புதுதில்லியில் இன்று (16.11.2025) நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான மனோரமா நியூஸ் நியூஸ்மேக்கர் விருது வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, மத்திய சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சரும் புகழ்பெற்ற திரைப்பட நடிகருமான திரு சுரேஷ் கோபிக்கு இந்த மதிப்புமிக்க விருதை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் தமது உரையில், சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் உள்ள தனித்துவமான சவால்களை எடுத்துரைத்தார். இந்த இரு துறைகளிலுமே திரு சுரேஷ் கோபி பெற்றுள்ள சிறந்த வெற்றியை அவர் பாராட்டினார். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டில் நேர்மறையான தகவல்களை முன்னிலைப்படுத்துவதில் ஊடகங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். மேலும் குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பதில் பத்திரிகைகளின் பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில், உண்மையிலிருந்து போலிச் செய்திகளைப் பிரிப்பது மிகவும் கடினமாகி வருவதாக அவர் மேலும் கூறினார். நமது ஜனநாயகத்தில் பத்திரிகைகளும் ஊடகங்களும் மிகவும் பொறுப்பான பங்கை வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தூய்மையான இதயத்துடன் உண்மையைப் பேசுபவர்கள், வாழ்நாள் முழுவதும் தவம் செய்பவர்களை விடவும், தர்மங்களைச் செய்பவர்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று கூறிய திருவள்ளுவரின் திருக்குறள் கருத்துகளை குடியரசு துணைத் தலைவர் நினைவு கூர்ந்தார். திருவள்ளுவரின் காலத்தால் அழியாத இந்த தத்துவத்தைப் பின்பற்றுமாறு பத்திரிகைகளை அவர் கேட்டுக் கொண்டார். மனோரமா குழுமத்தின் நீடித்த பாரம்பரியத்தை எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், உண்மை, மொழிப் பற்று, கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், மலையாள மொழிக்கான அதன் பங்களிப்புகளையும் பாராட்டினார்.
Read More »குஜராத்தின் சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்; மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதைப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்
சூரத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (15.11.2025) பார்வையிட்டு, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதைப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தி வரும் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார். பணிகளின் வேகம், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி இலக்குகளை அடைவது உட்பட திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். திட்டப் பணிகள் எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக …
Read More »எஸ்விசிசி, கோனயூர் அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வதேச ஆயுர்வேத மாநாடு சாவ் பாலோவில் நடைபெற்றது பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா – பிரேசில் இடையேயான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டியது
மூன்றாவது சர்வதேச ஆயுர்வேத மாநாடு பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றது. அங்குள்ள சுவாமி விவேகானந்தா கலாச்சார மையமும் (எஸ்விசிசி), பிரேசிலில் உள்ள ஆயுர்வேத அமைப்பான கோனயூர் அமைப்பும் இணைந்து 2025 நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தின. இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்வு, பிரேசிலில் ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றப்படுவதன் 40 ஆண்டுகள் நிறைவை நினைவுகூர்வதாக அமைந்தது. …
Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி படிவங்கள் விநியோகம்
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,00,54,300 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 93.67 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,583 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு இன்று (16.11.2025) மாலை 3 மணி வரை 6,00,54,300 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, …
Read More »இந்தியா – யூரேசிய பொருளாதார யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து வர்த்தகத் துறைச் செயலாளர் ஆய்வு செய்தார்
மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா-யூரேசிய பொருளாதார யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் ஆய்வு செய்தார். யூரேசிய பொருளாதார ஆணையத்தின் வர்த்தகப் பொறுப்புகளுக்கான அமைச்சர் திரு ஆண்ட்ரி ஸ்லெப்னேவ், ரஷ்ய தொழில் – வர்த்தகத் துறை துணை அமைச்சர் திரு மிகைல் யுரின் ஆகியோரையும் அவர் சந்தித்தார். மேலும் இந்திய – ரஷ்ய தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இம்மாதம் 22-ம் தேதி பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை மறுநாள் (22.08.2025) பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பீகார் மாநிலம் கயாவில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் இரண்டு ரயில் சேவைகளையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதனையடுத்து, கங்கை நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ள அவுண்டா – சிமாரியா மேம்பாலத்தை பயன்பாட்டிற்காக …
Read More »பொதுமக்களுக்கு மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை அணுகக்கூடிய வகையில் மலிவுக் கட்டணத்திலும் வழங்க மத்திய அரசு திட்டம்
அணுசக்தித் துறையின் கீழ் உள்ள டாடா நினைவு மருத்துவமனை (டிஎம்சி), விரிவான சான்றுகள் அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சையை வழங்கி வருகிறது. மும்பை, வாரணாசி, விசாகப்பட்டினம், சங்ரூர், முல்லன்பூர், குவஹாத்தி மற்றும் புவனேஷ்வர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்தியாவின் 7 மாநிலங்களில் டிஎம்சி 11 மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. 11 மருத்துவமனைகளில், 8 செயல்பாட்டுக்கு வந்துள்ளன, 3 மருத்துவமனைகள் கட்டுமானத்தில் உள்ளன. டாடா நினைவு மையம் (டிஎம்சி) நாட்டின் முதன்மையான புற்றுநோய் மையமாக …
Read More »மங்களூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நெட்வொர்க் தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பிடுகிறது
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), மங்களூர், கர்நாடகா உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான அதன் தனிப்பட்ட தரவு தர முடிவுகளை வெளியிட்டது. இது ஜூலை 2025 மாதத்தில் விரிவான நகரம்/நெடுஞ்சாலை வழித்தடங்களை உள்ளடக்கியது. பெங்களூருவில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட தரவுத் தர முடிவுகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன முக்கிய வழித்தடங்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள் மற்றும் அதிவேக தாழ்வாரங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டு …
Read More »குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவினருக்கான மத்திய அரசின் நலத்திட்டங்கள்
மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சந்தீப் குமார் பதக்கின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்தார். 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய பெருந்திட்டத்தை நவம்பர் 15, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாதுகாப்பான …
Read More »பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டத்தின் வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு மாதிரி மற்றும் பலதுறை செயல்பாடுகள்
திருமதி ரமிலாபென் பெச்சர்பாய் பாராவின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள தர்தி ஆபா ஜன்சாதிய கிராம் உத்கர்ஷ் திட்டம் (DAJGUA) பழங்குடியினர் பகுதிகளில் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை இயக்குவதற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்று தெரிவித்தார். இந்த அபியான் 17 துறை அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் 25 …
Read More »
Matribhumi Samachar Tamil