உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்தை 2021-22-ம் ஆண்டு முதல் 2026-27-ம் ஆண்டு வரை செயல்படுத்த ரூ.10,900 கோடி தொகைக்கு பட்ஜெட்டில் 2021 மார்ச் 31 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 171 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்து பயிற்சி நடத்தப்பட்டது.
உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளில் உள்நாட்டில் விளையும் வேளாண் விளைபொருட்கள் (சேர்க்கைகள், சுவைகள் மற்றும் சமையல் எண்ணெய்கள் தவிர்த்து) பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதன் மூலம், உள்ளூர் விவசாயிகளின் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் அதே நேரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்கும் பயனளிக்கிறது. மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுக்கான மூலப்பொருட்களின் உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது கூடுதல் பண்ணை அல்லாத வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கிறது.