गुरुवार, दिसंबर 19 2024 | 11:48:51 AM
Breaking News
Home / अन्य समाचार / புதுவை பல்கலைக்கழகத்தில் பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு MSME மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகள், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தில் பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு MSME மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகள், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பு

Follow us on:

புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறை, புதுவை யூனியன் பிரதேசத்தில் வருமானம் ஈட்டுவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் தொடர்பாக சிறு தொழில் முனைவோர்களிடையே பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்து ICSSR உடன், தேசிய அளவிலான கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது.

இந்த கருத்தரங்கின் தலைமை விருந்தினராக புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க. தரணிக்கரசு கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல துணை பொது மேலாளர் திரு. வெங்கடாசுப்பிரமணியன் எம், பாரத ஸ்டேட் வங்கி புதுச்சேரி மண்டல உதவி பொது மேலாளர் ஸ்ரீமதி எஸ். அன்புமலர், இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் புதுச்சேரி, முதன்மை மாவட்ட மேலாளர் திரு. ஏ. சதீஷ்குமார், இந்தியன் வங்கி புதுச்சேரி முதன்மை மேலாளர் திரு. பெரியதம்பி, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீமதி ஜோசபின் சகாயராணி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துப் பேசியனர்.

தொடக்க உரையின் போது, பேராசிரியர் க. தரணிக்கரசு, பங்கேற்பாளர்களுக்கு இந்திய அரசின் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY), ஸ்டார்ட்-அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற தொழில் முனைவோர் ஊக்கத்திற்கான திட்டங்களை மற்றும் நிதியுதவி நடவடிக்கைகளைக் குறித்துப் பேசி, சிறு தொழில் முனைவோர்கள் அதிக வாய்ப்புகளைப் பெற ஊக்கப்படுத்தினார்.

வங்கிகளின் வல்லுநர்கள், பிரதம மந்திரி முத்ரா யோஜனா மற்றும் அதன் புதுவை பிராந்தியத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை பற்றி விளக்கினர். சொற்பொழிவின் போது, புதுவை மண்டலத்தில் 70%கும் மேலாக இந்த திட்டத்தின் பயனாளிகளில் பெண்கள் முன்னிலையில் உள்ளனர் என கூறப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு புதிய வணிகத் திட்டங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள வணிகங்களுக்கு மறுநிதி வழங்குவதற்கும் ஆலோசனை மற்றும் இலவச கடன் வசதி வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கு ICSSR ஆராய்ச்சி திட்டமாக, புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறையின் முதன்மை ஆய்வாளரான பேராசிரியர் பி.ஜி. அருளின் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை வங்கி அதிகாரிகள், ஆசிரியர்கள், பயனாளிகள் மற்றும் மாணவர்களிடம் சமர்ப்பித்தார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக, குழு விவாதம் நடைபெற்றது, இதில் நிகழ்நேர பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

MSME கள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) தாக்கம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த நிகழ்வு பல்வேறு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒரே இடத்தில் ஒன்றிணைத்தது. நிகழ்ச்சியின் இறுதியில், சர்வதேச வணிகவியல் துறையின் ஆராய்ச்சி அறிஞரான திரு. பி. சந்தோஷ் நன்றி உரை வழங்கினார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …