இந்திய திவால் நடைமுறை வாரியம் (IBBI), இன்சோல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து “திவால் தீர்மானம்: பரிணாமம், உலகளாவிய கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தியது. இந்த நிகழ்வில் இத்துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்று திவால் தீர்வு குறித்த நுண்ணறிவு, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு. எம். ராஜேஸ்வர் ராவ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2016 முதல் திவால் சட்டத்தின் (ஐபிசி) மாற்றகரமான பயணத்தை அவர் எடுத்துரைத்தார், வங்கி சொத்துகளின் தரத்தை மேம்படுத்துவதில் அதன் முக்கிய பங்கை அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டம் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. மேலும் ஐபிசி வழக்குகளின் விரிவான ஆய்வுகள் எதிர்கால கடன் உத்திகளுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கக்கூடும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
ஐபிபிஐ-யின் தலைவர் திரு ரவி மிட்டல், இன்சோல் இந்தியாவின் தலைவர் திரு தினகர் வெங்கடசுப்ரமணியன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.