Monday, April 20 2026 | 06:01:47 PM
Breaking News

முன்னேறும் மாவட்டங்களில் 4ஜி மொபைல் சேவைகள்

Connect us on:

ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள முன்னேறும் ஆர்வ மாவட்டங்களில் சேவை இல்லாத 7,287 கிராமங்களில் 4,779 செல்பேசி கோபுரங்களை நிறுவுவதன் மூலம் 4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அத்தகைய கிராமங்கள் அனைத்துக்கும் மொபைல்  சேவையை படிப்படியாக வழங்குவதற்கு இத்திட்டம் வகைசெய்கிறது. 31.10.2024 நிலவரப்படி, 3,352 கிராமங்களில் சேவை கிடைக்கும் வகையில் 2,177 மொபைல் கோபுரங்கள் அமைக்ககப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் மொபைல் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்ட கிராமங்களின் பட்டியல் https://dot.gov.in/circular-and-notifications/3294 என்ற இணையதள இணைப்பில் உள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

2026 சட்டப்பேரவைத் தேர்தல்: வன்முறையற்ற வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, …