களின் கடுமையான பற்றாக்குறை, விலையுயர்ந்த மருந்துகள் மற்றும் சரியான நோயறிதல் வசதிகள் இல்லாமை ஆகியவை இருந்தன. அதே நேரத்தில் முந்தைய அரசுகள் அர்த்தமுள்ள நடவடிக்கை இல்லாமல் வெறுமனே வாக்குறுதிகளையும் கோரிக்கைகளையும் வழங்கின. இங்கே பீகாரில், நிதிஷ் குமார் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த அரசுகள், ஏழைகளின் அவலநிலை குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. நோய்களை மௌனமாக சகித்துக்கொள்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. இத்தகைய சூழ்நிலையில் நம் நாடு எப்படி முன்னேற முடியும்? காலாவதியான மனநிலை மற்றும் பழைய அணுகுமுறை இரண்டையும் மாற்றுவது முக்கியம். நண்பர்களே, நாடு முழுவதும் சுகாதாரப் பராமரிப்புக்கான விரிவான அணுகுமுறையை எங்கள் அரசு பின்பற்றி வருகிறது. முதலாவதாக, நோய் தடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இரண்டாவதாக, துல்லியமான நோயறிதலுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். மூன்றாவதாக, இலவச மற்றும் மலிவான சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நான்காவதாக, சிறிய நகரங்களில் கூட உயர்தர மருத்துவ வசதிகள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். கடைசியாக, எங்கள் ஐந்தாவது கவனம் மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதும், சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதும் ஆகும். சகோதர சகோதரிகளே, எந்த நபரும் நோய்வாய்ப்படுவதை எந்த குடும்பமும் விரும்பவில்லை. நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஆயுர்வேதம் மற்றும் சத்தான உணவுகளின் நன்மைகள் குறித்து மக்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஃபிட் இந்தியா இயக்கம் உடற்தகுதியை ஊக்குவிப்பதற்காக நடந்து வருகிறது. மோசமான சுகாதாரம், அசுத்தமான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றால் பல பொதுவான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தூய்மை இந்தியா திட்டம், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் கட்டுதல், குழாய் மூலம் தூய்மையான நீர் வழங்குதல் போன்ற முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சிகள் தூய்மையான நகரங்களுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், நோய் பரவும் அபாயத்தையும் குறைக்கின்றன. தர்பங்காவில் கடந்த மூன்று, நான்கு நாட்களாக நமது தலைமைச் செயலாளர் தனிப்பட்ட முறையில் நகரத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டார் என்று நான் கேள்விப்பட்டேன். ஆதரவளித்த அவருக்கும், அனைத்து பீகார் அரசு ஊழியர்களுக்கும், தர்பங்கா மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 5 முதல் 10 நாட்களுக்கு இந்த முயற்சியை இன்னும் அதிக உற்சாகத்துடன் தொடருமாறு அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். நண்பர்களே, பெரும்பாலான நோய்கள், ஆரம்பத்தில் சிகிச்சையளிக்கப்பட்டால், கடுமையானதாக மாறுவதைத் தடுக்கலாம். இருப்பினும், விலையுயர்ந்த மருத்துவ பரிசோதனைகள் பெரும்பாலும் மக்களை சரியான நேரத்தில் நோய்களைக் கண்டறிவதைத் தடுக்கின்றன. இதை எதிர்கொள்ள நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களை நாங்கள் அமைத்துள்ளோம். இந்த மையங்கள் புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளை அவற்றின் ஆரம்ப கட்டங்களில் கண்டறிய உதவுகின்றன. நண்பர்களே, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமான ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த திட்டம் இல்லாவிட்டால், இந்த நபர்களில் பெரும்பாலானோரை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முன்முயற்சி பலரின் குறிப்பிடத்தக்க சுமையை குறைத்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இந்த திட்டம் வசதி செய்துள்ளது. ஆயுஷ்மான் திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 1.25 லட்சம் கோடியை சேமித்துள்ளன. அரசு வெறுமனே ரூ. 1.25 லட்சம் கோடி விநியோகத்தை அறிவித்திருந்தால், அது ஒரு மாதத்திற்கு தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும். இருப்பினும், இந்தத் திட்டத்தின் மூலம், அந்தத் தொகை சத்தமில்லாமல் நமது மக்களுக்குப் பயனளித்துள்ளது. சகோதர சகோதரிகளே, தேர்தலின் போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களும் ஆயுஷ்மான் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று நான் உறுதியளித்தேன். அந்த வாக்குறுதியை நான் காப்பாற்றியுள்ளேன். பீகாரிலும், குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையை நாங்கள் தொடங்கியுள்ளோம். விரைவில், அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை கிடைக்கும். ஆயுஷ்மான் திட்டத்துடன், மக்கள் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. நண்பர்களே, சிறந்த சுகாதாரப் பராமரிப்புக்கான எங்களது நான்காவது முயற்சி, சிறிய நகரங்களில் கூட உயர்தர மருத்துவ வசதிகளை வழங்குவதும், மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதும் ஆகும். இதைக் கவனியுங்கள்: சுதந்திரத்திற்குப் பிறகு 60 ஆண்டுகளுக்கு, நாடு முழுவதிலும் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. அது தில்லியில் இருந்தது. கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. காங்கிரஸ் அரசு கூடுதலாக நான்கைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படும் என்று அறிவித்த போதிலும் அவற்றை முழுமையாக செயல்பட வைக்க முடியவில்லை. எங்கள் அரசு இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, நாடு முழுவதும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை நிறுவியது. இன்று இந்தியா முழுவதும் சுமார் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இது சிகிச்சை வசதிகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளதுடன் அதிக எண்ணிக்கையிலான புதிய மருத்துவர்களை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பீகாரைச் சேர்ந்த பல இளம் மருத்துவர்கள் எய்ம்ஸ் தர்பங்காவில் பட்டம் பெற்று சமூகத்திற்கு சேவை செய்வார்கள். நாங்கள் முக்கியமான ஒன்றையும் சாதித்துள்ளோம். முன்பு, ஒரு மருத்துவராக மாறுவதற்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம். ஆனால் ஆங்கிலத்தில் கற்க முடியாத நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அந்த கனவை எவ்வாறு அடைய முடியும்? ஒருவரின் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பதை எங்கள் அரசு இப்போது சாத்தியமாக்கியுள்ளது. இந்த மகத்தான சீர்திருத்தம், இந்த மாற்றத்தை எப்போதும் எதிர்பார்த்து வந்த கர்பூரி தாக்கூருக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலியாகும். அவரது கனவை நனவாக்கியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் 100,000 புதிய மருத்துவ இடங்களை அதிகரித்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மேலும் 75,000 இடங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், பீகார் இளைஞர்களுக்கு பயனளிக்கும் மற்றொரு மகத்தான முடிவை எங்கள் அரசு எடுத்துள்ளது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் மருத்துவம் படிக்கும் விருப்பம் அது. இந்த நடவடிக்கையால் ஏழை, தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் மருத்துவர்களாக மாற உதவும். நண்பர்களே, புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான பெரிய முன்முயற்சியையும் எங்கள் அரசு தொடங்கியுள்ளது. முசாபர்பூரில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் மருத்துவமனை பீகாரில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். இந்த மருத்துவமனை ஒரே குடையின் கீழ் விரிவான புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதுடன், நோயாளிகள் பராமரிப்புக்காக தில்லி அல்லது மும்பைக்கு பயணிக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்கும். பீகாரில் விரைவில் அதிநவீன கண் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்கள் முன்பாக நான் காசியில் இருந்தபோது, காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் அவர்களின் ஆசியோடு ஒரு மகத்தான கண் மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. காசியில் உள்ள இந்த சிறந்த மருத்துவமனை குஜராத்தில் செயல்படுத்தப்பட்ட மாதிரியைப் பின்பற்றுகிறது. இந்த மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிறப்பான சேவைகளால் ஈர்க்கப்பட்டு, இதைப் போன்ற ஒரு கண் மருத்துவமனை பீகாரிலும் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இந்த முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும், முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டபடி, இத்திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய கண் மருத்துவமனை இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வளமாக இருக்கும். நண்பர்களே, பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் உருவான ஆட்சி முன்மாதிரியானது. மோசமான ஆட்சியில் இருந்து பீகாரை விடுவிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசு பீகாரின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் உறுதிபூண்டுள்ளது. இந்த விரைவான முன்னேற்றம் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சிறு விவசாயிகள், உள்ளூர் தொழில்களுக்கான ஆதரவு மூலம் அடையக்கூடியது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதற்கான தெளிவான திட்டத்தைக் கொண்டுள்ளது. இன்று, விமான நிலையங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகள் அதிகம் உருவாக்கப்படுவதால் பீகாரின் அடையாளம் வலுப்படுத்தப்படுகிறது. தர்பங்கா இப்போது உதான் திட்டத்தின் கீழ் ஒரு விமான நிலையத்தைக் கொண்டுள்ளது. தில்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. ராஞ்சிக்கு விமானங்கள் விரைவில் தொடங்கப்படும். ரூ. 5,500 கோடி மதிப்பிலான அமாஸ்-தர்பங்கா அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், ரூ. 3,400 கோடி மதிப்பிலான நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விரைவில், எரிவாயு வீடுகளுக்கு தண்ணீரைப் போல வசதியாக பாயும், அது மிகவும் மலிவானதாக இருக்கும். இந்த மகத்தான வளர்ச்சி முயற்சி பீகாரின் உள்கட்டமைப்பை உயர்த்துவதுடன் ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். நண்பர்களே, இந்த பிராந்தியத்தின் விவசாயிகள், மக்கானா உற்பத்தியாளர்கள் மற்றும் மீன் விவசாயிகளின் நலனுக்கு எங்கள் அரசு முன்னுரிமை அளிக்கிறது. பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், பீகாரில் ஏராளமான விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இது மிதிலா பகுதி விவசாயிகளுக்கும் பயனளிக்கிறது. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம், உள்ளூர் மக்கானா உற்பத்தியாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளை அணுகுகிறார்கள். மக்கானா உற்பத்தியாளர்களை ஆதரிப்பதற்காக, மக்கானா ஆராய்ச்சி மையத்திற்கு தேசிய நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கானா புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதேபோல், மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மட்டத்திலும் மீன் விவசாயிகளுக்கு நாங்கள் உதவுகிறோம். மீன் விவசாயிகள் இப்போது கிசான் கடன் அட்டைக்கு தகுதியுடையவர்கள். மேலும் உள்ளூர் நன்னீர் மீன்களுக்கு குறிப்பிடத்தக்க சந்தை உள்ளது. பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், இந்த உற்பத்தியாளர்களுக்கு கணிசமான ஆதரவை வழங்குகிறது. மீன் ஏற்றுமதியில் முன்னணி நாடாக இந்தியாவை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். தர்பங்காவின் மீன் விவசாயிகள் இதன் மூலம் பெரிதும் பயனடைவார்கள். நண்பர்களே, கோசி மற்றும் மிதிலாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் பீகாரின் வெள்ளப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான விரிவான திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. நேபாளத்துடன் இணைந்து நீடித்த தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த பிரச்சினையைத் தீர்க்க எங்கள் அரசு ரூ. 11,000 கோடி மதிப்புள்ள திட்டத்தில் முதலீடு செய்கிறது. நண்பர்களே, பீகார், இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் முக்கிய மையமாகும். அதைப் பாதுகாப்பது நமது கூட்டுக் கடமையாகும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாரம்பரிய பாதுகாப்புடன் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று, நாளந்தா பல்கலைக்கழகம் தமது பழைய பெருமையையும் முக்கியத்துவத்தையும் மீட்டெடுக்க முயற்சிக்கிறது. நண்பர்களே, பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில், நமது பல மொழிகள் நமது பாரம்பரியத்தின் பொக்கிஷமான பகுதியாகும். இம்மொழிகளில் பேசுவது மட்டுமின்றி, அவற்றைப் பாதுகாப்பதும் அவசியம். சமீபத்தில், புத்தரின் போதனைகளையும், பீகாரின் பாராம்பரியப் பெருமையையும் அழகாகப் படம்பிடிக்கும் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை நாங்கள் வழங்கியுள்ளோம். இந்த பாரம்பரியத்தை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மைதிலி மொழியைச் சேர்த்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கூடுதலாக, மைதிலி ஜார்க்கண்டில் இரண்டாவது மாநில மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நண்பர்களே, இங்கே தர்பங்காவில் உள்ள மிதிலா பிராந்தியத்தின் கலாச்சார செழுமை ஒவ்வொரு இடத்திலும் தெளிவாகத் தெரிகிறது. அன்னை சீதாவின் மதிப்புகள் மற்றும் நற்பண்புகள் இந்த நிலத்தை ஆசீர்வதிக்கின்றன. நமது தர்பங்கா உட்பட நாடு முழுவதும் உள்ள 10-க்கும் மேற்பட்ட நகரங்களை ராமாயண சுற்றுவட்டத்துடன் இணைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. இந்த முயற்சி இப்பகுதியில் சுற்றுலாவை கணிசமாக மேம்படுத்தும். மேலும், தர்பங்கா-சீதாமர்ஹி-அயோத்தி வழித்தடத்தில் அமிர்த பாரத் ரயில் சேவை மக்களுக்கு பெரும் பயனளித்துள்ளது. நண்பர்களே, இன்று நான் உங்களிடையே உரையாற்றும் போது, மகாராஜா காமேஷ்வர் சிங்கின் மகத்தான பங்களிப்பையும் நான் நினைவுபடுத்துகிறேன். சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பாரதத்தின் முன்னேற்றத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கது. எனது நாடாளுமன்றத் தொகுதியான காசியில் கூட அவரது முயற்சிகள் நன்கு அறியப்பட்டவை. அவை மிகவும் மதிக்கப்படுகின்றன. மகாராஜா காமேஷ்வர் சிங்கின் சமூகப் பணி தர்பங்காவுக்கு பெருமை சேர்ப்பதாகவும், நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது. நண்பர்களே, பீகார் மக்களின் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில் மத்தியில் எங்களது அரசும், பீகாரில் நிதீஷ் குமார் அரசும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன. வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களில் இருந்து அதிகபட்ச பலன்களை பீகார் மக்கள் பெறுவதை உறுதி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை தர்பங்கா மற்றும் இதர வளர்ச்சித் திட்டங்களை நிறுவியதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் – …
Read More »বিহারের দারভাঙ্গায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
ভারতমাতার জয়! ভারতমাতার জয়! প্রথমেই আমি রাজা জনক এবং মা সীতার পবিত্র ভূমি, মহান কবি বিদ্যাপতির জন্মস্থানকে প্রণাম জানাই। এই পবিত্র ভূমিকে যাঁরা সমৃদ্ধ করেছেন, তাঁদের শুভেচ্ছা জানাই। বিহারের মাননীয় রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকরজি, শ্রদ্ধেয় বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমারজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীরা, বিহারের উপ-মুখ্যমন্ত্রীরা শ্রী বিজয় কুমার সিনহা …
Read More »உத்தராகண்ட் உருவாக்க தினத்தையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. அதாவது, உத்தரகண்ட் அதன் 25 வது ஆண்டில் நுழைகிறது. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உத்தராகண்டின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இதில் ஒரு மகிழ்ச்சிகரமான தற்செயல் நிகழ்வு உள்ளது: நமது முன்னேற்றம் தேசிய வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க காலகட்டமான பாரதத்தின் அமிர்த காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சங்கமம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இந்த சகாப்தத்தில் நமது பகிரப்பட்ட விருப்பங்கள் நனவாகின்றன. வரும் 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை மையமாகக் கொண்டு உத்தராகண்ட் மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் மூலம், உத்தராகண்டின் பெருமை கொண்டாடப்படும். வளர்ந்த உத்தராகண்ட் என்ற பார்வை ஒவ்வொரு குடியிருப்பாளரிடமும் எதிரொலிக்கும். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்திற்காக, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக, வெளிநாடுவாழ் இந்தியத் தலைவர் உத்தராகண்ட் சம்மேளனமும் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புலம்பெயர்ந்த நமது உத்தராகண்ட் மக்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். நண்பர்களே, உத்தராகண்ட் மக்கள் தங்கள் நம்பிக்கைகளை, விருப்பங்களை உணர, ஒரு தனி மாநிலத்திற்காக நீண்டகாலம் கடினமாக போராட வேண்டியிருந்தது. அடல் அவர்களின் மதிப்பிற்குரிய தலைமையின் கீழ், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது இந்தப் போராட்டம் வெற்றியில் முடிந்தது. உத்தராகண்டின் படைப்புக்கு உத்வேகம் அளித்த கனவு படிப்படியாக உயிர்பெறுவதைக் காண்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தேவபூமி உத்தராகண்ட் எப்போதும் நம் அனைவர் மீதும் பிஜேபியின் மீதும் அளவற்ற அன்பையும் பாசத்தையும் பொழிந்துள்ளது. இதற்குப் பதிலாக, தேவபூமிக்கு சேவை செய்வதில் நமது அர்ப்பணிப்பால் உந்தப்பட்டு, உத்தராகண்டின் இடைவிடாத வளர்ச்சிக்கு பிஜேபி உறுதிபூண்டுள்ளது. நண்பர்களே, சில நாட்களுக்கு முன்புதான் கேதார்நாத் ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு, பாபா கேதார்நாத் ஆலயத்திற்கு சென்று, அவரது காலடியில் அமர்ந்த பிறகு, இந்த தசாப்தம் உத்தராகண்டிற்கு சொந்தமானதாக இருக்கும் என்று நான் நம்பிக்கையுடன் அறிவித்தேன். அரசு எனது நம்பிக்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் நான் சொல்வது சரி என்பதை நிரூபித்துள்ளது. இன்று, உத்தராகண்ட் வளர்ச்சியில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த ஆண்டு நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் உத்தராகண்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. எளிதாக வணிகம் செய்வதில் சாதனையாளராகவும், ஸ்டார்ட்அப் தரவரிசையில் ஒரு தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், உத்தராகண்டின் வளர்ச்சி விகிதம் 1.25 மடங்கு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஜிஎஸ்டி வசூல் 14% அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டில், உத்தராகண்டின் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு ரூ .1.25 லட்சமாக இருந்தது, இது இப்போது ரூ .2.60 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், 2014-ம் ஆண்டில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ரூ .1.5 லட்சம் கோடியாக இருந்தது, இப்போது அது ஏறத்தாழ இரட்டிப்பாகி ரூ .3.5 லட்சம் கோடியாக உள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் உத்தராகண்ட் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதையும், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி அதிகரிப்பதையும் பிரதிபலிக்கின்றன. அரசின் முயற்சிகள் காரணமாக, உத்தராகண்ட் மக்களுக்கு, குறிப்பாக நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் வாழ்க்கை எளிதாகி வருகிறது. 2014-க்கு முன், உத்தராகண்டில் வீடுகளுக்கு குழாய் நீர் கிடைப்பது 5%-க்கும் குறைவாக இருந்தது. இன்று, அந்த எண்ணிக்கை 96%-க்கும் அதிகமாக உள்ளது. இதில் முழுமையை அடைவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம். இதேபோல், 2014-க்கு முன், பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 6,000 கி.மீ கிராமப்புற சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டன. தற்போது, இச்சாலைகளின் மொத்த நீளம் 20,000 கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது. மலைகளில் சாலைகள் அமைப்பதில் உள்ள சவால்களையும் அவை எவ்வளவு அவசியம் என்பதையும் நான் நன்கு அறிவேன். பல்லாயிரக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டுவதன் மூலமும், ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்குவதன் மூலமும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எண்ணற்ற குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளை விநியோகிப்பதன் மூலமும், ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் இலவச மருத்துவ சிகிச்சையை வழங்குவதன் மூலமும், அனைத்து வயதினருக்கும், பின்னணி கொண்ட மக்களுக்கும் எங்கள் அரசு ஒரு கூட்டாளராக செயல்படுகிறது. நண்பர்களே, இரட்டை என்ஜின் அரசின் நன்மைகளை உத்தராகண்டில் நாம் தெளிவாகக் காண முடியும். மத்திய அரசிடமிருந்து உத்தரகாண்ட் பெறும் நிதி உதவி கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இந்த நிர்வாக மாதிரியின் கீழ், எய்ம்ஸ் துணை மையம் மாநிலத்திற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், டேராடூன் நாட்டின் முதல் ட்ரோன் பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தாயகமாகவும் மாறியுள்ளது. உதம் சிங் நகரில் ஸ்மார்ட் தொழில்துறை நகரியத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் உள்ளன. இன்று, உத்தராகண்ட் முழுவதும் ரூ .2 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் திட்டம் 2026-க்குள் நிறைவடையும் பாதையில் உள்ளது, மேலும் உத்தராகண்டில் உள்ள 11 ரயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. டேராடூன்-தில்லி விரைவுப்பாதை திட்டம் முடிந்ததும், இரு நகரங்களுக்கும் இடையிலான பயணம் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஆகும். சாராம்சத்தில், உத்தராகண்டில் ஒரு பெரிய வளர்ச்சி முயற்சி நடந்து வருகிறது, இது இந்த தேவபூமியின் பெருமையை மேம்படுத்துகிறது மற்றும் மலைகளில் இருந்து இடம்பெயர்வதை கணிசமாகக் குறைக்கிறது. நண்பர்களே, வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், பாரம்பரியத்தை பாதுகாக்கவும் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. தேவபூமியின் வளமான கலாச்சாரத்தை கௌரவிக்கும் வகையில் கேதார்நாத் தாமின் அற்புதமான, ஆன்மீக புனரமைப்பு நடந்து வருகிறது. பத்ரிநாத் ஆலய வளாக மேம்பாட்டுப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மானஸ் கண்ட் மந்திர் மாலா இயக்கத்தின் முதல் கட்டத்தில், 16 பழமையான கோவில் பகுதிகள் புத்துயிர் பெறுகின்றன. அனைத்து பருவநிலைகளிலும் உள்ள சாலை, சார் தாம் யாத்திரையை மேலும் அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளது. பர்வத்மாலா திட்டத்தின் மூலம், தண்டுவடப் பாதைகள் மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கின்றன. மானா கிராமத்திற்கு நான் சென்றதை நினைவு கூர்கிறேன், அங்கு எல்லையில் நமது சகோதர சகோதரிகளின் அளவற்ற அன்பை அனுபவித்தேன். துடிப்பான கிராமத் திட்டம் மனாவில் இருந்தே தொடங்கப்பட்டது, எங்கள் அரசு எல்லையோர கிராமங்களை நாட்டின் கடைசி கிராமமாக கருதாமல், நாட்டின் முதல் கிராமமாக கருதுகிறது. இன்று உத்தராகண்டில் சுமார் 50 கிராமங்கள் இந்த முயற்சியின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் உத்தராகண்டில் சுற்றுலா வாய்ப்புகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன. சுற்றுலா வளரும்போது, மாநில இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, இந்த ஆண்டு ஏறத்தாழ 6 கோடி சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உத்தராகண்டுக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு, சார் தாம் யாத்ரீகர்களின் சாதனை எண்ணிக்கை 24 லட்சம்; கடந்த ஆண்டு 54 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் சார் தாம் யாத்திரையை மேற்கொண்டனர். இது உணவுவிடுதி மற்றும் தங்குமிட உரிமையாளர்கள் முதல் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் ஜவுளி வணிகர்கள் வரை அனைவருக்கும் பயனளித்துள்ளது. கடந்த ஆண்டுகளில், 5,000 க்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நண்பர்களே, இன்று, உத்தராகண்ட் முடிவுகளை எடுத்து வருகிறது. கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. இது தேசத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது. ஒரு முழுமையான ஆய்வுக்குப் பின், உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது, இதை நான் மதச்சார்பற்ற சிவில் கோட் என்று குறிப்பிடுகிறேன். முழு நாடும் இப்போது பொது சிவில் சட்டம் பற்றி விவாதித்து அதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்து வருகிறது. உத்தராகண்ட் மாநில இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க மோசடி தடுப்புச் சட்டத்தையும் உத்தராகண்ட் அரசு நிறைவேற்றியது. மோசடி கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கு ஆட்சேர்ப்பு இப்போது முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் சரியான நேரத்திலும் நடத்தப்படுகிறது. இந்த துறைகளில் உத்தராகண்ட் மாநிலத்தின் வெற்றிகள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாறி வருகின்றன. நண்பர்களே, இன்று நவம்பர் 9 ஆம் தேதி, சக்தியின் சின்னமான ஒன்பதாம் எண் கொண்ட மங்களகரமான தேதி. இந்த சிறப்பு நாளில், ஒன்பது கோரிக்கைகளை நான் முன்வைக்க விரும்புகிறேன் – உத்தரகண்ட் மக்களுக்கு ஐந்து கோரிக்கைகள், மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு நான்கு. நண்பர்களே, உத்தராகண்டின் பேச்சுவழக்குகளான கார்வாலி, குமாவோனி மற்றும் ஜான்சாரி போன்றவை நம்பமுடியாத அளவிற்கு வளமானவை. அவற்றைப் பாதுகாப்பது முக்கியம். மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை பராமரிக்க எதிர்கால சந்ததியினருக்கு இந்த பேச்சுவழக்குகளை உத்தராகண்ட் மக்கள் கற்பிக்க வேண்டும் என்பதே எனது முதல் வேண்டுகோள். உத்தராகண்ட் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆழ்ந்த மரியாதைக்கு நன்கு அறியப்பட்டதாகும். இது கௌரா தேவியின் நிலம், இங்குள்ள ஒவ்வொரு பெண்ணும் மா நந்தாவின் வெளிப்பாடு. இயற்கையைப் பாதுகாப்பது மிக முக்கியம், எனவே எனது இரண்டாவது வேண்டுகோள், தாய்மார்களின் பெயரில் மரக்கன்றுகளை நடும் “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” இயக்கத்தை ஆதரிக்க வேண்டும். இந்த இயக்கம் நாடு முழுவதும் வேகம் பெற்று வருகிறது, உத்தராகண்டின் தீவிர பங்கேற்பு பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நமக்கு உதவும். ‘நௌல் தாரா’வை வழிபடும் மரபு நிலைநிறுத்தப்பட வேண்டும். எனது மூன்றாவது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் நதிகள் மற்றும் நாவுலை பாதுகாக்க வேண்டும், நீர் தூய்மைக்கான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதாகும். எனது நான்காவது வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் கிராமங்களுக்கு தவறாமல் சென்று உங்கள் வேர்களுடன் இணைந்திருக்க வேண்டும், குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு, பிணைப்பை வலுவாக வைத்திருக்க வேண்டும். திவாரி வீடுகள் என்று அழைக்கப்படும் பழைய கிராம வீடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது எனது ஐந்தாவது கோரிக்கை. அவற்றைக் கைவிடாதீர்கள்; அதற்கு பதிலாக, வருமானத்தை ஈட்டுவதற்காக அவற்றை தங்குமிடங்களாக மாற்றுங்கள். நண்பர்களே, உத்தராகண்டில் சுற்றுலா வேகமாக வளர்ந்து வருகிறது, நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் வருகிறார்கள். எல்லா சுற்றுலாப் பயணிகளுக்கும் எனக்கு நான்கு கோரிக்கைகள் உள்ளன. முதலாவதாக, நீங்கள் கம்பீரமான இமயமலைக்குச் செல்லும்போது, தூய்மைக்கு முன்னுரிமை அளித்து, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதை உறுதி செய்யுங்கள். இரண்டாவதாக, உங்கள் பயண பட்ஜெட்டில் குறைந்தது 5% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு செலவழிப்பதன் மூலம் “உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு” என்ற மந்திரத்தைத் தழுவுங்கள். மூன்றாவதாக, மலைகளில் போக்குவரத்து விதிகளை கடைபிடியுங்கள், ஏனெனில் பாதுகாப்பு மிக முக்கியமானது. நான்காவதாக, மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு முன் அவற்றின் பழக்கவழக்கங்கள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி அறிந்து கொண்டு ஆடைப் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவதில் உத்தராகண்ட் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். உத்தராகண்ட் மக்களுக்கான ஐந்து கோரிக்கைகளும், பார்வையாளர்களுக்கு நான் விடுத்த நான்கு வேண்டுகோள்களும் தேவபூமியின் அடையாளத்தை கணிசமாக வலுப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும். நண்பர்களே, உத்தராகண்ட் மாநிலத்தை விரைவான வளர்ச்சிப் பாதையில் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நாட்டின் இலக்குகளை அடைவதில் நமது உத்தராகண்ட் தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என்று நான் நம்புகிறேன். உத்தராகண்ட் உருவானதன் வெள்ளி விழாவில், நான் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபா கேதார் உங்கள் அனைவருக்கும் செழிப்பை ஆசீர்வதிக்கட்டும். மிக்க நன்றி!
Read More »চি-২৯৫ এয়াৰক্ৰাফ্ট ফেক্টৰীৰ উদ্বোধনী অনুষ্ঠানত প্ৰধানমন্ত্ৰীয়ে দিয়া ভাষণৰ অসমীয়া অনুবাদ
মহামহিম পেড্ৰ’ ছানচেজ, গুজৰাটৰ ৰাজ্যপাল আচাৰ্য দেৱব্ৰত জী, ভাৰতৰ প্ৰতিৰক্ষা মন্ত্ৰী শ্ৰী ৰাজনাথ সিং জী, বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্ৰী শ্ৰী এছ জয়শংকৰ জী, ইয়াৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী শ্ৰী ভূপেন্দ্ৰভাই পেটেল, স্পেইন আৰু ৰাজ্য চৰকাৰৰ মন্ত্ৰীগণ, এয়াৰবাছ আৰু টাটা টিমৰ সকলো বন্ধু, দেৱী আৰু সজ্জনসকল! নমস্কাৰ! বুয়েনছ ডিয়াছ! মোৰ বন্ধু পেড্ৰ’ ছানচেজ জী, …
Read More »