बुधवार, नवंबर 06 2024 | 05:30:03 AM
Breaking News
Home / Choose Language / tamil / உச்சநீதிமன்றத்தின் மூன்று வெளியீடுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டார்

உச்சநீதிமன்றத்தின் மூன்று வெளியீடுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டார்

Follow us on:

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 5, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் உச்சநீதிமன்றத்தின் மூன்று வெளியீடுகளை வெளியிட்டார். இன்று வெளியிடப்பட்ட வெளியீடுகள்: (i) தேசத்திற்கான நீதி: இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் பற்றிய பிரதிபலிப்புகள்; (ii) இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள்: மேப்பிங் சிறை கையேடுகள், சீர்திருத்தம் மற்றும் நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்; மற்றும் (iii) சட்டப் பள்ளிகள் மூலம் சட்ட உதவி: இந்தியாவில் சட்ட உதவி மையங்களின் வேலை குறித்த அறிக்கை ஆகியவை ஆகும்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்திய பண்பாடு மற்றும் யதார்த்தங்களில் வேரூன்றியுள்ள நீதித்துறையை, உச்சநீதிமன்றம் வளர்த்துள்ளது என்றார். தேசத்திற்கான நீதி என்ற தலைப்பிலான புத்தகம், உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகால பயணத்தின் முக்கிய அம்சங்களை படம் பிடித்துக் காட்டுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் உச்ச நீதிமன்றத்தின் தாக்கத்தையும் இது விவரிக்கிறது.

நமது நீதி வழங்கும் முறைமை, நீதியான மற்றும் நியாயமான சமுதாயமாக நாம் முன்னேறிச் செல்வதற்கு வலுசேர்க்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சட்ட உதவி மையங்களின் செயல்பாடு குறித்த அறிக்கை, நமது நாட்டில் உள்ள சட்டப் பள்ளிகளில் செயல்படும் சட்ட உதவி மையங்கள் குறித்து அர்ப்பணிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இத்தகைய சட்ட உதவி மையங்கள் நமது இளைஞர்களுக்கு முழுமையான சட்டக் கல்வியை வழங்குவதற்கும், நமது சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் தேவைகளை அவர்களுக்கு உணர்த்துவதற்கும் பங்களிக்கின்றன என்று அவர் கூறினார்.

விசாரணைக் கைதிகளின் நிலை தமக்கு மிகுந்த கவலை அளிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதில் நீதித்துறையின் பங்கு குறித்து சிறை அமைப்பு குறித்த அறிக்கை புரிந்து கொள்ள முயல்கிறது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள வெளியீடுகள் இலவச சட்ட உதவி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நோக்கங்களை யதார்த்தமாக்குவதற்கு உதவும் என்று நம்பிக்கை தெரிவித்த குடியரசுத் தலைவர், ஒரு குடியரசு என்ற வகையில் எமது பயணத்தில் உயர்நீதிமன்றம் ஆற்றிய சிறப்பு பங்களிப்பு பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தை ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றியதற்காக கடந்த கால மற்றும் நிகழ்கால அமர்வு மற்றும் வழக்கறிஞர்களை அவர் பாராட்டினார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்,தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் ஆகியவற்றுக்கான வெளியீட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் ஆகியன நாட்டின் தொழில் துறை வளர்ச்சி, ஒருங்கிணைந்த துறைகள், ஊரக …