புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறை, புதுவை யூனியன் பிரதேசத்தில் வருமானம் ஈட்டுவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் தொடர்பாக சிறு தொழில் முனைவோர்களிடையே பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்து ICSSR உடன், தேசிய அளவிலான கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது. இந்த கருத்தரங்கின் தலைமை விருந்தினராக புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க. தரணிக்கரசு கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல துணை பொது மேலாளர் திரு. வெங்கடாசுப்பிரமணியன் எம், பாரத ஸ்டேட் வங்கி புதுச்சேரி மண்டல உதவி பொது மேலாளர் ஸ்ரீமதி எஸ். அன்புமலர், இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் புதுச்சேரி, முதன்மை மாவட்ட மேலாளர் திரு. ஏ. சதீஷ்குமார், இந்தியன் வங்கி புதுச்சேரி முதன்மை மேலாளர் திரு. பெரியதம்பி, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீமதி ஜோசபின் சகாயராணி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துப் பேசியனர். தொடக்க உரையின் போது, பேராசிரியர் க. தரணிக்கரசு, பங்கேற்பாளர்களுக்கு இந்திய அரசின் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY), ஸ்டார்ட்-அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற தொழில் முனைவோர் ஊக்கத்திற்கான திட்டங்களை மற்றும் நிதியுதவி நடவடிக்கைகளைக் குறித்துப் பேசி, சிறு தொழில் முனைவோர்கள் அதிக வாய்ப்புகளைப் பெற ஊக்கப்படுத்தினார். வங்கிகளின் வல்லுநர்கள், பிரதம மந்திரி முத்ரா யோஜனா மற்றும் அதன் புதுவை பிராந்தியத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை பற்றி விளக்கினர். சொற்பொழிவின் போது, புதுவை மண்டலத்தில் 70%கும் மேலாக இந்த திட்டத்தின் பயனாளிகளில் பெண்கள் முன்னிலையில் உள்ளனர் என கூறப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு புதிய வணிகத் திட்டங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள வணிகங்களுக்கு மறுநிதி வழங்குவதற்கும் ஆலோசனை மற்றும் இலவச கடன் வசதி வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கு ICSSR ஆராய்ச்சி திட்டமாக, புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறையின் முதன்மை ஆய்வாளரான பேராசிரியர் பி.ஜி. அருளின் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை வங்கி அதிகாரிகள், ஆசிரியர்கள், பயனாளிகள் மற்றும் மாணவர்களிடம் சமர்ப்பித்தார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக, குழு விவாதம் நடைபெற்றது, இதில் நிகழ்நேர பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். MSME கள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) தாக்கம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த நிகழ்வு பல்வேறு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒரே இடத்தில் ஒன்றிணைத்தது. நிகழ்ச்சியின் இறுதியில், சர்வதேச வணிகவியல் துறையின் ஆராய்ச்சி அறிஞரான திரு. பி. சந்தோஷ் நன்றி உரை வழங்கினார்.
Read More »பிரதமரின் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மறு கேஒய்சி-ஐ குறிப்பிட்ட காலத்திற்குள் உறுதி செய்ய அனைத்து வழிகளையும், குறிப்பாக டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்துமாறு வங்கிகளுக்கு நிதிச் சேவைகள் துறை செயலாளர் வலியுறுத்தல்
பிரதமரின் ஜன் தன் திட்ட (PMJDY) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, புதிதாக உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (மறு-கேஒய்சி) நடைமுறையை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சம்பந்தப்பட்ட அனைவருடனும் நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. PMJDY 2014-ல் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 2014 முதல் டிசம்பர் 2014 வரை சுமார் 10.5 கோடி ஜன்தன் கணக்குகள் இயக்க முறையில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும் அல்லது மறு கேஒய்சி செய்யப்பட வேண்டும். கூட்டத்தின் போது, ஏடிஎம், மொபைல் பேங்கிங், இணைய வங்கி மற்றும் பிற டிஜிட்டல் சேனல்கள் …
Read More »