குவஹாத்தி நடைபெறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் (IISF 2024-ஐஎஸ்எஸ்எஃப்) மொத்தம் 25 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அவற்றின் மூலம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் அறிவியல், தொழில்நுட்பத்தைப் பற்றி கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அவை இரண்டும் இல்லாமல் இந்த விழா மக்களை சென்றடைய முடியாது. மீடியா கான்க்ளேவ் எனப்படும் ஊடக அரங்கம், விக்யானிகா ஆகியவை அந்த இரண்டு நிகழ்வுகள் ஆகும். இது இந்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலான சிஎஸ்ஐஆர்-ன் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தால் (NIScPR) ஏற்பாடு செய்துள்ளன.
அறிவியல், தொழில்நுட்ப ஊடக மாநாடு 2024, விக்யானிகா ஆகியவை ஐஎஸ்எஸ்எஃப் 2024-ன் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். இது இந்தியாவில் அறிவியல் தகவல் தொடர்பு, கல்வியறிவின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 டிசம்பர் 1-2, ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள ஊடக மாநாடு, அறிவியல் தொடர்பாளர்களுக்கான சிந்தனையைத் தூண்டும் தளமாக இருக்கும். இதில் குழு விவாதங்கள் இடம்பெறும். இந்த நிகழ்வு 6 அமர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் தகவல்தொடர்பில் கவனம் செலுத்தும் மற்றொரு முக்கிய நிகழ்வான விக்யானிகா (Vigyanika) 2024 டிசம்பர் 1-2 தேதிகளில் நடைபெறுகிறது. ஊடக மாநாடு பல்வேறு ஊடக வடிவங்களைப் பற்றி விவாதிக்கும் அதே வேளையில், விக்யானிகா, பத்திரிகைகள் போன்ற தளங்கள் மூலம் அறிவியல் பரவலில் கவனம் செலுத்தும்.