गुरुवार, नवंबर 28 2024 | 11:01:12 PM
Breaking News
Home / Choose Language / Tamil / துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பின் சில்லறை விலை குறைந்து, கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது: மத்திய அரசு

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பின் சில்லறை விலை குறைந்து, கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது: மத்திய அரசு

Follow us on:

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் சில்லறை விலைகள் குறைந்து கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்துடன் (ஆர்ஏஐ) வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகிறது. சில்லறை விற்பனையாளர்கள், நியாயமான விலையை பராமரிப்பதை உறுதி செய்வதற்காக பருப்பு வகைகளின் மண்டி விலை, சில்லறை விலை ஆகியவற்றின் போக்குகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில்லறை சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் வகையில்,  பாரத் தால் பிராண்டின் கீழ் நுகர்வோருக்கு மலிவு விலையில் சில்லறை விற்பனைக்காக பருப்பு வகைகளின் இருப்பில் ஒரு பகுதியை அரசு தொகுப்பு  இடையகத்திலிருந்து மாற்றியுள்ளது. இதேபோல், கோதுமை மாவு, அரிசி ஆகியவை பாரத் பிராண்டின் கீழ் சில்லறை நுகர்வோருக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. நுகர்வோருக்கு வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நடவடிக்கைகள் பருப்பு வகைகள், அரிசி, கோதுமை கோதுமை மாவு, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கவும், விலையை நிலைப்படுத்தவும் உதவியுள்ளன.

காரீப் பயிர்களின் உற்பத்தி நல்ல நிலையில் உள்ளது. பாசிப்பயறு, உளுந்து போன்ற குறுகிய கால பயிர்களின் அறுவடை முடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துவரை பயிர் அறுவடை இப்போது தொடங்கியுள்ளது. இவை பருப்பு வகைகளின் விலையை மேலும் நிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தகவலை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

கடலோரக் காவல் படையின் 11-வது தேசிய கடல்சார் பயிற்சி – பாதுகாப்புத்துறை செயலாளர் தொடங்கி வைக்கிறார்

இந்தியக் கடலோரக் காவல்படையின் 11-வது (SAREX-24) தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சியும் பயிலரங்கும் 2024  நவம்பர் 28 -29, தேதிகளில் கேரளாவின் கொச்சியில் தேசிய …