பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958, பிரிவு 4 எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடத்தையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க வழிவகை செய்கிறது. தொல்லியல், வரலாற்று அல்லது கட்டடக்கலை முக்கியத்துவத்தைப் பொறுத்து, எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடம் மற்றும் எச்சங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அரசு அறிவிக்க இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
இந்திய அரசிதழில் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகளை வரவேற்கும் இரண்டு மாத அறிவிப்பு வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பெறப்பட்ட ஆட்சேபனைகளை பரிசீலித்த பிறகு, மத்திய அரசு பழங்கால நினைவுச்சின்னத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கை வெளியிடலாம்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள கீழ்க்காணும் தொல்லியல் இடங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிப்பதற்கான அறிவிக்கை இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
(i) ஹிசார் மாவட்டம் (ஹரியானா) ராக்கிகர்ஹியில் உள்ள பண்டைய மேடு எண் VI
(ii) ஹிசார் மாவட்டம் (ஹரியானா) ராக்கிகர்ஹியில் உள்ள பண்டைய மேடு எண் VII,
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.