இயந்திரத்தனமாக நிலையான, மக்கும் தன்மை கொண்ட, ஹைட்ரோபோபிக் நானோ பூச்சு பொருள் இரசாயன உரங்களை மெதுவாக வெளியிடுவதன் மூலம், அவற்றின் ஊட்டச்சத்து பயன்பாட்டு திறனை அதிகரிக்க முடியும். இதனால் ரைசோஸ்பியர் மண், நீர் மற்றும் நுண்ணுயிரிகளுடன் அவற்றின் தொடர்பு கட்டுப்படுத்தப்படுகிறது. நானோ களிமண் – வலுவூட்டப்பட்ட பைனரி கார்போஹைட்ரேட்டுகளால் செய்யப்பட்ட இந்தப் பூச்சு, பரிந்துரைக்கப்பட்ட உர அளவைக் குறைத்து பயிர் உற்பத்தியை மேம்படுத்தலாம்.
பசுமைப் புரட்சியின் ஒரு பகுதியாக, கடந்த 50 ஆண்டுகளாக, மண்ணின் ஊட்டச்சத்தைப் பராமரிக்க, அடிக்கடி இரசாயன உர உள்ளீட்டு நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன, இதனால் அதிக தாவர உற்பத்தித்திறனை அடைய முடியும். அடிக்கடி மற்றும் அதிகப்படியான பயன்பாடு, உலகளாவிய நிலையான வளர்ச்சியில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உரங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐ.என்.எஸ்.டி) விஞ்ஞானிகள், பொட்டாசியம் உரத் தேவைகளில் 80% பூர்த்தி செய்யும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (கே.சி.எல்) பூசப்பட்டது, பைனரி கார்போஹைட்ரேட்டுகளான கைட்டோசன் மற்றும் லிக்னின் ஆகியவை, நிலையான ஒருங்கிணைப்பு பிணைப்புகளுக்கு சாதகமான வலுவூட்டல் முகவராகப் பயன்படுத்துகின்றன.
பி.கே.சாகு, கே.சுவாமி, என்.கபூர், ஏ.அகர்வால், எஸ்.கட்டாரியா, பி.சர்மா, பி.குண்டு, எச்.தங்கவேல், ஏ.வட்டக்குனியில், ஓ.பி.சௌராசியா மற்றும் வி.சண்முகம் ஆகியோர், டிரம் ரோட்டார் முறையைப் பயன்படுத்தி உரத்தை ஒரே சீரான முறையில் பூச்சு செய்து பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தினர். சீரான பூச்சுக்கு பயன்படுத்தப்பட்ட நானோ பொருள், இயற்கையிலிருந்து பெறப்பட்ட குறைந்த விலை பொருட்களான நானோ-களிமண், கைட்டோசான் மற்றும் ஸ்டார்ச் போன்றவை. இந்த ஆய்வு சுற்றுச்சூழல் அறிவியல்: நானோ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நானோ பூச்சு பொருட்களின் ஹைட்ரோ வெறுப்பை சரிசெய்து, பயிர் தேவைக்கேற்ப ரசாயன உரங்களின் வெளியீட்டு இயக்கவியலை மாற்றியது. கூடுதலாக, உருவாக்கப்பட்ட உற்பத்தியின் மக்கும் தன்மை மற்றும் வாழ்க்கை சுழற்சி மதிப்பீடு, வழக்கமான இரசாயன உரங்களை விட நிலைத்தன்மையை உறுதி செய்தது. மேலும், பூசப்பட்ட உரத்தின் இயந்திர செயல்திறன், போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலியின் போது அதன் தொழில்துறை பயன்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இயற்கையால் ஈர்க்கப்பட்ட பாலிமர்களின் முப்பரிமாண நானோ கட்டமைப்பு, அதன் உயிர் இணக்கத்தன்மை மற்றும் மக்கும் தன்மையின் நன்மையுடன் பல்வேறு பயன்பாடுகளுக்கான சாத்தியமான தளத்தை வழங்குகிறது. இயற்கை கழிவு பாலிமரின் பண்புகளான மீள முடியாத சிதைவு, சுயமாக கூடியிருந்த அமிலாய்டு ஃபைப்ரில் உருவாக்கம் மற்றும் தெர்மோஸ்-ரெஸ்பான்ஸ் ஆகியவை இரசாயன உரங்களை மெதுவாக வெளியிடுவதற்கான ஹைட்ரோபோபிக் நானோ பொருட்களை ஒன்றிணைக்க பயன்படுத்தப்பட்டன. மேலும், மணல் காற்று துப்பாக்கியுடன் கூடிய தனிப்பயனாக்கப்பட்ட சுழல் டிரம் அமைப்பு சிறந்த இயந்திர செயல்திறனுடன் இரசாயன உரங்களின் சீரான பூச்சை செயல்படுத்தியது.
மெதுவாக வெளியிடும் உரம், ஊட்டச்சத்து பயன்பாட்டு திறனை அதிகரிக்க வழக்கமான உரங்களை விட சாத்தியமான மாற்றாக இருக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட குறைந்த அளவு நெல் மற்றும் கோதுமையின் அதிக மகசூலுடன், குறைந்த இடுபொருட்களிலிருந்து அதிக உற்பத்தியை எளிதாக்குகிறது. ஒட்டுமொத்தமாக, வழக்கமான உர பயன்பாடுகளுடன் ஒப்பிடும்போது, விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலை மற்றும் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.