गुरुवार, दिसंबर 19 2024 | 01:43:06 PM
Breaking News
Home / अन्य समाचार / 2024, அக்டோபர் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)

2024, அக்டோபர் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)

Follow us on:

அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டுப் பணவீக்க விகிதம் 2024 அக்டோபர் மாதத்தில் (அக்டோபர், 2023-க்கு மேல்) 2.36% (தற்காலிகமானது) ஆக உள்ளது. 2024 அக்டோபரில் பணவீக்கம் முதன்மையாக உணவுப் பொருட்களின் விலை, உணவுப் பொருட்களின் உற்பத்தி, பிறவற்றின்  உற்பத்தி, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் & அரை டிரெய்லர்கள் போன்றவற்றின் விலை உயர்வால் ஏற்பட்டது. அனைத்துப் பொருட்கள் மற்றும் மொத்த விலைக் குறியீட்டு எண் கூறுகளின் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களுக்கான குறியீட்டு எண்கள் மற்றும் பணவீக்க விகிதம் வருமாறு:

2024 ஆகஸ்ட் மாதத்தில் அனைத்துப் பொருட்களின் மொத்த விலைக் குறியீட்டெண் 154.4 ஆகவும் பணவீக்க விகிதம் 1.25 சதவீதமாகவும் இருந்தது. செப்டம்பரில் மொத்த விலைக் குறியீட்டெண்  154.6, ஆகவும் பணவீக்க விகிதம் 1.84 சதவீதமாகவும்  இருந்தது. அக்டோபரில் மொத்த விலைக் குறியீட்டெண்  156.1 ஆகவும் பணவீக்க விகிதம் 2.36 சதவீதமாகவும்  இருந்தது.

முதன்மைப் பொருட்களைப் பொறுத்தவரை 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 195.1 ஆகவும் பணவீக்க விகிதம் 2.52 சதவீதமாகவும் இருந்தது. செப்டம்பரில் மொத்த விலைக் குறியீட்டெண்  195.7 ஆகவும் பணவீக்க விகிதம் 6.59 சதவீதமாகவும்  இருந்தது. அக்டோபரில் மொத்த விலைக் குறியீட்டெண்  203.3 ஆகவும் பணவீக்க விகிதம்8.09 சதவீதமாகவும்  இருந்தது.

எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பொறுத்தவரை 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 148.3 ஆகவும் பணவீக்க விகிதம் -0.54 சதவீதமாகவும் இருந்தது. செப்டம்பரில் மொத்த விலைக் குறியீட்டெண் 146.9 ஆகவும் பணவீக்க விகிதம் -4.05 சதவீதமாகவும்  இருந்தது. அக்டோபரில் மொத்த விலைக் குறியீட்டெண்  146.5 ஆகவும் பணவீக்க விகிதம் -5.79 சதவீதமாகவும்  இருந்தது.

உற்பத்திப் பொருட்களைப் பொறுத்தவரை 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 141.3 ஆகவும் பணவீக்க விகிதம் 1.00  சதவீதமாகவும் இருந்தது. செப்டம்பரில் மொத்த விலைக் குறியீட்டெண் 141.8 ஆகவும் பணவீக்க விகிதம் 1.00  சதவீதமாகவும்  இருந்தது. அக்டோபரில் மொத்த விலைக் குறியீட்டெண்  142.5 ஆகவும் பணவீக்க விகிதம் 1.50 சதவீதமாகவும்  இருந்தது.

உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டெண் 193.1 ஆகவும் பணவீக்க விகிதம் 3.21 சதவீதமாகவும் இருந்தது. செப்டம்பரில் மொத்த விலைக் குறியீட்டெண் 195.3 ஆகவும் பணவீக்க விகிதம் 9.47 சதவீதமாகவும்  இருந்தது. அக்டோபரில் மொத்த விலைக் குறியீட்டெண்  201.2 ஆகவும் பணவீக்க விகிதம் 11.59 சதவீதமாகவும்  இருந்தது.

மாத அடிப்படையிலான மாற்றம் சதவீதத்தில்: 2024 செப்டம்பரில் அனைத்துப் பொருட்கள் 0.13, முதன்மைப் பொருட்கள் 0.31, எரிபொருள் மற்றும் மின்சாரம் -0.94; உற்பத்திப் பொருட்கள் 0.35, உணவுப் பொருட்கள் 1.14.

2024 அக்டோபரில் இந்த மாற்றம் சதவீதத்தில்: அனைத்துப் பொருட்கள் 0.97, முதன்மைப் பொருட்கள் 2.35, எரிபொருள் மற்றும் மின்சாரம் -0.27, உற்பத்திப் பொருட்கள் 0.49, உணவுப் பொருட்கள் 3.02.

நவம்பர் மாதத்திற்கான மொத்தவிலைக் குறியீட்டெண் பற்றிய செய்திக்குறிப்பு  16/12/2024 அன்று வெளியிடப்படும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …