सोमवार, दिसंबर 23 2024 | 08:10:13 PM
Breaking News
Home / अन्य समाचार / சிறந்த அறிமுக இயக்குநர்’ பிரிவுக்கான அதிகாரப்பூர்வ ‘இந்திய திரைப்பட தேர்வை இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா 2024-ஐ அறிவித்துள்ளது

சிறந்த அறிமுக இயக்குநர்’ பிரிவுக்கான அதிகாரப்பூர்வ ‘இந்திய திரைப்பட தேர்வை இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா 2024-ஐ அறிவித்துள்ளது

Follow us on:

நாட்டில் புதிய மற்றும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஒரு புதிய விருது பிரிவை உருவாக்கியுள்ளது. ‘இந்திய திரைப்படத்தின் சிறந்த அறிமுக இயக்குனர் பிரிவு, நாடு முழுவதிலுமிருந்து புதிய முன்னோக்குகள், மாறுபட்ட கதைகள் மற்றும் புதுமையான சினிமா பாணிகளை முன்னிலைப்படுத்தும் ஐந்து குறிப்பிடத்தக்க அறிமுக படங்களைக் காட்சிப்படுத்தும். 2024 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா, இந்திய திரைப்படப் பிரிவின் சிறந்த அறிமுக இயக்குநருக்கான அதிகாரப்பூர்வ தேர்வை அறிவித்தது.

இந்திய திரைப்பட பிரிவில் சிறந்த அறிமுக இயக்குனர்: அதிகாரப்பூர்வ தேர்வு

வரிசை எண் படத்தின் அசல் தலைப்பு இயக்குநர் மொழி
1 பூங் லட்சுமிபிரியா தேவி மணிப்பூரி
2 கரத் கணபதி நவ்ஜ்யோத் பந்திவடேகர் மராத்தி
3 மிக்கா பன்னட ஹக்கி (வித்தியாசமான இறகு கொண்ட பறவை) மனோகரா கே கன்னடம்
4 ரசாக்கர் (ஹைதராபாத் மௌன இனப்படுகொலை) யதா சத்யநாராயணா தெலுங்கு
5 தன்னப் (குளிர்) ராகேஷ் நாராயணன் மலையாளம்

இந்த படங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான கதைகளையும் பிராந்திய முன்னோக்குகளையும் கொண்டுவந்து, இந்தியாவின் கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

நிறைவு விழாவில் விருது வழங்கப்படவுள்ளது

கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த படங்களை ஒரு நடுவர் குழு மதிப்பீடு செய்யும், மேலும் இந்திய திரைப்பட விருதின் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதின் வெற்றியாளர் 2024 நவம்பர் 28 அன்று நிறைவு விழாவில் அறிவிக்கப்படுவார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …