முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தலைமையிலான இந்திய ராணுவ உயர்மட்டக் குழு, 2024 அக்டோபர் 31 முதல் நவம்பர் 03 வரை அல்ஜீரியா நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவது இந்தியா-அல்ஜீரியா உறவுகளை வலுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்தது. ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜெனரல் …
Read More »ஆசிய பௌத்த உச்சி மாநாடு 2024
பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளின் துடிப்பான கட்டமைப்பைக் கொண்ட இந்தியா, நீண்ட காலமாக புத்த மதத்தின் இதயப்பகுதியாக திகழ்ந்து வருகிறது. இந்தப் பண்டைய பாரம்பரியம் அதன் எல்லைகளுக்குள் செழித்து வளர்ந்தது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்த வளமான பாரம்பரியத்தைக் கொண்டாட, மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் (IBC) இணைந்து, முதல் ஆசிய பௌத்த உச்சி மாநாட்டை (ABS) 2024 நவம்பர் 5-6 தேதிகளில் …
Read More »தூய்மை இந்தியா இயக்கத்தை வலுப்படுத்தும் சிறப்பு இயக்கம் 4.0-ல் அஞ்சல் துறை முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது
அஞ்சல் துறை அதன் நாடு தழுவிய வலைப்பின்னலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், கொடுக்கப்பட்ட அளவுருக்களில் அதன் இலக்குகளையும் எட்டியுள்ளது. சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ், தூய்மை இந்தியாவுக்கான தேசிய இயக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.செப்டம்பர் 15 முதல் 30, 2024 வரை ஆயத்த நடவடிக்கைகளுடன் தொடங்கி, அக்டோபர் 2 முதல் 31 வரை இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது. அப்போது அஞ்சல் துறை அசல் இலக்கான 1 லட்சத்தை தாண்டி, அனைத்து 1.65 லட்சம் நெட்வொர்க் தளங்களையும் உள்ளடக்கியது. இந்தப் பரவலான தூய்மை முன்முயற்சி நாடு முழுவதும் தொலைதூர மற்றும் கிராமப்புற இடங்களைச் சென்றடைவதை உறுதி …
Read More »அரசு மின்னணு சந்தை (GeM) 170 விதை வகைகளை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது
தரமான வேளாண் மற்றும் தோட்டக்கலை விதைகள் கிடைப்பதை எளிதாக்கும் நோக்கில், அரசு 170 விதை வகைகளை புனரமைத்து இணையதளம் மூலமாக மின்னணு சந்தையில் (GeM) அறிமுகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் பயிர் பருவத்திற்காக உருவாக்கப்பட்ட இந்தப் புதிய வகைகளில் கிட்டத்தட்ட 8,000 விதை ரகங்கள் உள்ளன. அவை மத்திய / மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற ஆளும் அமைப்புகளால், நாடு முழுவதும் கிடைப்பதற்காக வாங்கப்படலாம். மாநில விதை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி …
Read More »கோல் இந்தியா நிறுவனம் 50-வது நிறுவன தினத்தை எதிர்காலத்திற்கான தொலைநோக்குடன் கொண்டாடுகிறது – வளர்ச்சியடைந்த இந்தியா
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோல் இந்தியா நிறுவனம் (சிஐஎல்), தனது 50-வது நிறுவன தினத்தை கொல்கத்தாவில் உள்ள கோல் இந்தியா தலைமையகத்தில் கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகவும், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு கடந்த ஐந்து தசாப்தங்களாக நாட்டின் எரிசக்தித் துறைக்கு சிஐஎல் ஆற்றியுள்ள பங்களிப்புகளைக் …
Read More »ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை சிறப்பு இயக்கம் 4.0 -ஐ, 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை மேற்கொள்கிறது
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ மேற்கொண்டு அது நிர்ணயித்த இலக்கை முழுமையாக அடைகிறது. ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனத் துறையும் அதன் அமைப்புகளும் இணைந்து 2.10.2024 முதல் 31.10.2024 வரை நடத்திய சிறப்பு இயக்கம் 4.0-ல் ஆர்வத்துடன் பங்கேற்று, அலுவலகங்களில் நிலுவையிலுள்ள பணிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது. ஆவண அறையில் உள்ள 2443 நேரடி கோப்புகளையும் மறு ஆய்வு செய்ய இத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. பரிசீலனை முடிந்த நிலையில், மொத்தம் 1250 கோப்புகள் கழிக்கப்பட்டுள்ளன. 4656 மின்னணு கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டதில் 880 மின்-கோப்புகள் நீக்கப்பட்டது. தூய்மை …
Read More »நமோ ட்ரோன் சகோதரி
மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பத்துடன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரம் அளித்தல் நவம்பர் 4, 2024 நமோ ட்ரோன் சகோதரி என்பது பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுவினரை விவசாய சேவைகளை மேற்கொள்ள ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கு ஆயத்தப்படுத்துவதன் மூலம், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மத்திய அரசின் திட்டமாகும். 2024-25 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, விவசாய நோக்கத்திற்காக …
Read More »அல்மோரா சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். @PMOIndia சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது வருத்தத்தையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த பிரார்த்தனைகளையும் பிரதமர் தெரிவித்துள்ளார். “உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் …
Read More »பாரதம் தற்போது காலனிய மனப்பான்மையை தூக்கி எறிந்துவிட்டு, முந்தைய முக்கிய காலனிய சிந்தனைகளை புறந்தள்ளுகிறது – குடியரசு துணைத்தலைவர்
காலனிய மனப்பான்மையை பாரதம் விரைவாக தூக்கி எறிந்து வருகிறது என்றும் முந்தைய காலனிய சிந்தனைகள் மற்றும் சின்னங்களை தற்போது நாம் புறந்தள்ளி வருகிறோம் என்றும், இந்திய பொது நிர்வாகம் காலனிய மனப்பான்மையிலிருந்து விலகி, சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது விருப்பங்களுடன் ஒத்துப்போகும் வகையில் இந்திய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கூறினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய பொது நிர்வாகக் கழகப் பொதுக்குழுவின் 70-வது ஆண்டுக் கூட்டத்தில் …
Read More »இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பெண் சாதனையாளர்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (நவம்பர் 4, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த பெண்கள் குழுவினருடன் கலந்துரையாடினார். மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதையும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ‘மக்களுடன் குடியரசுத்தலைவர்” என்ற முன்முயற்சியின் கீழ் இந்த சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், பெண்கள் முக்கியப் பங்காற்றி வருவதாகக் கூறினார். …
Read More »