गुरुवार, नवंबर 21 2024 | 10:29:40 PM
Breaking News
Home / Choose Language / Tamil / புதுதில்லி, தேசிய ஊடக மையத்தில் நாடு முழுதும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 3.0-ஐ 2024, நவம்பர் 6 அன்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கவுள்ளார்

புதுதில்லி, தேசிய ஊடக மையத்தில் நாடு முழுதும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 3.0-ஐ 2024, நவம்பர் 6 அன்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கவுள்ளார்

Follow us on:

நாடு முழுவதும் 800 நகரங்கள் / மாவட்டங்களில் மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் 2024 நவம்பர் 1 முதல் 30 வரை நடத்தப்படும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்  இயக்கம் 3.0-ஐ 2024 நவம்பர் 6 அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கிறார்.

ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்காக ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பாரம்பரியமாக வாழ்நாள் சான்றிதழ்கள் நேரடி முறையில் சமர்ப்பிக்கப்பட்டன. இது ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமாக இருந்தது. டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கு ஆதார் அடிப்படையிலான ஜீவன் பிரமான் திட்டத்தை பிரதமர் 2014 நவம்பரில் தொடங்கி  வைத்தார். இத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், ஓய்வூதியதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வழிவகை செய்யவும், இதன் மூலம் அவர்கள் எளிதான சிறந்த வாழ்க்கையை  மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது.

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களின் நன்மைகள் மற்றும் அதை உருவாக்குவதற்கான நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்காக நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கத்தை 2022 நவம்பர் 1 முதல் 30 வரை 37 நகரங்களில் நடத்தியது. டிஜிட்டல் வாழ்நாள் இயக்கம் 2.0 2023 நவம்பர் மாதத்தில் 100 நகரங்களில் 597 இடங்களில் நடைபெற்றது, இதன் கீழ் மொத்தம் 1.47 கோடி வாழ்நாள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் 45.46 லட்சம் பேர் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் ஆவர். முக சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 25.41 லட்சம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டன. 90 வயதுக்கு மேற்பட்ட 30,500க்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களின் பயனைப் பெற்றனர்.

800 மாவட்டங்கள், 1900 முகாம் இடங்கள் மற்றும் 1000 சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இணையதளம்  உருவாக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி, ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கங்கள், சிஜிடிஏ, தொலைத் தொடர்புத் துறை, ரயில்வே ஆகியவற்றுடன் இணைந்து இந்த இயக்கம் நடத்தப்படும். நாட்டின் தொலைதூர பகுதிகளில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அனைவரையும் சென்றடையும் நோக்கத்துடன் இந்த இயக்கம் நடத்தப்படும்.

இந்திய அஞ்சல் பணப்பட்டுவடா வங்கி தனது 1.8 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராமின் அஞ்சல் சேவகர்கள் மூலம் 785 மாவட்டங்களில் இம்முகாம்களை நடத்தவுள்ளது. ஓய்வூதியதாரர்களின் வீடுகளிலேயே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்  சேவைகளை அஞ்சல் துறை வழங்குகிறது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கிறது.

19 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் 150 நகரங்களில் 750க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்களை நடத்தும். முதியோர்/ மாற்றுத்திறனாளிகள் நலிவடைந்த ஓய்வூதியம் பெறுவோரின் இல்லங்கள் / மருத்துவமனைகளுக்கு வருகை தருவதன் மூலம் அவர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழ்கள் சான்றிதழ்களை மின்னணு முறையில் சமர்ப்பிக்க இயலும்.

இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளால் நடத்தப்படும் முகாம்களுக்கு ஓய்வூதியதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலமும், முகாம்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் 57 ஓய்வூதியர் நலச் சங்கங்கள் இந்த இயக்கத்தில் முக்கிய பங்காற்றும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் பங்கேற்றனர்

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் …