ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD) பயன்முறை உளவியல் துறை, ‘மைண்ட் எக்ஸ்போ 2024’ என்ற உளவியல் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. இக்கண்காட்சியில் நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு உளவியல் பரிசோதனைகள், ஆய்வுகள் மற்றும் சிகிச்சை நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிறுவனத்தின் முதுநிலை உளவியல் மாணவர்கள் மனித நடத்தைகளின் தன்மை மற்றும் நடத்தை மதிப்பீடு மற்றும் உளவியல் சிக்கல்களை நிர்வகிப்பதற்கான முறைகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இந்நிறுவனத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று அறிவியல் விளக்கங்கள் மூலம் தெளிவு பெற்றனர். இருபது வகையான அரங்குகள் மற்றும் பல்வேறு சோதனை உபகரணங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டாக்டர் எஸ். சுரேஷ், இணைப் பேராசிரியர் மற்றும் உளவியல் துறை தலைவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்.