Thursday, December 19 2024 | 09:16:31 AM
Breaking News

இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் சார்பாக தளபதிகள் மாநாடு-2024

Connect us on:

இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் சார்ப்பாக தளபதிகள் மாநாடு 2024, டிசம்பர் 06 & 07  ஆகிய இரண்டு தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது.  விமானப் படைத் தலைவர்  ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரை இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் ஏர் ஆஃபிசர் கமாண்டிங் இன் சீஃப் ஏர் மார்ஷல் பி.எம்.சின்ஹா வரவேற்றார்.

மாநாட்டின் போது, மேற்கு பிரிவின் தலைவர்களிடையே உரையாற்றிய விமானப் படைத் தலைவர், மேலும் பல களப் போரில் போராடுவதற்கும் வெல்வதற்கும் திறனை உறுதி செய்வதற்கான பயிற்சியைத் தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  “இந்திய விமானப்படை – வலிமை, திறமை, தன்னம்பிக்கை” என்ற இந்த ஆண்டுக்கான கருப்பொருளை வலியுறுத்திய அவர், இந்திய விமானப்படையை இன்னும் பெரிய சாதனைகளுக்கு கொண்டு செல்ல அனைத்து தளபதிகளின் கூட்டு திறன், திறமை  மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சிறந்த பயிற்சி மற்றும் திட்டமிடல் மூலம் செயல்பாட்டு திறனை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கவனம் செலுத்தும் முன்னேற்றத்தை அடைய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கான அழைப்புகளுக்கு முன்னுரிமை அளித்தல்; எப்போதும் தயாராக இருக்கும் வலிமையான போர் படையை உறுதி செய்வதற்காக உயர் செயல்பாட்டு சிறப்பைப் பராமரித்தல் மற்றும் ‘பணி, ஒருமைப்பாடு மற்றும் சிறப்பு’ ஆகியவற்றின் முக்கிய மதிப்புகளை எப்போதும் முதன்மையாகக் கொண்டிருத்தல் முதலியவற்றிற்காக மேற்குப் பிரிவின் தலைமையை ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், பாராட்டினார்.

About Matribhumi Samachar

Check Also

மாநிலங்களவை உறுப்பினர் திரு சரத் பவார் விவசாயிகள் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தார்

மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத் பவார், விவசாயிகள் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக …