बुधवार, अक्तूबर 30 2024 | 05:00:26 PM
Breaking News
Home / Choose Language / tamil / நாட்டின் வடகிழக்குப் பகுதி இப்போது நமது தேசிய வளர்ச்சியின் மையமாக உள்ளது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

நாட்டின் வடகிழக்குப் பகுதி இப்போது நமது தேசிய வளர்ச்சியின் மையமாக உள்ளது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Follow us on:

நாட்டின் வடகிழக்கு பகுதி தற்போது நமது தேசிய வளர்ச்சியின் மையமாக உள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். குவஹாத்தியில் உள்ள கால்நடை அறிவியல் கல்லூரியில் இன்று (27.10.2024) நடைபெற்ற கிருஷ்ணகுரு சர்வதேச ஆன்மிக இளைஞர் சங்கத்தின் 21-வது சர்வதேச மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

பல ஆண்டுகளாக, வடகிழக்குப் பிராந்தியம் வளர்ச்சி, போக்குவரத்து இணைப்பு தொடர்பான சவால்களை எதிர்கொண்டது என்று அவர் கூறினார். ஆனால் இன்று இந்தப் பகுதி வளர்ச்சியின் முன்னுரிமைப் பகுதியாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்,

நமது நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மூன்று கொள்கைகள் அவசியம் என்று அவர் கூறினார்.  எந்த சூழ்நிலையிலும், ஆன்மீகத்திலிருந்து உங்களை விலகி இருக்காதீர்கள் என அவர் வலியுறுத்தினார். ஆன்மிகப் பாதை, தேசியவாதம், நவீனத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய மூன்றும் இணையும் போது உலகின் மிகப் பெரிய  சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

கிருஷ்ணகுருஜியின் போதனைகளின் தாக்கத்தைக் கூறிய குடியரசுத் துணைத் தலைவர், கிருஷ்ணகுருஜி தெய்வீக அருளின் சாரத்தை உள்ளடக்கியவர் என்றும் அன்பு, சேவை, மனிதநேயம் பற்றிய தனது போதனைகளால் தனது பக்தர்களின் இதயங்களை ஒளிரச் செய்துள்ளார் என்றும் கூறினார்.

ஆன்மிகத்தின் உள்ளார்ந்த பண்புகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் மதிப்புகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல்  நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், கிருஷ்ணகுரு சர்வதேச ஆன்மீக இளைஞர் சங்கத்தின் தலைவர் கமலா கோகோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது

சென்னை சரகம்-3 வருமானவரி கூடுதல் ஆணையர் திரு எம் கார்த்திகேயன் வழிகாட்டுதலின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தில் அமைந்துள்ள கருத்தரங்கக் கூடத்தில், வருமானவரி பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த வருமானவரி பிடித்தம் குறித்த கருத்தரங்கத்தில்   70-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் செய்யும் வருமானவரி பிடித்தம் செய்பவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ஏஐஇஎம்ஏ (AIEMA) சங்க  துணைத் தலைவர் திரு ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். வருமானவரி துணை ஆணையர் திரு  ராஜாமனோகர்  தலைமை ஏற்று கருத்துரை வழங்கினார். அவர் தமது உரையில், வருமானவரி பிடித்தம் செய்பவர்கள் , முறையாக வருமான வரிப்பிடித்தம் / வரிவசூல் செய்வதன் அடிப்படை கடமை, வரிப்பிடித்தம் செய்த தொகையினை, காலத்தே  மத்திய அரசின் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாயம், காலாண்டு படிவங்களை பிழையின்றி காலத்திற்குள் தாக்கல் செய்யவேண்டிய முக்கியத்துவம், வரிப்பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவேண்டிய அவசியம் போன்றவை குறித்து தெளிவாக விளக்கினார். வருமானவரி வரி அலுவலர்கள் திரு ராஜாராமன், திரு தீபன் குமார், திரு செந்தில் குமார்,  வரிப்பிடித்தம் குறித்த தலைப்புகளில் எளிய முறையில் விளக்கினர். வருமானவரித் துறையால், வருமானவரி பிடித்தம் செய்பவர்களுக்கு உதவும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள், கருத்தரங்கத்தில் பங்குபெற்றவர்களுக்கு பகிரப்பட்டது.