गुरुवार, दिसंबर 26 2024 | 06:54:01 PM
Breaking News
Home / Tag Archives: Young Leaders Dialogue

Tag Archives: Young Leaders Dialogue

தேசிய இளைஞர் விழா 2025- வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்

வளர்ந்த இந்தியா பற்றிய கருத்துக்களைப் பிரதமருடன் பகிர்ந்து கொள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா, 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 5 வரை மை பாரத் தளத்தில் நடைபெறுகிறது. தேசிய இளைஞர் விழா 2025-ன் ஒரு பகுதியாக  நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ம் ஆண்டு ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் புது தில்லியில் நடைபெறவுள்ளது. இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாக இருக்கும். வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் நேரடியாக உரையாடவும், இந்தியாவின் எதிர்காலம் குறித்த தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கும்.  பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில் அழைப்பு விடுத்தது போல் இளம் தலைவர்களை அரசியலுக்கு கொண்டு வருவது இதன் நோக்கமாகும். இது ஒரு வெளிப்படையான, ஜனநாயக மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்தல் மூலம் வளர்ந்த இந்தியாவிற்கு இளைஞர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, தகுதியுள்ள அனைத்து இளம் பெண்களும் ஆண்களும் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்கலாம். மேரா யுவ பாரத் (மை பாரத்) தளத்தில் 25 நவம்பர் 2024 மற்றும் டிசம்பர் 5, 2024 க்கு இடையில் நடத்தப்படும் டிஜிட்டல் வினாடி வினாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் பங்கேற்பதன் மூலம் அடுத்த கட்டங்களுக்குத் தகுதி பெறலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை MyBharat தளத்திலிருந்தும் (https://mybharat.gov.in/) இந்திய விளையாட்டு ஆணையம், நேரு யுவ கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலகங்களிலிருந்தும் பெறலாம். தேசிய இளையோர் திருவிழாவின் மறுவடிவமைப்பான வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க நான்கு கட்டங்களாக வளர்ச்சியடைந்த பாரதம் சவாலை முன்வைக்கிறது. கட்டம் 1: வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா: நவம்பர் 25, 2024 முதல் டிசம்பர் 5, 2024 வரை, டிஜிட்டல் வினாடி வினா 15 – 29 வயதுடையவர்களுக்கான எனது இளைய பாரதம் (மை பாரத்) தளத்தில் பங்கேற்க வேண்டும். கட்டம் 2: டிசம்பர் 08 2024 முதல் டிசம்பர் 15 2024 வரை, கட்டுரை/ வலைப்பதிவு (Blog) எழுதுதல் : முந்தைய சுற்றில் வெற்றி பெற்றவர்கள், “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்பம்” மற்றும் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்” போன்ற சுமார் 10 யோசனைகள் பற்றிய கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். இந்தப் போட்டியும் MyBharat தளத்தில் நடத்தப்படும். கட்டம் 3: டிசம்பர் 20 2024 முதல் டிசம்பர் 26 2024 வரை, வளர்ச்சியடைந்த பாரதம் விஷன் பிட்ச் டெக்: மாநில அளவிலான விளக்கக்காட்சிகள்: இரண்டாம் சுற்றில் தகுதி பெறும் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மாநில அளவில் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள். கட்டம் 4:  புதுதில்லியில் நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதம் தேசிய சாம்பியன்ஷிப்: 2025 ஜனவரி 11 முதல் 12 வரை நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் மாநில அளவிலான அணிகள் போட்டியிடும். வெற்றிபெறும் அணிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியிடம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தங்களின் தொலைநோக்குப் பார்வைகளையும் யோசனைகளையும் முன்வைக்கும். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025, மூன்று வெவ்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களின் கூட்டம் நடைபெறும். 2025 ஜனவரி 11-12 தேதிகளில் தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் தேசிய நிகழ்வில் பங்கேற்க சுமார் 3,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வளர்ச்சியடைந்த பாரதம் கண்காட்சி: இது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் இளைஞர்கள் சார்ந்த முன்முயற்சிகளைக் காட்சிப்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சிப் பார்வையில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு இது ஒரு சிறந்த தளத்தை வழங்கும் முழு அமர்வுகள்: முன்னணி தேசிய மற்றும் உலகளாவிய வல்லுநர்கள் இளைஞர்களுடன்  கருத்துரையாடல் மற்றும் பயிற்சி பட்டறைகளில் பங்கேற்பார்கள். இந்திய பாரம்பரியத்தின் கொண்டாட்டம்: பாரம்பரியத்தின் பெருமையை காக்கும் வகையில் வளர்ச்சி எனும் மகத்தான பகுதியாக இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை கொண்டாடும் கலாச்சார நிகழ்ச்சியும் இந்த விழாவில் அடங்கும். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் என்பது ஒரு திருவிழா என்பதை விட, இது இந்தியாவின் இளைஞர்களை நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் தீவிர பங்களிப்பாளர்களாக மாற்றும் இயக்கமாகும். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் தொடர்பான அனைத்து விவரங்களும் மை பாரத் தளத்தில் (https://mybharat.gov.in/) கிடைக்கிறது.      

Read More »