தாதா பகவான் என்று பரவலாக மதிக்கப்படும் அம்பாலால் முல்ஜிபாய் படேலின் வாழ்க்கையும், போதனைகளையும் நினைவுகூரும் வகையில், அஞ்சல் துறையால் ஒரு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 10-ம் தேதி பூஜ்ய தாதா பகவானின் 117- வது ஜன்ம ஜெயந்தியின் போது, குஜராத்தின் வதோதராவில் உள்ள நவ்லாகி மைதானத்தில் மாண்புமிகு குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், பூஜ்யஸ்ரீ தீபக்பாய் தேசாய், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு தினேஷ் குமார் சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது.
திருமதி நேனு குப்தா வடிவமைத்த நினைவு அஞ்சல் தலையில் பூஜ்ய ஸ்ரீ தாதா பகவானின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவரது அமைதியான வெளிப்பாடு, இரக்கமுள்ள கண்கள் ஆகியவை உள் அமைதியின் ஆழமான உணர்வை பிரதிபலிக்கின்றன.
தாதா பகவானை கௌரவிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையை வெளியிடுவதில் அஞ்சல் துறை பெருமிதம் கொள்கிறது. ஆன்மீக ரீதியாக வளமான, கருணையுள்ள உலகத்தைப் பற்றிய அவரது பார்வை பலருக்கு வழிகாட்டும் ஒளியாக உள்ளது. அது சுய-உணர்தல் மற்றும் விடுதலைக்கான பாதையை வழங்குகிறது.