Sunday, September 06 2026 | 05:41:34 AM
Breaking News

Miscellaneous

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் 4 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று உலக அளவில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டும் வகையில், புதுதில்லி லோதி சாலையில் உள்ள பிருத்வி பவனில் சிறப்புப் பாராட்டு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. …

Read More »

பணியிடப் பாதுகாப்பு, உள்ளடக்கம் மற்றும் நல்வாழ்வில் சிறந்து விளங்குவோரைக் கௌரவிக்கும் ‘CecureUs விருதுகள் 2025–2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது

சென்னை, தமிழ்நாடு | ஏப்ரல் 2, 2026 பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் விதிகளைப் பின்பற்றும் பணியிடங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் CecureUs நிறுவனம், தனது 5-வது பதிப்பான ‘CecureUs விருதுகள் 2025–2026′ நிகழ்வை ஏப்ரல் 2 ,2026 அன்று சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன்  விடுதியில் மிகச் சிறப்பாக நடத்தியது. பணியிடக் கலாச்சாரத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை முன்னெடுத்து வரும் தொழில்துறைத் தலைவர்கள், மனிதவள மேம்பாட்டு  வல்லுநர்கள் மற்றும் மாற்றத்தை …

Read More »

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தன்னம்பிக்கை, ஒருங்கிணைந்த உறுதிப்பாடு மற்றும் நாட்டின் பெருமையை நினைவில் கொள்ளும் வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் பல்வேறு துறைகளில் முன்னணி நாடாகவும், பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியாவின் தெளிவான தொலைநோக்குப் …

Read More »

தேசிய வீரச் சிறார் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமரின் தேசிய வீரச் சிறார் விருதுகளை புதுதில்லியில் இன்று (26.12.2025) வழங்கினார். சமூக சேவை, கலை, கலாச்சாரம், வீர தீர சாகசங்கள் உள்ளிட்டவற்றில் சாதனை புரிந்த சிறார்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த 7 வயது சிறுமி வாகாலட்சுமி, பிரக்னிக்கா ஆபத்தான சூழலில் பிறரது உயிரைக் காப்பாற்றிய அஜய் ராஜ் மற்றும் முகமது சிதன், ஆபரேஷன் சிந்தூர் கால கட்டத்தில் …

Read More »

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மாளவியாவின் கல்வி குறித்த தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகத் திகழ்கிறது: குடியரசு துணைத்தலைவர்

மாமனிதர் பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகளின் இறுதித் தொடரான “மகாமானா வங்மய்” நூலை குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் இன்று வெளியிட்டார். பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாமனிதர் மாளவியா ஒரு தலைசிறந்த தேசபக்தர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, வழக்கறிஞர், அரசியல்வாதி, கல்வியாளர் மற்றும் பண்டைய இந்தியப் பண்பாட்டின் புகழ்பெற்ற அறிஞர் என்று வர்ணித்தார். இந்தியாவின் எதிர்காலம் அதன் கடந்த …

Read More »

புலிகள் மற்றும் யானை பாதுகாப்பு தொடர்பான கூட்டங்கள் – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்து புலிகள் மற்றும் யானைகள் பாதுகாப்புக்கான உத்திகளை ஆய்வு செய்தார்

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 28-வது கூட்டமும், யானைகள் திட்டத்தின் 22-வது வழிகாட்டுதல் குழு கூட்டமும் இன்று (டிசம்பர் 21, 2025) மேற்கு வங்கத்தின் சுந்தரவன புலிகள் காப்பகத்தில் நடைபெற்றன. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் இக்கூட்டங்கள் நடைபெற்றன. புலிகளும் யானைகளும் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள், முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். புலிகள் …

Read More »

குடியரசுத் தலைவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரதத்தின் காலத்தால் அழியாத ஞானம் என்ற மாநாட்டில் உரையாற்றினார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரம்ம குமாரிகள் சாந்தி சரோவர் அமைப்பின் 21-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இன்று (டிசம்பர் 20, 2025) ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பாரதத்தின் காலத்தால் அழியாத ஞானம்: அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதைகள்’ என்ற மாநாட்டில் உரையாற்றினார். அதில் பேசிய குடியரசுத் தலைவர், உலக சமூகம் எண்ணற்ற மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றார். இந்த மாற்றங்களுடன், மனநலப் பிரச்சினைகள், சமூக மோதல்கள், சுற்றுச்சூழல் சமநிலையின்மை மற்றும் மனித விழுமியங்களின் சிதைவு போன்ற பல கடுமையான சவால்களையும் நாம் எதிர்கொள்கிறோம். இந்தச் சூழ்நிலையில், மாநாட்டின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. பொருள்சார் வளர்ச்சி மட்டுமே மகிழ்ச்சியையும் அமைதியையும் தராது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அக நிலைத்தன்மை, உணர்வுகள் மற்றும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவை அவசியமானவை என்றார் அவர். இந்தியாவின் பழங்கால முனிவர் பாரம்பரியம் நமக்கு உண்மை, அகிம்சை மற்றும் அமைதியான சகவாழ்வு என்ற செய்தியை வழங்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் …

Read More »

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் ஏஇபிசி ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்றினார்

குடியரசுத் துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், இன்று புதுதில்லியில் நடைபெற்ற ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (ஏஇபிசி) ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, இந்தியாவின் ஆடை ஏற்றுமதித் துறைக்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், ஆடை மற்றும் ஜவுளித் துறை இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியத் தூணாகத் திகழ்கிறது என்றும், இது 45 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதோடு, 100 மில்லியனுக்கு மேற்பட்டோரின் வாழ்வாதாரங்களுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என்றும் கூறினார். இந்தத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  சுமார் 2 சதவீதமும், உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு கூட்டலில் கிட்டத்தட்ட 11 சதவீதமும் பங்களிக்கிறது என்று அவர் …

Read More »

ஐதராபாத்தில் அரசு பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களின் தேசிய மாநாட்டை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்

தெலங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசு பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களுக்கான தேசிய மாநாட்டை,  ஐதராபாத்தில் இன்று (டிசம்பர் 19, 2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய குடியரசுத்தலைவர், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், அரசியலமைப்பின் ஒரு முழுப் பகுதியையும் பணியாளர் தேர்வு ஆணையங்களுக்காகவே அர்ப்பணித்துள்ளனர் என்று கூறினார். இது மத்திய மற்றும் மாநிலங்களுக்கான பணியாளர் தேர்வாணையங்களின்  பங்கு மற்றும் செயல்பாடுகளுக்கு அவர்கள் அளித்த …

Read More »

பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் டிசம்பர் 20-21 தேதிகளில் அசாமில் பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 20 பிற்பகல் 3 மணி அளவில், குவஹாத்தி செல்லும் பிரதமர், லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டடத்தைப் பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார். புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையக் கட்டடம் சுமார் 1.4 லட்சம் சதுரமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு 1.3 கோடி பயணிகளை கையாளும் …

Read More »