குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை மற்றும் அதன் திட்டப்பிரிவுகள், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது.
அலுவலகங்களின் தூய்மையை மேம்படுத்துவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், மாநில அரசுகளின் குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள், பிரதமர் அலுவலகக் குறிப்புகள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடுகள் போன்றவற்றில் நிலுவையில் உள்ள பணிகளுக்கு தீர்வு காண்பதும் இந்த இயக்கத்தின் நோக்கங்களாகும்.
இந்தக் காலகட்டத்தில் 5 பிரதமர் அலுவலகம்/ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்புகள்/ உத்தரவாதங்கள் தீர்வு காணப்பட்டன. நிலுவையில் இருந்த 163 பொது மக்கள் குறை தீர்க்கும் மனுக்களுக்கும் மற்றும் 22 பொது மக்கள் குறை தீர்க்கும் மேல்முறையீட்டு மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. பழைய மற்றும் உபயோகமற்ற பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் இவ்வலுவலகங்கள் ரூ.1.60 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளன.