Wednesday, September 30 2026 | 08:52:52 PM
Breaking News

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

Connect us on:

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்காக டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு, நமது அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு  நாம் தலை வணங்குவோம்.

சமத்துவம் மற்றும் மனித மாண்புக்கான டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. இன்று, அவரது பங்களிப்புகளை நாம் நினைவுகூரும் அதே வேளையில், அவரது தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமிக்கு’ நான் சென்றபோது எடுத்த ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

About Matribhumi Samachar

Check Also

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பாரம்பரிய அறிவும் மக்கள் பங்களிப்பும் அவசியம்: தேசிய பசுமைத் தீர்ப்பாய மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்!

புதுதில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் (NGT) ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் ஆகியவற்றின் எதிர்காலம்’ (Future of Environment …