बुधवार, नवंबर 06 2024 | 08:56:09 PM
Breaking News
Home / Choose Language / tamil / இந்தோ-டென்மார்க் ஒத்துழைப்பு உலகளாவிய நீர் தீர்வுகளுக்கு வழி வகுக்கிறது

இந்தோ-டென்மார்க் ஒத்துழைப்பு உலகளாவிய நீர் தீர்வுகளுக்கு வழி வகுக்கிறது

Follow us on:

அடல் புத்தாக்க இயக்கம் (எய்ம்)-டென்மார்க் புத்தாக்க புத்தாக்கமையம் (ஐசிடிகே) நீர் புத்தாக்க சவால் 4.0 என்னும் நான்காவது பதிப்பு டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடந்த 2024 அடுத்த தலைமுறை டிஜிட்டல் வெற்றிகரமாக முடிவடைந்தது, இது வளர்ந்து வரும் இந்தோ-டென்மார்க்  பசுமை உத்திசார் கூட்டாண்மையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.

இந்த ஆண்டின் சவால், உலகளாவிய நீர் பிரச்சினைகளுக்கு புதுமையான மற்றும் நிலையான தீர்வுகளைக் காண்பதற்கான  வளர்ப்பதற்கான முதன்மையான தளமாக அதன் நிலையை வலுப்படுத்தியது. இந்த சவால் அடல் புத்தாக்க இயக்கம், நிதி ஆயோக், புத்தாக்க மையம் டென்மார்க் மற்றும் அடுத்த தலைமுறை செயல் திட்டத்தின் கீழ் டிடியு ஸ்கைலாப் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்பாளர்களை ஒன்றிணைத்தது, சுத்தமான நீருக்கான சர்வதேச மையம், ஜல் சக்தி அமைச்சகம், டென்மார்க் தூதரகம், டென்மார்க்கின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் டானிடா பெல்லோஷிப் ஆகியவற்றின் ஆதரவுடன் இது சாத்தியமானது.

இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான கூட்டாண்மை, தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நிரூபித்துள்ளது. அவசர சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளையும் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எய்ம்-ஐசிடிகே நீர் கண்டுபிடிப்பு சவால் குறிப்பாக பயனுள்ளதாக உள்ளது.

அடல் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்: “தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏஐஎம்-ஐசிடிகே நீர் சவால், உலகளாவிய நீர் சவால்களுக்கு நிலையான, புதுமையான தீர்வுகளை காண்பதில் இந்தியா மற்றும் டென்மார்க்கின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. கோபன்ஹேகனில் நடந்த அடுத்த தலைமுறை டிஜிட்டல் நடவடிக்கை 2024-ல், இளம் கண்டுபிடிப்பாளர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் அழுத்தமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சவால் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மட்டுமல்லாமல், நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் திறனுடன் நடைமுறை தீர்வுகளையும் ஊக்குவிக்கிறது. நீர் மேலாண்மை, பாதுகாப்பு, அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அற்புதமான தீர்வுகளை இந்தியா மற்றும் டென்மார்க் ஆகிய இரு நாடுகளின் குழுக்களும் காட்சிப்படுத்தின. தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை இந்த ஆண்டு நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

பெங்களூரில் உள்ள டென்மார்க் துணைத் தூதரகத்தின் தலமை தூதரும், வர்த்தக மற்றும் கண்டுபிடிப்புகளின் தலைவருமான எஸ்கே போ ரோசன்பெர்க், ஒத்துழைப்பு குறித்த தமது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார், “அடுத்த தலைமுறை டிஜிட்டல் அதிரடி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தோ-டென்மார்க் உறவுகளின் வலிமையைக் காட்டுகிறது. உலகளாவிய ஒத்துழைப்பின் உணர்வை உள்ளடக்கிய தீர்வுகளை இளம் தொழில்முனைவோர் உருவாக்குவதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது, நிலையான வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான எங்கள் பகிரப்பட்ட இலக்குகளை முன்னெடுத்துச் செல்கிறது என அவர்தெரிவித்தார்.

உலகளாவிய அடுத்த தலைமுறை டிஜிட்டல் செயல் திட்டத்தில் பங்கேற்ற ஐந்து ஸ்டார்ட் அப் குழுக்களை இந்திய தூதுக்குழு உள்ளடக்கியது, 10 நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களைச் சேர்ந்த இளம் திறமைகளை ஈடுபடுத்தியது. அவற்றில், கிளைம் 8 (விஐடி வேலூர்), செக்மேட் (விஐடி வேலூர்) மற்றும் குவால்கிரிப் (ஐஐடி மெட்ராஸ்) ஆகிய மூன்று பல்கலைக்கழக குழுக்களும் அடங்கும். இவை  முக்கியமான உலகளாவிய நீர் சவால்களை சமாளிக்கும் நம்பிக்கைக்குரிய தீர்வுகளை உருவாக்கின.

குறிப்பாக, விஐடி வேலூரைச் சேர்ந்த மூன்று இளம் கண்டுபிடிப்பாளர்களைக் கொண்ட கிளிம்8, ‘உள்கட்டமைப்பு விலைக்கான இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல்’ குறித்து தென்னாப்பிரிக்கா முன்வைத்த சவாலுக்கான முடுக்கம் விருதை வென்றது. தேசிய பிரிவில் சிறந்த ஸ்டார்ட்அப் விருதுடன் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

டென்மார்க்  அரசுக்கான இந்திய  தூதர் திரு மனீஷ் பிரபாத் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகள் கவுரவிக்கப்பட்டனர். அங்கு இளம் கண்டுபிடிப்பாளர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.

இந்த ஆண்டின் நீர் புத்தாக்க சவாலின் வெற்றி இந்திய-டென்மார்க் கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்கான தாக்கமான, அளவிடக்கூடிய தீர்வுகளை தொடர்ந்து இயக்கும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு களம் அமைக்கிறது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்,தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் ஆகியவற்றுக்கான வெளியீட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் ஆகியன நாட்டின் தொழில் துறை வளர்ச்சி, ஒருங்கிணைந்த துறைகள், ஊரக …