அணுசக்தித் துறையின் கீழ் உள்ள டாடா நினைவு மருத்துவமனை (டிஎம்சி), விரிவான சான்றுகள் அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சையை வழங்கி வருகிறது. மும்பை, வாரணாசி, விசாகப்பட்டினம், சங்ரூர், முல்லன்பூர், குவஹாத்தி மற்றும் புவனேஷ்வர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்தியாவின் 7 மாநிலங்களில் டிஎம்சி 11 மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. 11 மருத்துவமனைகளில், 8 செயல்பாட்டுக்கு வந்துள்ளன, 3 மருத்துவமனைகள் கட்டுமானத்தில் உள்ளன. டாடா நினைவு மையம் (டிஎம்சி) நாட்டின் முதன்மையான புற்றுநோய் மையமாக …
Read More »குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவினருக்கான மத்திய அரசின் நலத்திட்டங்கள்
மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சந்தீப் குமார் பதக்கின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்தார். 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய பெருந்திட்டத்தை நவம்பர் 15, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாதுகாப்பான …
Read More »பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டத்தின் வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு மாதிரி மற்றும் பலதுறை செயல்பாடுகள்
திருமதி ரமிலாபென் பெச்சர்பாய் பாராவின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள தர்தி ஆபா ஜன்சாதிய கிராம் உத்கர்ஷ் திட்டம் (DAJGUA) பழங்குடியினர் பகுதிகளில் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை இயக்குவதற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்று தெரிவித்தார். இந்த அபியான் 17 துறை அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் 25 …
Read More »தேர்தல் நடைமுறைகளை சீரமைத்தல்: பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 334 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்
நாட்டில் உள்ள தேசிய/மாநில அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 195-ன் பிரிவு 29ஏ-வின் விதிகளின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன தற்போது, 6 தேசியக் கட்சிகள், 67 மாநிலக் கட்சிகள், 2854 பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் …
Read More »சஞ்சார் சாத்தி மொபைல் செயலி 21 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது – 6 மாதங்களில் 50 லட்சம் பேர் பதிவிறக்கம்
தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் சாத்தி செயலி, தொலைத்தொடர்பு பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த மொபைல் செயலி ஆறு மாதங்களுக்குள் 50 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. இந்தியாவின் பரந்த மொழியியல், பிராந்திய பன்முகத்தன்மைகளை அங்கீகரித்து, ஆங்கிலம், இந்தி மற்றும் 21 பிராந்திய மொழிகளில் இந்த செயலியின் பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகளையும், ஏமாற்றுத் தகவல் அடங்கிய செய்திகளைப் பற்றி புகாரளிப்பது இதன் மூலம் எளிதாகி உள்ளது. 5.35 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கைபேசிகளை மீட்கவும், மக்களின் புகார்களின் அடிப்படையில் 1 கோடிக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகளைத் துண்டிக்கவும், சக்ஷு அம்சத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட 29 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் எண்களை செயலிழக்கச் செய்யவும் இந்த சஞ்சார் சாத்தி வழிவகுத்துள்ளது. சஞ்சார் சாத்தி தளத்தை 16.7 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர். இது மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தளத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தொலைத்தொடர்புத் துறை, நிதி மோசடி அபாயம் குறித்த தகவல் வழங்கும் நடவடிக்கையையும் செயல்படுத்தியுள்ளது. இது நிதி மோசடி அபாயத்துடனான அவற்றின் தொடர்பின் அடிப்படையில் மொபைல் எண்களை மதிப்பிட்டு வகைப்படுத்துகிறது. இந்தக் கருவி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், யுபிஐ சேவை வழங்குநர்கள் போன்றோர், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது. 2023 மே 16, 2023 அன்று தொடங்கப்பட்ட இணையதளத்தின் வெற்றியை அடுத்து 2025 ஜனவரி 17 அன்று சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொலைத்தொடர்பு பாதுகாப்பு சேவைகளை நேரடியாகவும் வசதியாகவும் அணுக அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் இந்த செயலி, பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு அடையாளத்தைப் பாதுகாக்கவும், மோசடிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் அளிக்கிறது. …
Read More »பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
பாதுகாப்பு உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மைல்கல் முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.27 லட்சம் கோடியை விட 18% வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்த மதிப்பு ரூ.79,071 கோடியாக இருந்தது என்பதைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது 90% அதிரடியான வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த மைல்கல்லை அடைவதில் பாதுகாப்பு உற்பத்தித் துறை மற்றும் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களான பாதுகாப்பு …
Read More »குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சட்டம், 1952-ன் பிரிவு 4-ன் துணைப் பிரிவுகள் (4) மற்றும் (1) இன் கீழ், தேர்தல் ஆணையம் 07.08.2025 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2025 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல், அதன் பரிசீலனை மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் மற்றும் வாக்களிப்பு தேதி (தேவைப்பட்டால்) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. இந்த அறிவிக்கை இன்று இந்திய அரசிதழில் …
Read More »நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் செயல்பாடுகள்
நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (என்.சி.ஜி.ஜி) முக்கிய குறிக்கோள்களும் செயல்பாடுகளும் கீழே தரப்படுகின்றன: 1. ஆட்சி மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான சிந்தனை அமைப்பாகச் செயல்படுதல் 2. நல்லாட்சியை மேம்படுத்தக்கூடிய சிறந்த நடைமுறைகள், முன்முயற்சிகள், முறையியல்கள் ஆகியவற்றின் தேசிய களஞ்சியமாகச் செயல்படுதல் 3. தேசிய மற்றும் மாநில அளவில் நல்லாட்சி மற்றும் பொது நிர்வாகம், பொதுமக்கள் கொள்கைகள், நெறிமுறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி நிர்வாகம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் ஆராய்ச்சி மற்றும் திறன் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் 4. ஆளுகை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோசனை …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடியின் தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025, ஒரு மாதத்தில் அதிக பதிவுகளுக்கான கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முதன்மை முயற்சியான தேர்வு குறித்த கலந்துரையாடல், 2018 முதல் கல்வி அமைச்சகத்தால் மை கவ் உடன் இணைந்து வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. “ஒரு குடிமக்கள் ஈடுபாட்டு தளத்தில் ஒரு மாதத்தில் அதிக மக்கள் பதிவு செய்துள்ளனர்” என்ற கின்னஸ் உலக சாதனையை இந்த நிகழ்ச்சி படைத்துள்ளது. மை கவ் தளத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் 8வது பதிப்பின் போது பெறப்பட்ட 3.53 கோடி …
Read More »உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, புனிதமான சாவான் மாதத்தில் வாரணாசியைச் சேர்ந்த குடும்பங்களைச் சந்தித்தது குறித்த மன நிறைவை வெளிப்படுத்தினார். வாரணாசி மக்களுடனான தமது ஆழமான உணர்ச்சிபூர்வமான தொடர்பை எடுத்துரைத்த திரு மோடி, நகரத்தின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். புனிதமான சாவான் மாதத்தில் காணொலி மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைவதில் திரு …
Read More »
Matribhumi Samachar Tamil