குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அறக்கட்டளைகளால் நடத்தப்படும் நூலகங்கள் மற்றும் அரசு நூலகங்களின் நூலகர்களுடன் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று கலந்துரையாடினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “எந்தவொரு நாட்டின் எதிர்காலத்தையும் உருவாக்குவதில் நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நூலகர்களின் முயற்சியால் வரும் நாட்களில் இந்த நூலகங்களில் வாசகர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கப் போகிறது” என்று கூறியுள்ளார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தனது மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு நூலகத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.
அகமதாபாத்தில் உள்ள பிப்லஜ் கிராமம் அருகே ஜிண்டால் நகர்ப்புற கழிவு மேலாண்மை அமைப்பு நிறுவிய 15 மெகாவாட் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையையும் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தின் மற்றொரு பதிவில், “இது முழு அகமதாபாத் நகரத்தின் கழிவு நிர்வாகத்தை வலுப்படுத்துவதோடு, எரிசக்தி தேவைகளையும் பூர்த்தி செய்யும்” என்று திரு அமித் ஷா கூறியுள்ளார்.