सोमवार, दिसंबर 23 2024 | 09:44:13 AM
Breaking News
Home / Tag Archives: Special Mission 4.0

Tag Archives: Special Mission 4.0

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட சிறப்பு இயக்கம்  4.0-ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது. இது முக்கிய அளவுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் அதே வேளையில், பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது, தூய்மை இயக்கங்களை நடத்துவது, பதிவு மேலாண்மை போன்றவற்றை நோக்கமாகக் கொண்டது. பொதுமக்கள் குறைகள் மற்றும்  மேல்முறையீடுகளுக்குத் தீர்வுகாண்பது, நிலுவையிலுள்ள கோப்புகளைக் குறைப்பது ஆகியவற்றில்  4.0  நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 100% எட்டியுள்ளது. சிறப்பு இயக்கம்  4.0-ன் போது, 823 பொதுமக்கள் குறை தீர்ப்பு மனுக்களும், 155 மேல்முறையீட்டு மனுக்களும் முடிக்கப்பட்டு இலக்கு முழுமையாக எட்டப்பட்டுள்ளது. கோப்பு நிர்வாகத்தை சீராக்க, 1525 மின்-கோப்புகள் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. அவற்றில்  650 மின்-கோப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு 124 மின்-கோப்புகள் மூடப்பட்டன. குறைகளைப் போக்குவதில்  தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சிறப்பு இயக்கம் 4.0-ன் போது, பொதுமக்கள் குறைகளை போக்குவதற்காக அதிகாரிகள் குழுக்களை அனுப்பி  மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடனான தொடர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இது குறித்து பல  மனுதாரர்கள் திருப்தி தெரிவித்தனர். பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் 15 அக்டோபர் 2024 அன்று பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததன் மூலம் சிறப்பு இயக்கம் 4.0-ன் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், “வாழ்க்கையை எளிதாக்குதல்: அடிமட்டத்தில் சேவை வழங்கலை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் பஞ்சாயத்து மாநாடு ஐதராபாதில் நடைபெற்றது.  இது குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுகைக்கு அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது. தூய்மை இருவார விழா (2024, அக்டோபர் 16 – 31 ) தேசிய கற்றல் வாரம் (2024, அக்டோபர் 19 – 25) ஆகியவையும் நடத்தப்பட்டன. இந்த இயக்கத்தின் போது, அமைச்சகத்தின் மூன்று அலுவலக வளாகங்களான கிருஷி பவன், ஜீவன் பாரதி கட்டிடம்,  ஜீவன் பிரகாஷ் கட்டிடம் ஆகியவற்றில் விரிவான தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன.

Read More »

विशेष अभियान 4.0 अंतर्गत समोर ठेवलेली उद्दिष्टे पंचायती राज मंत्रायलाद्वारा यशस्वीपणे साध्य

लोकांच्या तक्रारींचे निराकरण करण्याच्या उद्देशाने पंचायती राज मंत्रालयाच्या वतीने 2 ते 31 ऑक्टोबर 2024 या कालावधीत राबवल्या गेलेल्या विशेष अभियान 4.0 ची यशस्वी सांगता झाली. याअंतर्गत निकष म्हणून आखली गेलेली स्वच्छता मोहीमांचे आयोजन, दस्तऐवजांच्या नोंदीकरणाचे व्यवस्थापन या आणि अशा प्रकारची प्रमुख उद्दिष्टेही यशस्वीरित्या पूर्ण केली गेली.  प्रलंबित प्रकरणे निकाली करण्यासाठीचे विशेष अभियान (Special Campaign for Disposal of Pending Matters …

Read More »