गुरुवार, जनवरी 09 2025 | 09:50:40 PM
Breaking News
Home / अन्य समाचार / ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறார்கள் அடிமையாவதை தடுப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறார்கள் அடிமையாவதை தடுப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்

Follow us on:

ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் போதை போன்ற சாத்தியமான தீங்குகளை அரசு அறிந்திருக்கிறது. இந்திய அரசின் கொள்கைகள் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 என்பதை வகுத்தது. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சட்டவிரோத தகவல்களை அகற்றுவதற்கான விரைவான நடவடிக்கையை உள்ளடக்கிய தங்கள் பொறுப்புணர்வை இடைத்தரகர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தொடர்புடைய தகவல்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தலும் இதில் அடங்கும்.

மேலும், ஆன்லைன் விளையாட்டு குறைபாடுகளை சமாளிப்பது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு செப்டம்பர் 27 கல்வி அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 10, 2021 அன்று கல்வி அமைச்சகம் குழந்தைகளின் பாதுகாப்பான ஆன்லைன் விளையாட்டு குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு  ஆலோசனையை வழங்கியுள்ளது.

எந்த ஆன்லைன் விளையாட்டு விளம்பரமும் 18 வயதுக்குட்பட்ட எவரையும் சித்தரிக்கக் கூடாது.

இதுபோன்ற ஒவ்வொரு விளம்பரமும் இந்திய விளம்பர தரநிலைக் கவுன்சில் விதிமுறைக்கு ஏற்ப அச்சு/நிலையான மற்றும் ஆடியோ/வீடியோ விளம்பரங்களில் இந்த விளையாட்டு நிதி இழப்பு ஆபத்தை உள்ளடக்கியது என்று தெரிவிக்க வேண்டும்.

விளம்பரங்கள் தங்கள் விளையாட்டுகளை மாற்று வேலை வாய்ப்பாகக் காட்டக்கூடாது.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது விளையாட்டு செயல்பாட்டை எந்த வகையிலும் செய்பவர் மிகவும் வெற்றிகரமானவர் என்று அவர்கள் சித்தரிக்கக்கூடாது.

ஆன்லைன் பந்தய தளங்கள் மற்றும்/அல்லது இந்த தளங்களை பினாமி முறையில் சித்தரிக்கும் எந்தவொரு தயாரிப்பு/சேவையின் விளம்பரங்களையும் வெளியிடுவதையும், ஒளிபரப்புவதையும் தவிர்ப்பதற்காக, சமூக ஊடக தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு 21 மார்ச் 2024 தேதியிட்ட அறிவுரையை தகவல் ஒலிபரப்பு  அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் இந்திய பார்வையாளர்களை குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சகம் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவியுள்ளது, இது சட்ட அமலாக்க முகமைகளுக்கு ஒரு கட்டமைப்பையும் சூழல் அமைப்பையும் வழங்குகிறது. ஒருங்கிணைந்த முறையில். அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் பொதுமக்கள் புகாரளிக்க, தேசிய சைபர் கிரைம்  போர்ட்டலை (https://cybercrime.gov.in) MHA அறிமுகப்படுத்தியுள்ளது.  இணையப் புகார்களைத் தெரிவிக்கும் வகையில், ‘1930’ என்ற கட்டணமில்லா உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …