ஹீரோ எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட், பென்லிங் இந்தியா எனர்ஜி அண்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் மற்றும் ஒகினாவா ஆட்டோடெக் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களில் தீவிர மோசடி கண்டறிதல் அலுவலகம் சோதனை நடத்தியது.
மத்திய அரசின் கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்வது (ஃபேம்) II திட்டத்தின் கீழ் மூன்று நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக ரூ.297 கோடி மானியங்களை மோசடியாகப் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மின்சார மற்றும் கலப்பு எரிபொருள் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக ஃபேம்-II திட்டம் 2019-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மூன்று நிறுவனங்களும், மானியங்களைக் கோரியதற்காக, கனரக தொழில்துறை அமைச்சகத்திற்கு பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதைக் காட்டியுள்ளன. இது தவறானது என்று பின்னர் கண்டறியப்பட்டது.
இந்த சோதனையின் போது, டிஜிட்டல் தரவுகள், புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் போன்ற ஆதாரங்கள் மீட்கப்பட்டன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.