शुक्रवार, नवंबर 22 2024 | 06:12:09 PM
Breaking News
Home / Tag Archives: Biotechnology Research

Tag Archives: Biotechnology Research

உயிரி தொழில்நுட்பத் துறையின் அமைப்பான உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சிலின் (ப்ரிக்) முதல் நிறுவக தின விழா இன்று தொடங்கியது

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் 14 தன்னாட்சி நிறுவனங்களை  ஒருங்கிணைத்து 2023 நவம்பர் 10 அன்று உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சிலை (ப்ரிக்) உருவாக்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முன்மாதிரியான தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், உயிரி தொழில்நுட்பத் துறையில் சிறப்பான மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதில் ப்ரிக் முக்கியப் பங்கு வகிக்கிறது. ப்ரிக் அமைப்பின் முதல் நிறுவக நாள் விழாதேசிய நோயெதிர்ப்பு நிறுவனத்தில் இன்று  (2024 நவம்பர் 9) தொடங்கியது. இந்தியாவின் ஜி20 ஷெர்பா திரு அமிதாப் காந்த் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறுவக நாள் விரிவுரையையும் வழங்கினார். பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் தலைவர் டாக்டர் ஆனந்த் தேஷ்பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளரும், பிரிக் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜேஷ் எஸ்.கோகலே, ப்ரிக் அமைப்பின் இயக்குநர்கள், உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் ப்ரிக் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு ப்ரிக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 2024, நவம்பர் 10  அன்று ப்ரிக் நிறுவனங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் பணிபுரிவோரின்  குடும்பங்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், உடல் தகுதி, குழுப்பணி மற்றும் பிணைப்பை மேம்படுத்துவதற்கும் கிரிக்கெட், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், செஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி, ஒன்றுகூடல் ஆகியவறிற்குத்   திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களிலும் உள்ள விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் ஒன்றிணைப்பதில் பிரிக் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உயிரி தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதில் பாராட்டத்தக்க விளைவுகளை இது எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கோகலே, “ஆராய்ச்சியின் ஒத்துழைப்பைக் கொண்டுவருதல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் சக்தியை மேம்படுத்துதல் மற்றும் மாற்றுதல் ஆகிய பின்னணியில் மதிப்பு மற்றும் தாக்கத்தை மேம்படுத்துவதில் ப்ரிக் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர் திரு. அமிதாப் காந்த் இத்துறையின் முயற்சிகளைப் பாராட்டியதோடு, “ப்ரிக் நாட்டிற்கு ஒரு மைல்கல் நிறுவனமாக இருக்கும்” என்றும்  குறிப்பிட்டார்.

Read More »