2024 ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“நமது ஹாக்கி சாம்பியன்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!
ஜூனியர் ஆசிய கோப்பை 2024 பட்டத்தை நமது ஆடவர் ஜூனியர் ஹாக்கி அணி வென்றது, இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். வீரர்களின் நிகரற்ற திறமை, அசைக்க முடியாத மன உறுதி மற்றும் நம்பமுடியாத குழுப்பணி ஆகியவை இந்த வெற்றியை விளையாட்டு வரலாற்றில் பொறித்துள்ளன.
இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”