सोमवार, नवंबर 25 2024 | 09:15:01 AM
Breaking News
Home / Choose Language / Tamil / புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2024 அக்டோபர் 24 அன்று “கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்பு” வெளியிடுவதைத் தொடங்கிவைக்கிறார்

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2024 அக்டோபர் 24 அன்று “கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்பு” வெளியிடுவதைத் தொடங்கிவைக்கிறார்

Follow us on:

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்திய வானிலை ஆய்வுத்துறையுடன் இணைந்து, கிராம பஞ்சாயத்துகளுக்கு தினசரி வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் முயற்சியை நாளை (அக்டோபர் 24)  தொடங்கவுள்ளது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதனைத் தொடங்கிவைக்கிறார்.

கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அடிமட்டத்தில் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும். அரசின் முதல் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி அடிமட்ட நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது. மேலும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. பருவநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க கிராமப்புற மக்களை  ஆயத்தப்படுத்துகிறது.

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் விரிவாக்கப்பட்ட சென்சார் கவரேஜின் ஆதரவுடன், கிராமப் பஞ்சாயத்து மட்டத்தில் உள்ளூர்மயமாக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். அமைச்சகத்தின் டிஜிட்டல் தளங்கள் மூலம் கணிப்புகள் வெளியிடப்பட்டு பகிரப்படும் .இது திறமையான ஆளுகை, திட்டக் கண்காணிப்பு மற்றும் வள மேலாண்மைக்கு உதவுகிறது.  குடிமக்கள் உள்ளூர் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளவும் பிரச்சனைகள் பற்றி புகாரளிக்கவும் அனுமதிப்பதன் மூலம் சமூக ஈடுபாட்டை இந்த வசதி வளர்க்கிறது; கிராம மஞ்சித்ரா, ஒரு இடஞ்சார்ந்த திட்டமிடல் கருவி ஆகும். இது வளர்ச்சித் திட்டங்களுக்கு புவிசார் நுண்ணறிவுகளை வழங்குகிறது.

இந்தத் தொடக்க விழாவில், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்குடன் , அத்துறைக்கான இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகல்,  அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் திரு தேவேஷ் சதுர்வேதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த முன்னோடி முயற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் “கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்புகள்” குறித்த  பயிலரங்கு ஏற்பாடு செய்யப்படும். இந்தப் பயிலரங்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் மாநில பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள். இப்பயிற்சி அமர்வு, ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களுக்கு அடிமட்ட அளவில் வானிலை முன்னறிவிப்பு கருவிகள் மற்றும் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான அறிவு மற்றும் திறன்களை வளர்த்து, சரியான முடிவுகளை எடுக்கவும், தங்கள் சமூகங்களில் பருவநிலை பின்னடைவை மேம்படுத்தவும் உதவும்.

அரசின் முதல் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அங்கமான இந்த முயற்சி, உள்ளூர் அளவிலான நிர்வாகத்தை அதிகரிப்பதற்கும், பருவநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்ட கிராமங்களை வளர்ப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். வானிலை என்பது கணிக்க முடியாததாக மாறி வருவதால், கிராம பஞ்சாயத்து மட்டத்தில் வானிலை முன்னறிவிப்பை அறிமுகப்படுத்துவது விவசாய வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதிலும், இயற்கைப் பேரழிவுகளுக்கு எதிராக கிராமப்புற தயார்நிலையை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய கருவியாக செயல்படும். வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்றின் வேகம் மற்றும் மேகமூட்டம் குறித்த தினசரி புதிய அறிவிப்புகளை கிராம பஞ்சாயத்துகள் இனி பெறுவதுடன், விதைப்பு, நீர்ப்பாசனம் மற்றும் அறுவடை நடவடிக்கைகள் போன்றவற்றில்  முக்கியமான முடிவுகளை எடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும். இந்தக் கருவிகள் பேரிடர் தயார்நிலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடலையும் வலுப்படுத்தும். மேலும், புயல் மற்றும் கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்து பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு குறுந்தகவல் எச்சரிக்கைகள் அனுப்பப்படும், உயிர்கள், பயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை உறுதி செய்யப்படும். இந்த முயற்சி அடிமட்டத்தில் பருவநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்ட சமூகங்களை உருவாக்குவதற்கான மாற்றமாக இருக்கும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

மனதின் குரல் உரையில் லோத்தலின் கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் முக்கியத்துவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்

பிரதமர் திரு:நரேந்திர மோடி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலின் 116-வது நிகழ்ச்சியில் பேசியபோது, இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் லோத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஹரப்பா நாகரிகத்துடன் தொடங்கிய இந்தியாவின் 5000 ஆண்டுகள் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துரைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய அருங்காட்சியகமாக, கப்பல்  துறை அமைச்சகத்தின் கீழ் லோத்தல் இப்போது அமைக்கப்படுகிறது. இந்த முயற்சி குறித்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, “லோத்தல் இந்தியாவின் கடல்சார் திறமை, பழைய வர்த்தக திறன்கள் ஆகியவற்றின் பெருமைமிக்க சின்னமாகும். இங்கு உருவாக்கப்படும் அருங்காட்சியகம் நமது வளமான கடல் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் உலகளாவிய மையமாக மாறும்.” என்றார். பிரிவினையில் உயிர் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தும் வாய்மொழி வரலாற்றுத் திட்டத்தை பிரதமர் மேலும் எடுத்துரைத்தார். பிரிவினையின் சில சாட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த முயற்சி அவர்களின் அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பழங்காலப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் தற்போதைய இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த முயற்சிகளுக்கு பங்களிப்பதன் மூலமும், இந்தியாவின் கடல்- கலாச்சார வரலாற்றின் மரபு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் இதில் தீவிரமாக பங்கேற்க பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை ஊக்குவித்துள்ளார்.