2021-22-ம் ஆண்டு முதல் 2023-24-ம் ஆண்டு வரையிலான கடந்த 3 நிதியாண்டுகளிலும், நடப்பு 2024-25-ம் நிதியாண்டிலும் வடகிழக்குப் பகுதி சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (என்இஎஸ்ஐடிஎஸ்- NESIDS) கீழ் ரூ. 3417.68 கோடி மதிப்பிலான 90 திட்டங்களுக்கு வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் வடகிழக்குப் பகுதி மாநில அரசுகளால் (NER) செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களை கண்காணிக்கும் முதன்மை பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் உள்ளது. என்இஎஸ்ஐடிஎஸ் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றத்தை மத்திய வடகிழக்குப் பகுதி மேம்பா்டு அமைச்சகம் உன்னிப்பாக கண்காணிக்கிறது.
வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சகம், வடகிழக்கு கவுன்சில் ஆகியவற்றின் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் அமைச்சகத்தால் கள தொழில்நுட்ப ஆதரவு அலகுகள் (FTSU) அமைக்கப்பட்டுள்ளன. அவை திட்ட அமலாக்க முகமைகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு சுகந்தா மஜும்தார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.