बुधवार, जुलाई 09 2025 | 03:28:59 PM
Breaking News
Home / अन्य समाचार / ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலின் குறுகிய கால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் பணிகளுக்காக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலின் குறுகிய கால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் பணிகளுக்காக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

Follow us on:

2024 – ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 – ம் தேதி அன்று கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் INS விக்ரமாதித்யா போர்க் கப்பலின் குறுகிய கால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் பணிகளுக்கான (SRDD) ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா 2013- ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 – ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஒரு இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும். மறுபொருத்தம் போன்ற பராமரிப்புப் பணிகள் முடிந்ததும், ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பல் மேம்படுத்தப்பட்ட போர் திறனுடன் இந்திய  கடற்படையில் சேரும்.

கப்பல் பராமரிப்பு, பழுது பார்த்தல், மாற்றியமைத்தல் (MRO) போன்ற பணிகளை மேற்கொள்ளும் மையமாக செயல்படும் இந்த கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான இத்திட்டம் ஒரு முக்கியமான படியாகும். இந்தத் திட்டம் சுமார் 50 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பணிகளில் ஈடுபடுத்துவதுடன், 3500-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்.

தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தத் திட்டம் பெரும் உத்வேகத்தை அளிக்கும்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

 

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

चिनाब और अंजी पुल जम्मू और कश्मीर के लिए समृद्धि के प्रवेश द्वार के रूप में काम करेंगे : नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने आज जम्मू–कश्मीर के कटरा में 46,000 करोड़ रुपये से अधिक की …