मंगलवार, नवंबर 05 2024 | 03:57:30 PM
Breaking News
Home / Choose Language / tamil / பாதுகாப்புத் துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல முன்னோட்ட நடவடிக்கைகள் மூலம் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து இலக்குகளையும் 100% அகற்றும் விகிதத்தை அடைந்துள்ளது

பாதுகாப்புத் துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல முன்னோட்ட நடவடிக்கைகள் மூலம் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்ட அனைத்து இலக்குகளையும் 100% அகற்றும் விகிதத்தை அடைந்துள்ளது

Follow us on:

சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் உற்பத்தித்திறன், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் திறமையான இட பயன்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அடையாளம் காணப்பட்ட அனைத்து இலக்குகளும் 100% நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த
இயக்கத்தின் போது பாதுகாப்புத் துறை பின்வரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது:
குறைகள் நிவர்த்தி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ முக்கியமான பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்ட 45 குறிப்புகள், மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மூலம் 169 பொது குறைகள் ஆகியவை தீர்த்து வைக்கப்பட்டன.
கோப்பு மதிப்பாய்வு மற்றும் அகற்றல் மதிப்பாய்வு செய்யப்பட்டு  கோப்புகள் வெற்றிகரமாக களையெடுக்கப்பட்டன.
வருவாய் உருவாக்கம் மற்றும் தேவையற்ற உபகரணங்களை அப்புறப்படுத்துவதன் மூலம், இத்துறை 2.66 லட்சம் சதுர அடி இடத்தையும் விடுவித்தது.
பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய 3,832 இடங்களில் விரிவான மக்களை மையமாகக் கொண்ட ஈடுபாடு இந்த இயக்கத்தில் அடங்கும்.
டார்ஜிலிங்கில் உள்ள ஹிமாலயன் மலையேறுதல் நிறுவனம் (HMI) பல திட்டங்களை முன்னெடுத்தது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மழைநீர் சேகரிப்பு வசதி ஆக்கப்பூர்வமாக கழிவுகளைப் பயன்படுத்துதல், சைனிக் பள்ளியில் அமராவதி நகரில், மறுபயன்பாட்டு பீப்பாய்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மறுசுழற்சி தொட்டிகளால் பள்ளி மைதானத்தைச் சுற்றியுள்ள குப்பைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன.
எதிர்காலத்தில், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் புத்தாக்கத்தின் செய்தியை ஊக்குவிப்பதற்காக நல்லாட்சி வாரம் 2024-ன் போது இந்த நிலையான நடைமுறைகளைக் காட்சிப்படுத்த பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

உயிரி தொழில்நுட்பத்துறை சிறப்பு பிரச்சாரம் 4.0ஐ வெற்றிகரமாக நிறைவுசெய்தது

உயிரி தொழில்நுட்பத்துறையானது தனது தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு பிரச்சாரம் 4.0ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிர்வாகச் …