गुरुवार, दिसंबर 05 2024 | 12:47:17 AM
Breaking News
Home / Choose Language / Tamil / 6 நிறுவனங்களின் நிர்வாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் கையெழுத்திட்டது

6 நிறுவனங்களின் நிர்வாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் கையெழுத்திட்டது

Follow us on:

மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA-ஐஐசிஏ), புதுதில்லியில் உள்ள தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் (NFRA-என்எஃப்ஆர.ஏ) தலைமையகத்தில் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு என்எஃப்ஆர்ஏ தலைவரும், ஐஐசிஏ-வின் டி.ஜி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் அஜய் பூஷண் பாண்டே தலைமை வகித்தார் .

கோர்ன் ஃபெர்ரி, ஏபிசி கன்சல்டன்ட்ஸ், ஈஎம்ஏ பார்ட்னர்ஸ் லிமிடெட், டிஹெச்ஆர் குளோபல், ஷெஃபீல்ட் ஹாவொர்த், வஹுரா ஆகிய ஆறு முன்னணி நிர்வாக தலைவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒத்துழைப்பு இந்திய நிறுவனங்களில் இயக்குநர்கள் குழுவில் இயக்குநர்களுக்கான தேர்வையும் நியமன செயல்முறைகளையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய நிறுவனங்களின் நிர்வாக வாரியங்களில் கார்ப்பரேட் நிர்வாகச் சிறப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.

இது குறித்து டாக்டர் அஜய் பூஷண் பாண்டே கருத்து தெரிவிக்கையில், நிறுவனங்களுடனான இந்த ஒத்துழைப்பு, நவீன வாரிய செயல்முறைகளில் வளர்ந்து வரும் தேவைகளுடன் இணைந்து, திறமையான நிபுணர்களுக்கான தேவைகளை உறுதி செய்யும் என்றார்.

இந்த முன்முயற்சிகள், வாரியத் தலைமை, தேர்வு நடைமுறைகள், மதிப்பீட்டு நடைமுறைகள், இந்திய இயக்குநர் குழுவை உலகத் தரத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கார்ப்பரேட் ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஐஐசிஏ-வின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

நவீன மற்றும் சமகால இந்திய கலைக்கான நாட்டின் முதன்மையான கலை நிறுவனமாக தேசிய நவீன கலைக்கூடம் திகழ்கிறது

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை அலுவலகமான தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம், நவீன மற்றும் சமகால …