मंगलवार, सितंबर 08 2026 | 08:43:55 AM

अन्य समाचार

55મો આઇએફએફઆઈ ભવ્ય સમાપન સમારોહ સાથે સંપન્ન

બધી સારી બાબતોનો અંત આવવો જ જોઇએ, ઇફ્ફી 2024 પણ 28 નવેમ્બર, 2024ના રોજ ગોવાના ડો.શ્યામા પ્રસાદ…

Saransh Kanaujia

કેન્દ્રીય સ્વાસ્થ્ય મંત્રી શ્રી જગત પ્રકાશ નડ્ડા વિશ્વ એઇડ્સ દિવસ 2024ની ઉજવણીનું નેતૃત્વ કરશે

વિશ્વ એઇડ્સ દિવસ 2024ના અવસરે, કેન્દ્રીય આરોગ્ય અને પરિવાર કલ્યાણ મંત્રી શ્રી જગત…

Saransh Kanaujia

પાયથન ઇન્ટર્નશિપ પ્રોગ્રામનો ઉપયોગ કરીને AI/MLનો સફળ સમાપન અહેવાલ

પીએમ શ્રી કેન્દ્રીય વિદ્યાલય અમદાવાદ છાવણી દ્વારા NIELIT દમણ ટીમના સહયોગથી પીએમ શ્રી હેન્ડ્સ-ઓન સ્કિલ એક્સપીરિયન્સ પહેલ…

Saransh Kanaujia

ગુજરાતના એકતા નગરમાં આર્કાઇવિસ્ટ્સની રાષ્ટ્રીય સમિતિની 48મી બેઠકનું સમાપન

નેશનલ કમિટી ઓફ આર્કાઇવિસ્ટ્સ (એનસીએ)ની બે દિવસીય 48મી બેઠક 29 નવેમ્બર 2024ના રોજ સ્ટેચ્યુ ઓફ યુનિટી, કેવડિયા (એકતા નગર), ગુજરાત ખાતે…

Saransh Kanaujia

55ನೇ ಐ ಎಫ್ ಎಫ್ ಐ ಅದ್ದೂರಿ ಸಮಾರೋಪ ಸಮಾರಂಭದೊಂದಿಗೆ ಮುಕ್ತಾಯಗೊಂಡಿತು

ಪ್ರತಿಯೊಂದು ಒಳ್ಳೆಯದಕ್ಕೂ ಅಂತ್ಯವಿದೆ, ಈ ತತ್ವದ ಪ್ರಕಾರ,  2024ರ ಭಾರತೀಯ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಚಲನಚಿತ್ರೋತ್ಸವವು (IFFI) ನವೆಂಬರ್…

Saransh Kanaujia

கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் தொடர்பான முன் நிகழ்வுகள் – ஆந்திராவில் 5 இடங்களில் நாளை நடைபெறுகிறது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் விழா 2024 தொடர்பான முன் நிகழ்வுகளை, மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ஆகியவை ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து, 2024 டிசம்பர் 01 அன்று நடத்தவுள்ளன. கலாச்சார ரீதியாக வளமான இந்த இசை நிகழ்ச்சிகள் ஆந்திரா முழுவதும் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்படும். இது இசை, பாரம்பரியம், பக்தியை ஒன்றிணைத்து பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும். கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம், தெலுங்கு கலாச்சாரத்தின் வளமான  மரபுகளைக் கொண்டாடுகிறது. இது புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், இளைய தலைமுறையினருக்கு இந்த புகழ்பெற்ற பாரம்பரியங்களைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது அதன் இரண்டாவது பதிப்பில், இந்த ஆண்டின் கிருஷ்ணவேணி சங்கீத நீரரஜனம் மைசூரு சங்கீத சுகந்தாவின் வெற்றியைத் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்திய இசையின் ஆழமான பாரம்பரியத்தை எதிரொலிக்கும் சில சிறந்த பாரம்பரிய இசைக்கலைஞர்களின் கலைத்திறனைக் காண இந்த நிகழ்வுகள் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை இது வழங்கும். ஒவ்வொரு கச்சேரியும் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் முக்கிய கோயில்கள், பாரம்பரிய தளங்களின் ஆன்மீக சூழலில் பார்வையாளர்களை இது கவரும். முன்நிகழ்வுகளின் அட்டவணை ஸ்ரீகாகுளம்: இடம்: ஸ்ரீ சூரியநாராயண சுவாமி வாரி தேவஸ்தானம், அரசவல்லி, ஸ்ரீகாகுளம் நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: மண்டா சுதா ராணி ராஜமகேந்திரவ் (ராஜமுந்திரி): இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னம் கலா கேந்திரம், சேஷய்யா மேட்டா, ராஜமகேந்திரவ்…

Saransh Kanaujia

குவஹாத்தி இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் அறிவியல் தகவல்தொடர்பு உத்திகள் குறித்து விவாதிக்க இரண்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன

குவஹாத்தி நடைபெறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் (IISF 2024-ஐஎஸ்எஸ்எஃப்) மொத்தம் 25 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அவற்றின் மூலம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் அறிவியல், தொழில்நுட்பத்தைப் பற்றி கொண்டு சேர்க்கத்  திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அவை இரண்டும் இல்லாமல் இந்த விழா மக்களை சென்றடைய முடியாது.  மீடியா கான்க்ளேவ் எனப்படும் ஊடக அரங்கம்,  விக்யானிகா ஆகியவை அந்த இரண்டு நிகழ்வுகள் ஆகும். இது இந்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலான சிஎஸ்ஐஆர்-ன் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தால் (NIScPR) ஏற்பாடு செய்துள்ளன. அறிவியல், தொழில்நுட்ப ஊடக மாநாடு 2024, விக்யானிகா ஆகியவை ஐஎஸ்எஸ்எஃப் 2024-ன் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். இது இந்தியாவில் அறிவியல் தகவல் தொடர்பு, கல்வியறிவின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 டிசம்பர் 1-2, ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள ஊடக மாநாடு, அறிவியல் தொடர்பாளர்களுக்கான சிந்தனையைத் தூண்டும் தளமாக இருக்கும்.  இதில் குழு விவாதங்கள் இடம்பெறும்.  இந்த நிகழ்வு 6 அமர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தகவல்தொடர்பில் கவனம் செலுத்தும்  மற்றொரு முக்கிய நிகழ்வான விக்யானிகா (Vigyanika) 2024 டிசம்பர் 1-2 தேதிகளில் நடைபெறுகிறது. ஊடக மாநாடு பல்வேறு ஊடக வடிவங்களைப் பற்றி விவாதிக்கும் அதே வேளையில், விக்யானிகா, பத்திரிகைகள்  போன்ற  தளங்கள் மூலம் அறிவியல் பரவலில் கவனம் செலுத்தும்.   भारत : 1885 से…

Saransh Kanaujia

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் என்று குவஹாத்தியில் இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (ஐஐஎஸ்எஃப் -2024) 10-வது பதிப்பைத் தொடங்கி வைத்து மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பாதை அறிவியல் முன்னேற்றத்துடனும் கண்டுபிடிப்புகளுக்கான அதன் உறுதிப்பாட்டுடனும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது என்று கூறினார். அறிவியல் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக் காட்டினார். சுகாதாரம் முதல் உள்கட்டமைப்பு வரை சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பமும் ஆராய்ச்சியும் பங்களிக்கும் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் இதுவரை முதல் ஐந்து மாதங்களுக்குள் எடுத்த ஆறு முக்கிய முடிவுகளை அவர் சுட்டிக்காட்டினார். இது அறிவியல் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது என அவர் தெரிவித்தார். இவற்றில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல், விண்வெளி புத்தொழில்களுக்கான ரூ. 1,000 கோடி துணிகர நிதி, வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த வானிலை இயக்கம் தொடங்குதல் ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு உயிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயோ-இ 3 முன்முயற்சி, 2 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி இதழ்களின் உலகளாவிய அணுகலை வழங்க "ஒரு நாடு, ஒரு சந்தா" கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான ய அடல் கண்டுபிடிப்பு இயக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகத் தலைமை இடமாக இந்தியாவை நிலைநிறுத்துவதே அரசின் தொலைநோக்குப் பார்வை என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். அறிவியல் - தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளை வெளிப்படுத்தவும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா பல்வேறு வகையான செயல்பாடுகளை வழங்குகிறது. சந்திரன் அருங்காட்சியக கண்காட்சி, 3டி லேசர் கண்காட்சி, மறுகற்பனை பாரத கண்காட்சி, இளம் விஞ்ஞானிகள் மாநாடு ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். பாதுகாப்பு கண்காட்சி, வடகிழக்கின் அறிவியல் வளங்களை ஆராய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரத்யேக நிகழ்வு ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன. இந்தியா முழுவதிலுமிருந்து 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.  அறிவியல்- தொழில்நுட்பத்தில், இளம் உள்ளங்களை இணைக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு ஒரு ஊக்க சக்தியாக செயல்படுகிறது. நித்தி ஆயோக்கின் டாக்டர் வி.கே.சரஸ்வத், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஏ.கே.சூட், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைச்செல்வி, உயிரித் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, அறிவியல் - தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Saransh Kanaujia

தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டம்

சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் (NCGG) தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளைச் சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதலாவது திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 2024 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 -ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்ற இரண்டு வார கால நிகழ்ச்சி முசோரி மற்றும் புது தில்லியில் நடைபெற்றது. இலங்கை, ஓமான், தான்சானியா, கென்யா, சீஷெல்ஸ், மலேசியா, கம்போடியா, மாலத்தீவு மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய அமைச்சகங்களைச் சேர்ந்த 30 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களுக்கிடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும், சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும்,  புதுமையான அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னணு-ஆளுமை, நிலையான வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் இந்த திட்டம் கவனம் செலுத்தியது, இது நிர்வாக நடைமுறைகளில்  சிறந்து விளங்குவதற்கான சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின்   உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பேசிய, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திரகுமார் பாக்டே, பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி, மின்னணு நிர்வாக நடைமுறைகளில் முன்னோடியாகத் திகழும் இந்தியாவின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றத்திற்கு வழிவகுத்த "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்" என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார். கழிவு மேலாண்மை போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் டாக்டர் பாக்டே வலியுறுத்தினார், இந்த அம்சங்களில் பயனுள்ள வழிமுறைகள் நீண்டகால அடிப்படையிலான நேர்மறையான சூழல் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அந்தந்த நாடுகளைச் சார்ந்த விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. அதில் தங்கள் நாடுகளில் உள்ள நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் மேம்பாட்டு உத்திகளை காட்சிப்படுத்தினர்.

Saransh Kanaujia

சிறந்த நிர்வாகத்திற்கான 25 – வது தேசிய இணையவழிக் கருத்தரங்குகள்

தலைசிறந்த நிர்வாக நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்வதற்கும், அதனைப் பின்பற்றுவதற்கும் உதவிடும் வகையில் சிறந்த நிர்வாகத்திற்கான 25 - வது தேசிய இணையவழிக் கருத்தரங்குகள் - 25- 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 - ம் தேதி அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர அதிகாரிகளுடன் மெய்நிகர் மாநாடுகள் / இணையவழிக் கருத்தரங்குகளை நடத்துமாறு மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமரின் விருதுகளைப் பெற்றவர்கள் இதில் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமரின் அறிவுறுத்தல்களையடுத்து, பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்க்காக பிரதமரின் விருதுகளைப்                 பெற்றவர்கள் அளிக்கும் பரிந்துரைகளைப் பரப்புவதையும், பின்பற்றுவதையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை  2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய இணையவழிக் கருத்தரங்குகளை மாதந்தோறும் நடத்தி வருகிறத. ஒவ்வொரு இணையவழிக் கருத்தரங்கிலும் சம்பந்தப்பட்டத் துறைகள், மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில நிர்வாகப் பயிற்சி மையங்கள் மற்றும் மத்திய பயிற்சி மையங்களிலிருந்து  சுமார் 1000 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த இணையவழிக் கருத்தரங்குகள் நிறுவனமயமாக்கல் / நிலைத்தன்மையின் தற்போதைய நிலையை முன்னிறுத்துவதுடன், அதன் பிரதிபலிப்பு / விரிவாக்கத்தின் நிலை குறித்த நுண்ணறிவுகளையும் வழங்குகின்றன. 25வது இணையவழிக் கருத்தரங்குகள் 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 - ம் தேதி அன்று நடைபெற்றது, இதில் "India@100 – நிர்வாக சீர்திருத்தங்கள்" என்ற தலைப்பில் சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உரை நிகழ்த்தினார்.…

Saransh Kanaujia

மத்திய அறங்காவலர் வாரியத்தின் (CBT), 236 – வது கூட்டம் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது

மத்திய அறங்காவலர் வாரியத்தின் 236-வது கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சரும், மத்திய அறங்காவலர் வாரியத்தின், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் துணைத் தலைவருமான செல்வி ஷோபா கரண்ட்லஜே, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளரும், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் மத்திய தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவருமான திருமதி சுமிதா தவ்ரா, மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் மற்றும் உறுப்பினர் செயலர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய அறங்காவலர் வாரியத்தின் கடைசி கூட்டத்திற்குப் பிறகு தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தானியங்கி முறையில் உரிமைத் தொகை மீதான கோரிக்கைகளுக்கு சேமநல நிதியில் சேமிக்கப்பட்டுள்ள தொகைகளை வழங்கும் வசதியைப் பெறுவதற்கான உச்சவரம்புத் தொகை 50,000 ரூபாயிலிருந்து  1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இது வீட்டுவசதி, திருமணம், கல்வி போன்ற செலவுகளுக்கான முன்பணத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.15 கோடி ரூபாய் அளவிலான உரிமை கோரல் மனுக்களுக்கு தானியங்கி முறையில் தீர்வு செய்யப்பட்டுள்ளன. 2024 - ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உரிமை கோரல் மனுக்களின் நிராகரிப்பு விகிதம் 14% ஆக குறைந்துள்ளதற்கு வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது. 2023-24 - ம் நிதியாண்டில், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு 1.82 லட்சம் கோடி ரூபாய்க்கான  4.45 கோடி உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.57 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் 3.83 கோடி ரூபாய்க்கான உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளன. CITES 2.01 திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின்  வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2.01 புதிய இயக்க முறைமை பயன்படுத்தப்படுகிறது, இது இழப்பீட்டுச் செயல்முறையை எளிதாக்கும். புதிய மென்பொருள் தொகுப்பு பொதுவான கணக்கு எண் (யுஏஎன்) அடிப்படையிலான கணக்கியலை சாத்தியமாக்கும், இதன் விளைவாக ஒரு உறுப்பினர், ஒரு கணக்கு முறை உருவாகும், இதன் மூலம் இழப்பீடு தீர்ப்பதில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும்.…

Saransh Kanaujia

உலக எய்ட்ஸ் தினம் 2024

​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினம், ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெருந்தொற்றுக்கு எதிரான ஒற்றுமையை நிரூபிப்பதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது. தற்போதைய சவால்களை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில், தடுப்பு, சிகிச்சை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்க அரசுகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும். மிக முக்கியமான சர்வதேச சுகாதார அனுசரிப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், விழிப்புணர்வை பரப்புவது மட்டுமல்லாமல், எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்களை நினைவுகூர்கிறது மற்றும் சுகாதார சேவைகளுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல் போன்ற மைல்கற்களைக் கொண்டாடுகிறது. ஹெச்.ஐ.வி ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக இருப்பதைப் பற்றிய புரிதலை வளர்ப்பதன் மூலம், உலக எய்ட்ஸ் தினம், அந்நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையை அடைவதற்கும் இடையிலான ஒருங்கிணைந்த தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2024 கருப்பொருள்: "உரிமையின் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!”  2024 க்கான கருப்பொருள், "உரிமைப் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!" என்பதாகும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் அத்தியாவசிய ஹெச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் முறையான சமத்துவமின்மைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொருவரும், அவர்களின் பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், ஆரோக்கியத்திற்கான தங்கள் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதில் மனித உரிமைகளின் பங்கை இந்த ஆண்டு கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது. இந்த உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையில் கவனம் செலுத்துவதன் மூலம், 2024 பிரச்சாரம், உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கும், களங்கத்தைக் குறைப்பதற்கும், பொது சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸை ஒழிப்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் முயல்கிறது. ஹெச்.ஐ.வி / எய்ட்ஸின் தற்போதைய நிலை​ ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டம் வெளியிட்ட உலகளாவிய எய்ட்ஸ் புதுப்பிப்பு 2023 இன் படி, ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதில் உலகளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளன, அங்கு ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு மற்றும் அதிகரித்த நிதி முதலீடுகள்,  எய்ட்ஸ் ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதை 2030 க்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளன. குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்தியதற்காக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில், இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெச்.ஐ.வியுடன் வாழ்ந்து வருவதை இந்தியா ஹெச்.ஐ.வி மதிப்பீடுகள் 2023 அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதிலும், நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, வயது வந்தோருக்கான ஹெச்.ஐ.வி பாதிப்பு 0.2% ஆகவும், வருடாந்திர புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் 66,400 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2010 முதல் 44% குறைவு. உலகளாவிய குறைப்பு விகிதத்தை விட இந்தியா 39% சிறப்பாக செயல்பட்டுள்ளது, இது நீடித்த தலையீடுகளின் வெற்றியை நிரூபிக்கிறது. ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு இந்தியாவின் பதில் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போர் 1985-ஆம் ஆண்டில் பல்வேறு மக்கள்தொகை குழுக்கள் மற்றும் புவியியல் இடங்களில் தொற்றைக் கண்டறியும் பணி செரோ-கண்காணிப்புடன் தொடங்கியது. ஆரம்ப கட்டம் (1985-1991) ஹெச்.ஐ.வி நோயாளிகளை அடையாளம் காணுதல், ரத்தமாற்றங்களுக்கு முன் ரத்த பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் இலக்கு விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. 1992-ஆம் ஆண்டில் தேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தடுப்பு வேகம் பெற்றது. இது நாட்டில் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸைக் கையாள்வதற்கான முறையான மற்றும் விரிவான அணுகுமுறையின் தொடக்கத்தைக் குறித்தது.…

Saransh Kanaujia