रविवार, नवंबर 24 2024 | 01:17:51 PM
Breaking News
Home / Choose Language / Tamil / ஆரோக்கியம் மிக முக்கியமானது; அது தனிநபர், சமூக உற்பத்தித்திறனுடன் நேரடியாக தொடர்புடையது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

ஆரோக்கியம் மிக முக்கியமானது; அது தனிநபர், சமூக உற்பத்தித்திறனுடன் நேரடியாக தொடர்புடையது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Follow us on:

ஒரு தனிநபரின் ஆரோக்கியம், தனிநபரின் உற்பத்தித்திறனுடனும் சமூகத்தின் ஒட்டுமொத்த திறனுடனும்  நேரடி தொடர்பு உடையது என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நல்ல ஆரோக்கியம் என்பது தனிநபருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூக நலத்திற்கும் அவசியம் என்பதால் ஆரோக்கியம் மிக முக்கியமானது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டார்.

ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் 64-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், மருத்துவ வல்லுநர்கள் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறார்கள் என்றார். மேலும் மனிதகுலத்தில் ஆறில் ஒரு பகுதி மக்கள் வசிக்கும் பாரதத்தில் மருத்துவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.  சுகாதாரம் என்பது ஒரு தெய்வீக பங்களிப்பு எனவும் அது ஒரு சேவை என்றும் அவர் தெரிவித்தார். சுகாதாரப் பராமரிப்பு என்பது வர்த்தகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட ஆரோக்கியமான சமுதாயத்தின் அவசியத்தை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நாம் அதிவேக பொருளாதார எழுச்சியையும், வியக்கத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் பெற்று வருகிறோம் என்றார். ஒரு காலத்தில் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களின் ஒன்றாக இருந்த பாரதம், இப்போது ஐந்து பெரிய உலகளாவிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது எனவும் இது விரைவில் மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த லட்சியத்தை நிறைவேற்ற நமது தனிநபர் வருமானத்தை 8 மடங்கு அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார். மக்கள் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் இருந்தால் மட்டுமே இதை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் உற்பத்திக்கு ஆதரவளிக்குமாறு தொழில்துறையினரை வலியுறுத்திய திரு ஜக்தீப் தன்கர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை நாம் வலுவாக ஆதரிக்க வேண்டும் என்றார். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உயர்ந்தவை என்ற கட்டுக்கதையை உடைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நமது புனித நூல்களில் நல்ல ஆரோக்கியம் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகளை சுட்டிக் காட்டிய திரு ஜக்தீப் தன்கர், நமது வேதங்கள், நமது புராணங்கள், நமது உபநிடதங்கள் ஞானத்தின் தங்கச் சுரங்கம் என்றார்.

ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் ஷிவ் சரின், மத்திய அரசின் சுகாதாரம் – குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் சுதிர் கோகலே, ஜோத்பூர் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ஜி.டி.பூரி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மின்னணு பொம்மை ஹேக்கத்தானை அறிவித்துள்ளது

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய பொம்மை தொழில் துறை மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து ‘மின்னணுவியல்  மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டு பயிற்சி பெற்ற பொறியியல் பட்டதாரிகளின் முதல் தொகுதி பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடின. இந்த திட்டம் அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவின் முன்மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் இந்திய மின்னணு பொம்மைகள் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும், மேலும் இது இளம் பொறியாளர்களை சித்தப்படுத்துகிறது. அமைச்சகத்தின்  முன்முயற்சியின் கீழ், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் SC/ST  பின்னணியில் இருந்து இந்தியா முழுவதிலும் இருந்து இளம் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்வின் போது, அமைச்சகத்தின் செயலாளர் ,  மின்னணு பொம்மை ஹேக்கத்தானை அறிவித்தார். நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த அவர், “இந்தியாவில் மின்னணு பொம்மைகளின் சந்தை வளர்ந்து வருகிறது, மேலும் இந்திய பொம்மை தொழில் சூழலை உருவாக்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்ற முடியும். அதற்கான கட்டுமானத் தொகுதிகள் உருவாக்கப்படுவதையும், அடுத்த தலைமுறை பொறியாளர்கள் அதை நோக்கிச் செயல்படுவதையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்தை அதிக அளவில் மாணவர்களுக்கு வழங்குவதற்கும், பொம்மைத் தொழில்களின் ஒட்டுமொத்த ஊக்குவிப்பிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பெரிய அளவில் முறைப்படுத்தலாம். எஸ்டிபிஐ/எம்எஸ்ஹெச் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகளை மையமாகக் கொண்ட பிற நிறுவனங்களின் உதவியுடன் நாம், பட்டம் பெறும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவலாம்” என்றார். நவம்பர் 23, 2024 அன்று நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், அமைச்சகத்தின்  செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் திரு புவனேஷ் குமார், குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுனிதா வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.