शुक्रवार, नवंबर 22 2024 | 03:31:55 PM
Breaking News
Home / Choose Language / Tamil / இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் 70-வது ஆண்டு கொண்டாட்டங்களை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் 70-வது ஆண்டு கொண்டாட்டங்களை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

Follow us on:

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (இஇபிசி) 70-வது ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையின் போது, இணக்க சுமைகளைக் குறைப்பதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்காக சட்டங்களை குற்றமற்றதாக்குவதற்கும் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறும்போது, பொறியியல் ஏற்றுமதியின் சக்தியாக இந்தியாவை மாற்ற வேண்டியதன் அவசியத்தை திரு கோயல் வலியுறுத்தினார். இஇபிசி-யின் 70-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்வில் பொறியியல் சகோதரத்துவ உறுப்பினர்களிடையே பேசிய அமைச்சர், வளர்ச்சியடைந்த இந்தியா பார்வையை அடைவது இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதை உள்ளடக்கியது, இது நெகிழக்கூடிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் பொருட்களின் உயர்தர உற்பத்தி மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான கூட்டு அர்ப்பணிப்புடன் தங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்க பொறியியல் சகோதரத்துவம் தேவை என்று கூறினார்.

இ.இ.பி.சி மாதிரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் என்று அழைத்த திரு கோயல், பொறியியல் துறையின் பல்வேறு துறைகளில் இந்த அமைப்பு ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டினார். போக்குவரத்து, மூலதனப் பொருட்கள் துறை அல்லது எஃகுத் தொழில் என எதுவாக இருந்தாலும், நாட்டின் திறன்களின் வளர்ச்சியில் இஇபிசி மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்று அவர் கூறினார். அடுத்த 5-6 ஆண்டுகளில் 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு குறித்து குறிப்பிட்ட அவர், இந்த இலக்கு புதிய இந்தியா உலகத்தின் முன் வெளிப்படுத்தும் தைரியத்தையும், உறுதியையும் பிரதிபலிக்கிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இஇபிசி-யின் தலைவர் திரு அருண் குமார் கரோடியா, பொறியியல் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான முதன்மை அமைப்பாக, இஇபிசி இந்தத் துறையின் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து வழிநடத்தும், சாதகமான கொள்கைகளுக்கு வாதிடும் மற்றும் சர்வதேச சந்தைகளை வழிநடத்துவதில் உறுப்பினர்களுக்கு உதவும் என்று கூறினார்.

ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கடந்த 70 ஆண்டுகளில் பல மைல்கற்களை எட்டியுள்ளது என்றும், அடுத்த 70 ஆண்டுகளை மேலும் குறிப்பிடத்தக்கதாக மாற்ற பாடுபடும் என்றும் இஇபிசி தலைவர் குறிப்பிட்டார். ‘உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான இதன் ஆதரவு 24-ம் நிதியாண்டில் துறையின் 109 பில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு பங்களித்துள்ளது வாகன, மின்னணுவியல் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற துறைகளில் மேக் இன் இந்தியா முயற்சியை மேம்படுத்தியது என்று அவர் எடுத்துரைத்தார். கவுன்சிலின் உறுப்பினர் எண்ணிக்கை பல தசாப்தங்களாக கணிசமாக வளர்ந்துள்ளது என்றும், 1955-ல் வெறும் 40 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 2024-ல் 9,500 ஐ எட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது

மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது …