புதிதாக தொடங்கப்பட்ட மிஷன் மௌசம் எனப்படும் வானிலை இயக்கம், முழுமையான ரேடார் வானிலை முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் கணிப்புகளின் துல்லியத்தை மேம்படுத்தும். இதற்கொன நாடு முழுவதும் டாப்ளர் வானிலை ரேடார் (டிடபிள்யூஆர்) கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும். 34 டிடபிள்யூஆர் ரேடார்களை வாங்க ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர செலவின நிதிக் குழு மேலும் 53 டிடபிள்யூஆர்-களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஒரு உயர்நிலை டிடபிள்யூஆர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது இரட்டை துருவமுனைப்பு, திட-நிலை சக்தி பெருக்கி (SSPA) போன்ற நன்கு நிரூபிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
மேற்பரப்பு அடிப்படையிலான கணிப்புகளும் டிடபிள்யூஆர் கட்டமைப்புகளும் ஒரு இடத்தில் அதிக முதல் மிக அதிக மழைப்பொழிவைக் கண்காணிக்கின்றன. டிடபிள்யூஆர் கண்காணிப்புகள் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் மேக படங்களை வழங்குகின்றன. இது 1 மணி நேரம் வரை மிகக் குறுகிய காலத்தில் தொடர்புடைய கனமழை நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் வெளியிடவும் உதவும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.