இந்தியாவில், 2024 செப்டம்பர் 30 அன்றைய தொலைத்தொடர்பு சந்தாதாரர் புள்ளி விவரங்களின் முக்கிய அம்சங்களை இந்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024 செப்டம்பர் மாதத்தில் நாட்டில் 944.40 மில்லியன் அகன்ற கற்றை சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் 900.77 மில்லியன் கம்பியில்லா சந்தாதாரர்களும், 43.63 மில்லியன் கம்பி இணைப்பு வழி சந்தாதாரர்களாகவும் உள்ளனர். நகர்ப்புற தொலைபேசி சந்தாதாரர்களைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 662.15 மில்லியன் சந்தாதாரர்களில் 628.12 மில்லியன் கம்பியில்லா இணைப்புகளும், 34.03 மில்லியன் கம்பி வழி இணைப்புகளும் உள்ளன. மாதாந்திர வளர்ச்சி புள்ளிவிவரப்படி, செப்டம்பர் மாதத்தில் கம்பியில்லா இணைப்புகளில் 0.80% குறைந்துள்ளது. அதேவேளையில், கம்பிவழி இணைப்பு 1.98% அதிகரித்துள்ளது.
கிராமப்புற தொலைப்பேசி சந்தாதாரர்களைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 528.51 மில்லியன் சந்தாதாரர்களில், 525.60 மில்லியன் கம்பியில்லா இணைப்புகளும், 2.90 மில்லியன் கம்பி வழி இணைப்புகளும் உள்ளன. மாதாந்திர வளர்ச்சி புள்ளிவிவரப்படி, செப்டம்பர் மாதத்தில் கம்பியில்லா இணைப்புகளில் 0.95% குறைந்துள்ளது. கம்பிவழி இணைப்பு 1.33% அதிகரித்துள்ளது.
மொத்த தொலைபேசி சந்தாதாரர்களைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 1190.66 மில்லியன் சந்தாதாரர்களில், 1153.72 மில்லியன் கம்பியில்லா இணைப்புகளும், 36.93 மில்லியன் கம்பி வழி இணைப்புகளும் உள்ளன. மாதாந்திர வளர்ச்சி புள்ளிவிவரப்படி, செப்டம்பர் மாதத்தில் கம்பியில்லா இணைப்புகளில் 10.11% குறைந்துள்ளது. கம்பிவழி இணைப்பு 1.93% அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி விகிதம் 84.69% ஆக உள்ளது. இதில் 55.61% சந்தாதாரர்கள் நகர்ப்புறங்களிலும் 44.39% கிராமப்புறங்களிலும் உள்ளனர்.
இதே காலகட்டத்தில், 13.32 மில்லியன் சந்தாதாரர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவதற்கான மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி விண்ணப்பங்களை சமர்ப்பத்துள்ளதாகவும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.