गुरुवार, दिसंबर 05 2024 | 07:51:25 AM
Breaking News
Home / Choose Language / Tamil / குடியரசுத் தலைவர் டிசம்பர் 3 முதல் 7 வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்

குடியரசுத் தலைவர் டிசம்பர் 3 முதல் 7 வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்

Follow us on:

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 டிசம்பர் 3 முதல் 7 வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார்.

டிசம்பர் 3 அன்று, பண்டிட் ரகுநாத் முர்முவின் புதிய சிலையை திறந்து வைக்கும் குடியரசுத் தலைவர், புவனேஸ்வரில் உள்ள ஆடிம் ஓவர் ஜார்பா ஜாஹரையும் பார்வையிடுவார்.

டிசம்பர் 4 அன்று பூரியில் உள்ள ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலில் குடியரசுத்தலைவர் தரிசனம் செய்து  பூஜையில் ஈடுபடுகிறார். பூரியில் உள்ள கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.  அன்றைய தினம் பூரியில் உள்ள நீலக்கொடி கடற்கரையில் நடைபெறும் கடற்படை தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

டிசம்பர் 5 அன்று, புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 40-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார். அதே நாளில், புவனேஸ்வரில் புதிய நீதித்துறை நீதிமன்ற வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

டிசம்பர் 6 அன்று  தேதி உபர்பேடாவில் மாணவர்கள் மற்றும் கிராம மக்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடுகிறார். அதே நாளில், ரைரங்பூரில் உள்ள மகிளா மகாவித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.

டிசம்பர் 7 அன்று தேதி குடியரசுத் தலைவர் பங்கிரிபோசி-கௌருமாஹிசானி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்  தொடங்கி வைக்கிறார். புராமரா-சாக்குலியா; மற்றும் பதம்பஹர்-கெந்துஜர்கர் ரயில் பாதைகள் இவற்றில் அடங்கும்.  பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ரைரங்பூர்; தண்ட்போஸ் விமான நிலையம், ரைரங்பூர் மற்றும் துணைப்பிரிவு மருத்துவமனை, ரைரங்பூர் ஆகியவையும் இந்தத் திட்டங்களில் அடங்கும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

நவீன மற்றும் சமகால இந்திய கலைக்கான நாட்டின் முதன்மையான கலை நிறுவனமாக தேசிய நவீன கலைக்கூடம் திகழ்கிறது

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை அலுவலகமான தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம், நவீன மற்றும் சமகால …