गुरुवार, जनवरी 09 2025 | 02:38:41 PM
Breaking News
Home / अन्य समाचार / நிலக்கரி உற்பத்தி மற்றும் சுரங்கங்களிலிருந்து அனுப்புதலில் வளர்ச்சி

நிலக்கரி உற்பத்தி மற்றும் சுரங்கங்களிலிருந்து அனுப்புதலில் வளர்ச்சி

Follow us on:

நிலக்கரி உற்பத்தி மற்றும் தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து நிலக்கரி அனுப்பி வைப்பதில் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்களை அறிவிப்பதில் நிலக்கரி அமைச்சகம் மகிழ்ச்சியடைகிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது.

2024 நவம்பர் 30, நிலவரப்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30, வரை அரசு கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து மொத்த நிலக்கரி உற்பத்தி 112.65 மெட்ரிக் டன்னை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 83.60 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், 34.7% அதிகரிப்பைக் குறிக்கிறது.

2024 நவம்பரில் மட்டும், இந்த சுரங்கங்களிலிருந்து மொத்த நிலக்கரி உற்பத்தி 16.743 MT -ஆக இருந்தது. தினசரி சராசரி உற்பத்தி 0.558 MT ஆகும். இது நவம்பர் 2023-ல் தினசரி சராசரியான 0.396 MT உடன் ஒப்பிடும்போது 40.9% அதிகமாகும்.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து அனுப்பப்படுவதும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2024 நவம்பர் 30, நிலவரப்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30, வரை இந்த  சுரங்கங்களிலிருந்து மொத்த அனுப்புதல் 119.62 மெட்ரிக் டன்னை எட்டியது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 89.32 மெட்ரிக் டன்னிலிருந்து 33.9% அதிகரித்துள்ளது.

2024 நவம்பரில் மட்டும், இந்த சுரங்கங்களில் இருந்து அனுப்பப்பட்ட மொத்த நிலக்கரி 16.109 MT ஆகஇருந்தது. தினசரி சராசரி 0.537 MT அனுப்பப்பட்டது. இது 2023 நவம்பரில் தினசரி சராசரியான 0.421 MT உடன் ஒப்பிடும்போது 27.6% அதிகரிப்பாகும்.

நிலக்கரி உற்பத்தி மற்றும் அனுப்புதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பிரதமர் திரு நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. உள்நாட்டு எரிசக்தி திறன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், இறக்குமதி சார்புகளைக் குறைப்பதன் மூலமும், வெளிப்படையான மற்றும் புதுமையான ஆளுகை மூலம், இந்தியாவின் பொருளாதார தற்சார்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை ஆகியவற்றை அரசு நீடித்த தன்மை கொண்டதாக முன்னேற்றுகிறது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …