மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய ஆயுஷ் இயக்கம், நாட்டில் உள்ள மாநிலங்கள்யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. (SAAPs). இந்த இயக்கம் பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்கிறது.
தற்போதுள்ள ஆயுஷ் மருந்தகங்கள், துணை சுகாதார மையங்களை மேம்படுத்துவதன் மூலம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையம் அமைக்கப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் ஆயுஷ் வசதிகளை இணைக்கப்படுகின்றன.
தற்போதுள்ள தனித்துவமான அரசு ஆயுஷ் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுகிறது.
10 அல்லது 30 அல்லது 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் அமைத்தல்.
அரசுத் துறையில் ஆயுஷ் கல்வி நிறுவனங்கள் போதுமான அளவில் இல்லாத மாநிலங்களில் புதிய ஆயுஷ் கல்லூரிகளை நிறுவுதல்.
தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ், தமிழ்நாட்டுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ. 140.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ. 66.35 கோடி ஒதுக்கப்பட்டது.
2014-15 முதல் 2023-24 வரை தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள்
ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகளை அமைக்க 167 பிரிவுகளுக்கு நிதியுதவி.
உள்கட்டமைப்பு, பிற வசதிகளை மேம்படுத்த 416 ஆயுஷ் மருத்துவமனைகள், 5036 ஆயுஷ் மருந்தகங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2000க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆதரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 996 ஆயுஷ் மருத்துவமனைகள், 12405 ஆயுஷ் மருந்தகங்கள் அத்தியாவசிய ஆயுஷ் மருந்துகளை விநியோகிக்க ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆயுஷ் கல்வி நிறுவனங்களை நிறுவ 16 பிரிவுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு, நூலகம், பிற விஷயங்களை மேம்படுத்துவதற்காக 76 இளங்கலை, 36 முதுகலை ஆயுஷ் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
3883 யோகா நலவாழ்வு மையங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
12500 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.